முத்தமிழன் கவிதைகள் - தொகுப்பு 5

முதியோர் இல்லங்கள்

திண்ணைகள் இல்லா
வீடுகளால் - வளரும்
அன்னை இல்லங்கள்.

பாடம்

கவலைப்படுவதால்
வென்றவன் ஒருபோதும்
தோற்றுவிடப்போவதில்லை.
வெற்றியை எட்டிப்பிடிக்க
தோல்வியை படி.

 
நெட்வொர்க்

3ஜியும் 4ஜியும்
களத்துமேட்டினைக்கூட
கால் சென்டர்களாக்கி
சமுதாயம் என்னும் வயலில்
சொற்களை விதைத்து
பணங்களை
அறுவடை செய்கிறது.

நவீன யுகம்

கடவுள் இருக்கிறார்
என்ற நம்பிக்கையை விட
கேமரா இருக்கிறது
என்ற நம்பிக்கையில்
மனம் நிம்மதியடைகிறது.

 
தன்னலம்

பிறருக்காக குலைதள்ளும்
வாழையும்
தனக்கென வைத்துக்கொள்ளாத
தாயும்
இருக்கின்ற வரையில்
அன்பெனும் மழை
பொழிந்துகொண்டே இருக்கும்
அதில்
ஆயிரம் செடிகள்
பூத்துக்கொண்டே இருக்கும்.

தொலைபேசி

இரண்டு தகர டப்பாக்களில்
சணல் கயிறு கட்டி
நாங்கள் போன் பேசி
மகிழ்ந்த நாட்களை,
இன்றைய ஆப்பிளும்
ஆண்ட்ராய்டுகளும்
தந்துவிட முடியாது.

 

Comments

வெகு அருமை. ஒவ்வொரு கவிதையும் அழகு. எந்த‌ப் பிழையுமில்லாமல் வெகு அழகாக‌ எழுதப்பட்டிருக்கின்றன‌. பாராட்டுக்கள். தொடர்ந்து இப்படியே அருமையான‌ கவிதைகளாகக் கொடுக்க‌ என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

அருமையாக வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவை நண்பர்களுக்கு என் நன்றிகள்.
மகிழ்ச்சி வலைதளத்தில் கானும்போது.

என்றும் அன்புடன்
முத்தமிழன்

ஆஹா,
நல்ல மார்க் எடுத்த சந்தோஷம், உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள். கண்டிப்பாக இன்னும் கொஞ்சம் முன்னேறுவேன் என்ற நம்பிக்கையுடன்.

என்றும் அன்புடன்
முத்தமிழன்

எனது கவிதை ஏன் இன்னும் பதிவு செய்யவில்லை. நான் அனுப்பி 3நாட்கள் ஆகிறது அதான் கேட்டேன்...