தோழிக்காக ஒரு திரைப்பட கவிதை - திவ்யா செல்வம்

உயிரே!
என்றும் உன்னைப் பிரியாத வரம் வேண்டும்
நான் வாழ உன் பார்வை ஒன்றே போதுமே!!
கண்ணோடு காண்பதெல்லாம் கனவுகள் மட்டுமே என்று
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உன்னை நினைத்து!!
உனக்காக எல்லாம் உனக்காக என்று அனைத்தையும் கொடுப்பேன்!!!
என் பிரியமான தோழி உன்னைத் தவிர வேறு எவரும்
என்னைத் தாலாட்ட வருவாளா என்னே!!!
என் உயிர் சிநேகிதியே! பிரியசகியே!!
நீ கோபம் கொண்டால் உன் மௌனத்தால் கைது செய்யாமல்
உன் கண்களால் கைது செய்!!!
அன்புடன் உன்னருகே நானிருந்தால்
பிரியமுடன் நட்புக்காக சண்டையிடுவோம்!!!
பிரிவோம் சந்திப்போம் என்பது போல் நாம் பிரிந்தாலும்
ஆசையில் ஓர் கடிதம் மூலம் சந்திப்போம்!!!
நான் காதலன் அல்ல காதல் கோட்டை கட்டுவதற்கு
நான் உன் தோழி நட்பு என்னும் மலைக்கோட்டையை கட்டுவேன்!!!
என்றென்றும் புன்னகையோடு நீ இருக்க எனது வாழ்த்துக்கள்!

Comments

சுவாரசியமாக‌ இருக்கிறது நீங்கள் கவிதை எழுதத் தேர்ந்தெடுத்த‌ முறை. :‍)

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா... இது 12ம் வகுப்பு படிக்கும்போது என் தோழிக்காக எழுதியது.. கடைசி வரியில் "என்றென்றும் புன்னகை" மட்டும் இப்பொழுது உள்ளது

நட்புக்காக கவிதை இனிமை..

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.