குழந்தைக்கு சளி குறைய‌

எனது குழந்தைக்கு வயது 1.2 மாதம் ஆகின்றது..
ஆனால் அவனுக்கு சளி தொந்தரவு ஆதிகமாக‌ உள்ளது..ஆதனால் அவன் முச்சு விட‌ கஷ்ட‌ படுகிறான்.இந்த‌ பிரச்சனைக்கு யாரவது மருந்து சொல்லுஙகள்...

1.2 மாத குழந்தைக்கு எதுவும் தேவை இல்லை.. தாய் பால் மட்டும் குடிக்கும் குழந்தை னா தாய் பாலில் அனைத்து சத்துக்களும் அடங்கி இருக்கும்... புட்டி பால் குடிக்கும் குழந்தை னா மருத்துவரை பாருங்க...

Hope is necessary in every condition:)

தாய் பால் தான் குடிக்கிறான் ..ஆனால் சளி இருந்திட்டு தான் இருக்கு குறையல‌.. சளி குறைய‌ வழி சொல்லவும்...

தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி அதில் கற்பூரம் போட்டு அந்த எண்ணெய்யை நெஞ்சு ல தடவி விடுங்கள்.... நீங்கள் அடிக்கடி இஞ்சி சாறு or இஞ்சி டீ குடிக்கலாம்...தாய் பால் வழியே குழந்தை க்கு சேறும்..வெற்றிலை சாறு குடிங்க...இது எல்லாம் நான் பின்பற்றினேன்..குழந்தைக்கு தனி யா எதும் குடுக்கல...தாய் பால் வழியே சேரும்... நல்ல பலன் கிடைத்தது...இன்னும் நிறைய இருக்கும்... நீங்கள் அறுசுவை ல தேடி பாருங்கள்...

Hope is necessary in every condition:)

Reka pandian சொன்னது அனைத்தும் சரி. மேலும் ஒரு செய்தி 1. வெற்றிலையில் முன்புறம் தைலம் தடவி பின்புறத்தை நல்லஎன்னை ஊற்றிய விளக்கில் வாட்டி தூங்கும் போது நெஞ்சிலும் உச்ச தலையிலும் வைக்கவும்.

மருத்துவரை பார்த்தீர்களா? பொதுவாக‌ அவர்கள் கொடுக்கும் மருந்துகளில் சீக்கிரம் குறைய‌ வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சரியாகவில்லையென்றால்

முதலில் தாய்க்கு சளி பிடிக்காத‌ மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.

வெற்றிலையின் பின்புறத்தில் நல்லெண்ணெய் தடவி அதை அகல் விளக்கில் காண்பித்து அதை குழந்தையின் நெஞ்சில் வைக்கவும். (அதிக‌ சூடு இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்)

மூச்சு விட‌ சிரமம் என்றால் நாசில் ட்ராப்ஸ் துவாரத்தில் விடலாம்.

இப்போது விக்ஸ் பேபி ரப் கிடைக்கிறது. அதை குழந்தையின் நெஞ்சில் நெற்றியில் உள்ளங்கால்களில் தடவலாம்..

சற்று குளிர்ந்த‌ ஏரியாவில் வசிக்கிறீர்கள் என்றால் குழந்தையின் உள்ளங்காலில் விக்ஸ் பேபி ரப் தடவி சாக்ஸ் அணிந்து விடுங்கள்..

நீங்கள் அடிக்கடி கஷாயம் வைத்து குடிக்கலாம். சுக்கு காபி குடிக்கலாம். சரியாகும். சற்று வளர்ந்த‌ குழந்தையெனில் ஓமம் கொடுப்பார்கள். 1.5 மாத‌ குழந்தைக்கு மருத்துவரின் பேரில் செல்வதே சரியென‌ படுகிறது.

- பிரேமா

//நீங்கள் அடிக்கடி இஞ்சி சாறு or இஞ்சி டீ குடிக்கலாம்.// & //வெற்றிலை சாறு குடிங்க.// & //நீங்கள் அடிக்கடி கஷாயம் வைத்து குடிக்கலாம். சுக்கு காபி குடிக்கலாம்.// ரஞ்சித், குழந்தைக்கு அப்பா என்று நினைக்கிறேன்.
~~~~~

//1.5 மாத‌ குழந்தைக்கு// ரஞ்சித்தும் ரேகாவும் 1.2 மாதம் என்கிறாங்க‌. அது என்ன‌ கணக்கு என்று யாராவது சொல்லுங்களேன். ரஞ்சித் முன்பு எங்கேயோ கேள்வியை வைச்சிருந்தாங்க‌. ஒரு மாசமும் 2 நாட்களுமோ என்று நினைச்சேன். திரும்பவும் 1.2 தான் எழுதியிருக்காங்க‌. அறுசுவை வழியாகத் தான் பல‌ விடயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். சீரியசாவே சந்தேகம் கேட்கிறேன். யாராவது சொல்லி உதவமாட்டீர்களா?

‍- இமா க்றிஸ்

ஒன்றரை மாதத்தை தான் 1.5மாதம் என்று கூறுகிறார்கள்..
மதிப்பெண்கள் கணக்கின் படி 0.5 அரை ,ஆனால் இங்கு 0.5 மாதத்தின் பாதி 15 நாட்கள்ஆகிவிட்டது...
புரியும் படி சொன்னால் 1 மாதம் 15நாட்கள்.. மொத்தத்தில் 45நாள் குழந்தை..

நான் நினைத்தேன் 1வருடமும் 2மாதங்களும் என.

பதில் அளித்ததற்கு நன்றி... நான் அப்பா தான்..1 வருடம் 2 மாதம் தான் என் குழந்தையின் வயது...

இமா மேம் 1.2 apdyna 45 days boy என்று தான் நினைத்து சொன்னேன்...

//ரஞ்சித், குழந்தைக்கு அப்பா என்று நினைக்கிறேன்.//ஹிஹி சாரி இப்போது தான் profile பார்த்தேன்...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்