என் தேவதை - ஸ்ரீதேவி முத்து

என் தேவதை

தேவதை கதை படித்தது உண்டு
கேட்டதும் உண்டு
ஆனால் பார்த்ததுண்டா??!!
நான் பார்த்திருக்கிறேன்!
அதன் அன்பை உணர்ந்திருக்கிறேன்!
அதன் ஸ்பரிசத்தில் உறைந்திருக்கிறேன்!!

பத்து மாதம் சுமந்து வயிற்றைவிட்டு மட்டுமே
இறக்கிய என் தேவதை
இன்றும் என்னை மனதில் சுமக்கிறது

பேச சொல்லிக்கொடுத்து, நடக்க சொல்லிக்கொடுத்து
படிக்க சொல்லிக்கொடுத்த என் தேவதை
பிறரை வெறுக்கவோ, உதவி மறுக்கவோ கற்றுதரவில்லை

யாருக்கும் துரோகம் செய்ய தெரியாத என் தேவதை
அறிந்த ஒன்று
பாகுபாடின்றி பாசத்தை பங்கிட்டுக் கொடுப்பதே!!

எதையும் தனக்கென ஒதுக்காத என் தேவதை
தன்னலம் கருதாத அழகுச்சிலை!!!

கஷ்டமோ, சோகமோ தன் புன்னகையின் மூலம்
திரையிட்டு மறைக்கும்
வித்தை தெரிந்த மந்திர தேவதை

நல்லவரோ கெட்டவரோ எவரையும் வெறுக்கத் தெரியா
குழந்தை, என் தேவதை

இதுவரை அதற்கு துன்பங்களை மட்டுமே பரிசாக தந்த இறைவா
இனியாவது அதன்மேல் கருணை கொள்ளேன்
அதன் துன்பம் போக்கி, மறைவாய்
அதன் மனம் சிந்தும் கண்ணீர் துடைத்து
இதுவரை அது வாழ்வில் அடையா அனைத்தையும் அளித்து
அதற்கு வரமளியேன்!!!!

இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என் தேவதை எனக்கே தேவதையாய் வரவேண்டும்!!!

என் தேவதைக்கு முத்தமிட்டால் கூச்சம் அதிகம்...
இம்முறை அதனைக் காணும்போது முத்தத்தால் நனைய வைப்பேன்...
தப்பிக்க இயலாது அதனால்!!!!

இறைவா நிறைவாய் ஒன்று.....

என் ஆயுளை என் தேவதையின் ஆயுளோடு சேர்த்திடு!!!!
அவளின்றி இவ்வுலகில் வாழ எனக்கு தைரியம் இல்லை!!!!!!!!!!

-ஸ்ரீதேவி முத்து

பின் குறிப்பு: குடியென்னும் சாத்தானிடம் எங்கள் தந்தை அகப்பட்டு கிடக்கிறார் இன்றளவும். எனக்கு 28 வயது. இந்த 29 வருட இல்வாழ்வில் என் தாயார் எவ்வித சந்தோசத்தையும் அனுபவித்ததில்லை. காவல் அதிகாரியான என் தந்தை சொத்தென்று ஒன்றும் சேர்க்கவில்லை. எனினும் என்னையும் என் தங்கையையும் வளர்த்து. படிக்க வைத்து, மணம் முடித்து வைத்த என் தாயின் தாலி சங்கிலி இன்றளவும் வங்கியிலேயே உள்ளது. எங்களை பொறுத்த வரை அவர் தேவதையே.

Comments

என் கவிதையை பிரசுரித்த அட்மின் அண்ணாவுக்கு நன்றி....
ஒரே ஒரு திருத்தம். என் தந்தை தான் காவல் அலுவலர். என் தாய் ஒரு ஹோம் மேக்கர். நான் எழுதியதை படித்த போது என் தாய் தான் காவல் அலுவலர் என்ற அர்த்தம் வந்தது போல் தோன்றியது. நன்றி

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மிகவும் பொருத்தமான தலைப்பு , அநுபவ சொற்களால் எடுத்துரைத்த விதம் அருமை !
எதை கேட்டாலும் மறுக்காமல் கொடுப்பது
தேவதையின் குணம் ! அதுவே அம்மாவின் மனம் !
வாழ்த்துக்கள் !

என்றும் அன்புடன்
முத்தமிழன்

//என் தாயார் எவ்வித சந்தோசத்தையும் அனுபவித்ததில்லை.// இல்லை ஸ்ரீதேவி. நீங்கள் இருக்கிறீர்கள் அவரது சந்தோஷத்தின் காரணகர்த்தாவாக‌. இத்தனை பிரியமான‌ ஒரு பெண் இருக்கையில் மீதியெல்லாம் இரண்டாம் பட்சம்தான் அவருக்கு.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

என் அம்மாவிற்கு எந்த ஆசையும் கிடையாது. எங்கள் சந்தோசத்திற்காகவே வாழ்கிறார். //இத்தனை பிரியமான‌ ஒரு பெண் இருக்கையில் மீதியெல்லாம் இரண்டாம் பட்சம்தான் அவருக்கு.// மிக்க நன்றி அக்கா

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்