மன்திலி டார்கெட்

மன்திலி டார்கெட்டோடு
வலம்வரும்
சேல்ஸ்மேனும்,
போலீஸ்மேனும்
விரிக்கின்ற வலையில்
மாட்டிக்கொள்ளும்
நடுத்தர வர்க்க அப்பாவிகள் !!!

சமூகம்

நல்லா படிச்சவங்களை
முதல் பெஞ்சில் வைத்து
அழகு பார்த்தது - பள்ளிக்கூடம்.
கடைசி பெஞ்சுகளை
நாட்டில் வைத்து
அழகு பார்க்கிறது - சமுதாயம்.

நா

இதயத்தை
நொறுக்கும் சக்தி
எலும்பே இல்லாத
நாக்கிற்கு உண்டு !
எழுதுவது இருக்கட்டும்
எழுதும் சொற்களில்
கவனம் இருக்கட்டும் !!!

கடன்

வாங்கின ஏச்சு பேச்சுக்களை
திருப்பி கொடுக்க நினைக்கும் மனசு
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க
நினைப்பதில்லை !!!

ஸ்டேட்டஸ்

ஒருவேளை உணவுக்காக
போராடி வாழும் மக்களும்,
ஒருவேளை உணவினைகூட மறந்து
ஒரு ஸ்டேட்டஸ் போட
போராடி வாழும் மக்களும்,
ஓராயிரம் ஸ்டேட்டஸ்
‘காப்பி, பேஸ்டால்’
கலக்கி வருபவர்களும் ...
நிறைந்த உலகத்தில் தானடா
நண்பா ...
நீயும், நானும் !!!

Comments
Admin
மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளமைக்கு எனது நன்றிகள் !!!
என்றும் அன்புடன்
முத்தமிழன்
முத்தமிழன்
மந்த்லி டார்கெட் - இதற்கு முன்பு எழுதிய கவிதை தொடர்பானதா!
சமூகம் - அரசியல்!
நா - நான் நினைவில் வைத்திருக்க மறக்கும் விடயம், இங்கு கவிதையாக. :)
//இதையத்தை// இ..த..யத்தை அல்லவா!
//‘காப்பி,பேஷ்டால்’// பே..ஸ்..டால் அல்லவா! paste-ல் h இல்லையே!

கவிதைகளை அட்மினுக்கு அனுப்புமுன், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டக் கூடிய யாரிடமாவது படிக்கக் கொடுங்கள். ஆக்கியவர் எத்தனை தடவை படித்தாலும் மூளை சரியாக்கிப் படிப்பதனால் எழுத்துப் பிழைகள் கவனத்திற்கு வராது.
- இமா க்றிஸ்
இமா க்றிஸ்
சகோ ... இமா அவர்களுக்கு
கண்டிப்பாக இனி வரும் காலங்களில் முயற்ச்சி செய்கிறேன் !!!
தாங்கள் வருகைக்கு நன்றி !!!
என்றும் அன்புடன்
முத்தமிழன்