முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 2

நேசம்

விளக்கினை அணைத்தாலும்
அதன் பிம்பம் விழிக்குள் இருக்கும்!!!
விலகி சென்றாலும்
உன்னுருவம் என்னுள் மறைய
இன்னொரு ஜென்மம் எடுக்கும்!!!

புன்னகை

மொழியை தாண்டி
மனிதனை நேசிக்க
வைப்பது - புன்னகை தான்

மனம்

மனம் விரும்புவதை எல்லாம்
பணம் கொண்டு சாதிக்கலாம்!!!
ஆனால்
பிறர் மனதை வாங்கிட
அவர் மனம் வைத்தால் அன்றி
பணம் கொண்டு சாதித்திட இயலாது!!!

வளம்

வாழ்க்கையின்
வளமே - உங்கள்
வார்த்தைகளில் உள்ளது

விவசாயிகள்

பயிர்களை விளையவைத்து
கடன்களை
அறுவடை செய்பவனே
விவசாயி.

இணையம்

முகமறியா இணைய நட்பினில்
சொற்களே உங்களை
அறிமுகம் செய்கிறது!!!

Comments

கலக்கல் உங்கள் கவிதைகள். :‍)

‍- இமா க்றிஸ்

முத்தாக வந்த
முதல் சிறப்புரையை
பத்திரமாக தாங்கி நிற்கும்
அறுசுவையே...

அகமகிழ்ந்தேன் !!!
நன்றி சகோ .

என்றும் அன்புடன்
முத்தமிழன்

கவிதைகள் எல்லாம் சூப்பர்

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் !
மகிழ்ச்சி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்