விவசாயி - முத்தமிழன்

கேளுங்கள்
மானிட பதர்களே!

மூன்றுவேளை நீங்கள் உண்ண
நாங்கள் உழைக்கிறோம்
ஒருவேளையாவது எங்களை
நினைத்ததுண்டா?

வளரும் என்றே நட்டு வைத்தேன்
புயல் வந்து அழிக்குமென
கனவுகூட
காணவில்லையே!

நஞ்சை விளையும் பூமியில்
மஞ்சளாய் பூத்திருக்கும்
பயிரே - எங்களுக்கு
நஞ்சாய் ஆனதடா!

கால நேரம் புரிந்தாலும்
எங்களுக்கு
கம்ப்யூட்டர் தெரியாதடா!
உங்கள் கணக்கும்
புரியாதடா!

கட்சி கொடிகளுக்கு ஆகும் செலவில்
கால்வாசி கூட இல்லையடா - நாங்கள்
கந்துவட்டிக்காரனுக்கு செய்யும்
செலவு!

வாங்கிய கடனுக்கு
வட்டிக்குமேல் வட்டி கட்டி
எங்கள் ஆயுளும்
போனதடா!

வயலை நம்பி வாழும் எங்களுக்கு
புயலைப் பற்றி தெரியாமல்
போனதடா!

செய்யும் தொழிலில் நஷ்டமென்றால்
மஞ்சள் கடுதாசி கொடுக்கும் சமூகம்
மஞ்சளாகிப் போன பயிருக்கு
ஒரு மஞ்சள் நோட்டீஸ் உண்டாடா?

எல்லோருக்கும் உண்டு
ஆடித் தள்ளுபடி!
அம்பானிகளுக்கும் கூட
வாங்கிய கடனில் தள்ளுபடி!
அன்றாடம் உழைத்து பிழைக்கும்
எங்களுக்கு ஒரு தள்ளுபடி உண்டாடா?

உழைத்துப் பிழைக்கும் எங்களை
ஊறுகாயாய் பார்க்கும்
அரசாங்கமே!
எங்கள் வாழ்க்கைக்கு
ஒரு விடிவு உண்டா?

ஒட்டிய வயிறோடு
நாங்கள் போகிறோம்
கட்சிகளுக்கு நோட்டீஸ் ஒட்டி
நீங்கள் வாழுங்கள்!

Comments

உண்மையை உணர வைக்கும் ஆழமான வரிகள்...
நன்றாக உள்ளது

￰யாதுமானவன் என்னவன்

உங்கள் கவிதை ரசிக்க வைக்கிறது. இன்றைய் நிலையையும் நாளைய நிலையையும் தெளிவாய் நெற்றி பொட்டில் அறைகிறது.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

மிக்க மகிழ்ச்சி , தொகுப்பினை மிக அழகாக வெளியிட்டமைக்கு எனது நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
மகிழ்ச்சி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

//ஒட்டிய வயிறோடு
நாங்கள் போகிறோம்
கட்சிகளுக்கு நோட்டீஸ் ஒட்டி
நீங்கள் வாழுங்கள்!// அருமையான‌ வரிகள்

வாழ்த்துக்கள் !!

- பிரேமா

மிக்க மகிழ்ச்சி ...
உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

உங்கள் வருகைக்கும் ,
வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்

உங்கள் வருகைக்கும் ,
வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள் !!!

என்றும் அன்புடன்
முத்தமிழன்