முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 1

அம்மா

அமுதசுரபியின்
அர்த்தம் தெரிய வேண்டுமா ?
படைத்தவனிடம் கேட்காமல்
வேலையில்லா பட்டதாரியிடம் கேள்
அம்மா என்பான் !!!

ஊடக தர்மம்

உயிருக்கு போராடுபவனை கண்டு
கேமராவை எடுக்கும்
ஊடக தர்மம்
மொபைல் போனை
எடுக்க முன்வருவதில்லை
ஆம்புலன்ஸை அழைத்திட...

அம்மா

கடவுளைப்பற்றிய
எண்ணங்கள் கூட
எழவில்லை !!!

என்னருகில் நீங்கள்
இருக்கும்வரையில் .
அம்மா .

விவசாயி

விளைய வைப்பவன்
விவசாயி
விலையை வைப்பவன்
வியாபாரி

அயல்தேசம்

அழகு பார்ப்பதற்கு
சில நாள்
அடகு கடையில்
பல நாள்

அயல் தேசத்தில் ...
புன்னகையை விற்று
நாங்கள் வாங்கிடும்
பொன் 'நகை !!!
ஆடம்பரத்திற்காக -அல்ல
வாழ்வாதாரத்திற்காக !!!

மழலை

மலரிதழ் பாதங்கள்
மண்தொடும் முன்னே - என்
முடிசூழ் நெஞ்சமுனக்கு
முதல்படியானதடா ...

மடக்கிய விரல்கொண்டு
மட்டி வாய்க்குள் வைத்து
நின் பொக்கைவாய் சிரிப்பினில்
என் கவலை மறந்தேனடா...

ஒருமொழி தவிர
மறுமொழி தெரியாதவளை
உன்மொழி கற்கவைத்தது
அதிசயமடா ...

ஆணென்று உயர்த்திய
என்னை - அப்பா என்றும்
பெண்னென்று உயர்த்திய
உன்னை - அம்மா என்றும்
அழைத்திடும் நாளுக்காய்
காத்திருக்கிறோமடா ...

என் அன்பு மகனே.

Comments

அனைத்தையும் படித்தேன். ஊடக‌ தர்மம் & விவசாயி அருமை. அவற்றை விட‌ அருமை அயல்தேசம்.

‍- இமா க்றிஸ்

மிக்க மகிழ்ச்சி ...
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் !

என்றும் அன்புடன்
முத்தமிழன்

அனைத்து கவிதையும் சூப்பர்.. அறுசுவையில் நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு பதிவு. அட்மின் சூப்பர்

Be simple be sample

வாழ்த்திய உங்களுக்கும் ,
வாய்ப்பளித்த அறுசுவைக்கும்,
என் மனமார்ந்த நன்றிகள் !!!
மிக்க மகிழ்ச்சி

என்றும் அன்புடன்
முத்தமிழன்