சகோதரன் - முத்தமிழன்

சகோதரன்

எத்தனை திட்டுகளை
வாங்கியிருப்பாய் என்னிடம்
எத்தனை அடிகளை
பெற்றிருப்பேன் உன்னிடம்

அம்மாவிடம் பெற்ற
ரகசிய தின்பண்டங்களை
மறைந்திருந்து தாக்கி
பறித்து செல்வாய் !!!

நல்ல சட்டை
நான் அணிந்தால்
அடித்து பிடுங்கிச்செல்லும்
உன்னை - அறவே வெறுத்தேன்
அன்று !!!

எத்தனை முறை
நான் திட்டினாலும்
என்னை - நீ ஒருபோதும்
விட்டுக்கொடுத்ததில்லை
பிறரிடம்

எளிதில் நீ என்னை
அடித்துவிட்டு செல்வாய்
ஆனால் - பிறரை
அவ்வளவு எளிதாக
நெருங்க விட மாட்டாய்
என்னிடம்

இன்று
இருவரும்
தனித்தனியானோம்
திருமணம் என்ற பந்தத்தில் !!!

புதுச்சட்டை
வாங்கும் பொழுதெல்லாம்
தவறாமல் வந்து போகும்
உன் நினைவுகள்
பிடுங்கி செல்ல
வரமாட்டானா என்று !!!

இதோ...
நான் வாங்கிய வண்டியை
வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு
வெளிநாடு வந்துள்ளேன்
மனமில்லாமல் ...

அதே உரிமையோடு
அடித்து பிடுங்கி செல்லமாட்டானா
நம் அண்ணன் என்ற
ஏக்கத்துடன் - உன்
அன்பு தம்பி !!!

- முத்தமிழன்

Comments

:‍) அழகான‌ கவிதை. பிடித்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

மிக்க மகிழ்ச்சி சகோ...
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் !

என்றும் அன்புடன்
முத்தமிழன்

வித்தியாசமான அநுபவம்

என் எண்ணம் உங்களால் ஈடேறியது மட்டுமல்லாமல்
எதிர்பாராமல் ஐசியூ என்ற பள்ளியில் அறுவை சிகிச்சை என்ற
பாடத்தில் தன்னை இனைத்துக்கொண்டு தேறிவரும்
இந்த வேளையில் ,என்றோ அவரைப்பற்றி எழுதிய கவிதைகள்
இன்று அறுசுவையில் அலங்கரித்திருப்பதை காணும்போது...
அறுசுவையால் வெளிவந்த இருசுவைகளை ( இன்பம்- துன்பம் ) முதல் முறையாக
பருகி திளைக்கிறேன்.

மனமார்ந்த நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

அருமை, அதீத அன்பின் வெளிப்பாடு, ஏக்கம் உங்கள் கவிதையில் வழிகிறது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…

அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

உண்மைதான் ! சுபி
சகோதரன் நண்பனாவது வரம் !
வருகைக்கு நன்றி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்