மனஅழுத்தம் & ரொம்ப பயம். எனக்கு ஆலோசனை வேண்டும்

வணக்கம் தோழிகளே எனக்கு வயது 21.
எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு. என்ன நினைச்சா எனக்கே பிடிக்கல.சின்ன விசயத்துக்கும் ரொம்ப பயப்படுறேன்.கொஞ்சம் கூட தைரியமே வருதில்ல்லை.மத்தவங்க கிட்ட பேசவே தைரியம் வருதுல்ல ஏதும் தப்பா பேசிருவேனோவ என்று பேசாமலேயே இருந்துர்றேன்.
ஒரு form fill பண்ணணும் or ஏதும் signature வைக்கணுனா கூட பயம் வருது கை எல்லாம் நடுங்குது.
சும்மா தல வலிச்சாலே நமக்கு மூளைல கட்டி இருக்குமோனு யோசிக்கிறேன்.
￰￰எங்கயாவது யாருக்கோ cancer நோய் வந்துருக்காம் or cancer பற்றி படிச்சாலோ எனக்கும் cancer இருக்குற மாதிரி தோணுது. வேற வேற நோயை பற்றி கேள்வி படும் போது எல்லாமே எனக்கும் இருக்குற மாதிரி தோணுது. எனக்கும் இந்த நோய் எல்லாம் வந்துடுமோநு பயமா இருக்கு. Night ல தூக்கமே வருது இல்ல.
அழுகை அழுகையா வருது.
எப்பவுமே தனிமையிலேயே இருக்கணும் போல தோணுது.தனிமைல இருந்தா எதோ யோசனை எல்லாம் வருது.சாப்பிட பிடிக்கவே இல்ல மனசு என்னமோ மாதிரி இருக்கு.
சின்ன வயசுலே இருந்தே எல்லாத்துக்கும் ரொம்ப பயம் ஆனா இப்போ அதை விட பயம்.
10 நாளா பல் ஒன்னு வலிச்சிட்டே இருக்கு புடுங்க போக பயமா இருக்கு.
எல்லா விஷயத்துலயுமே நான் கோழையா இருக்கேன்..
நான் இதுல இருந்து விடு படனும்
எனக்கு உதவி செய்ங்க..

அப்பறம் எனக்கு periods உம் சரியாய் வருவதில்லை.அது சரி பண்ண இன்னும் hospital போகவே இல்லை.போகவே பயமா இருக்கு. செக் பண்ணி பாத்துட்டு எனக்கு நீர்க்கட்டி,Thyroid அப்படி ஏதும் இருக்குமோனு doctor ￰சொல்லிருவாங்கனு பயமா இருக்கு.
கொஞ்சம் வயிறு வலிச்சா கூட வயித்துல கல் இருக்குற மாதிரியே யோசனை வருது.
அப்பறம் குழந்தை பெத்துக்குறத நினைச்சாலே இப்பவே பயத்துல உடம்பு நடுங்குது.
நான் ஏன் இப்படி இருக்கேன் எல்லாமே negative think ￰பண்றேன்.
எனக்கு என் மேலேயே கோபம் வருது
எனக்கு ஏதாச்சும் உதவி பண்ணுங்க
நான் என்ன பண்ணனும்.

￰யாதுமானவன் என்னவன்

//நீர்க்கட்டி,Thyroid அப்படி ஏதும் இருக்குமோனு doctor ￰சொல்லிருவாங்கனு பயமா இருக்கு.// சரி, அப்படி அவங்க‌ சொன்னால், கூடவே சிகிச்சை என்ன‌ என்பதையும் சொல்லத் தானே போறாங்கள்! சும்மா வீட்ட‌ அனுப்பப் போறதில்லை. நீங்க‌ பயத்தில‌ போகாம‌ இருந்து உண்மைலயே பிரச்சினை இருந்தால் அது தீர்க்கப்படாமல் பெரிசாகாதா? தைரொய்ட் இருந்தாலும் இப்பிடிக் குழப்பமெல்லாம் வரும் கண்ணா. டப்லட்ஸ் தான் தருவாங்கள். சோறு சாப்பிடுற‌ மாதிரி வாயில‌ போட்டு விழுங்குறதுக்கு பயம் ஏன்?
யோசிச்சுக் கொண்டு இருக்காமல் போய்க் காட்டீட்டு வாங்க‌. பல்லையும் காட்டுங்க‌. வைச்சுட்டு இருக்க‌ பிறகு உங்களுக்குத் தான் அவஸ்தை.

உங்கட‌ பொழுது போக்கு... சரியில்லை. :‍) அதை மாற்றி உண்மைலயே பொழுதை ரசனை உள்ளதாக‌, பயனுள்ளதாக‌ மாற்றினால் மீதி ஓரளவு சரியாகும் என்று நினைக்கிறேன். 'சும்மா இருக்கிற' நேரம் உடம்புதான் சும்மா இருக்கும்; மனம் இராது. அப்ப‌, அது குழப்படிச் சிந்தனையெல்லாம் சிந்திக்கும். :) வேற‌ உருப்படியான‌ பொழுதுபோக்குகளைத் தேடிக் கொள்ளுங்க‌. ப்ரொஃபைல்ல‌ அதை மாற்றுங்க‌.

‍- இமா க்றிஸ்

Naa baby ku try pandren but ennala conceive aga mudiala.enaku konjam thoppai eruku so conceive aga mudialanu thonuthu. Naa veettula abdomen exercise pannalam eruken. Before ovulationla matum. Ethanala karpapaiku ethum problem varuma? Pls replay pannuga.

B. Radha

:‍) சரியான‌ தலைப்பின் கீழ் கேள்வியை வைத்தால், உங்களுக்குக் கிடைக்கும் பதில் மற்றவர்களுக்கும் உதவும். இப்போ சசி தனக்கு மூன்று பேர் பதில் சொல்லியிருக்கிறதா நினைச்சு ஏமாறப் போறாங்க‌.

//Before ovulationla matum.// பயனில்லை என்று தோன்றுகிறது. ஓவ்யுலேஷன் நேரம் எக்சர்சைஸ் பண்ண‌ மாட்டீங்க‌, அதன் பின்னும் கர்ப்பமா இருக்கலாம் என்கிற‌ எச்சரிக்கை உணர்ச்சி இருக்கும், பண்ண‌ மாட்டீங்க‌. ஓரிரு வாரங்கள் மட்டும் செய்யும் பயிற்சியால் பலன் எதுவும் இராது.

‍- இமா க்றிஸ்

எனக்கு பதில் அனுப்பினதுக்கு ரொம்ப நன்றி அம்மா.
நானும் தைரியமா இருக்கணும் கண்டதெல்லாம் யோசிக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன்.நான் சும்மா இருக்கிறதுனால தான் இந்த பிரச்சினை எல்லாம் வருது என்று சொல்றிங்களா?
அப்போ நான் என்ன பண்ணலாம்?

எல்லாருக்கும் வர்ற சாதாரண பிரச்சினை எனக்கு மட்டும் ஏன் பெருசாக விளங்குது

￰யாதுமானவன் என்னவன்

Imma amma enaku oru doubt enaku intha month 27 th day periods vanthathu ithuvaraikum periods vantha napkin dark red la than irukum intha time brownish ah iruku athum ilama liquid mathiri ilama katti kattia neraya vantha mathiri irunthathu pad la menses padama urin pohum pothu matum blood vanthathu ana romba kattia irunthathu first day onum ila second day matum than blood vanthathu third day ninuruchi ena problem ethum irukuma sollunga plz konjam etho vairu clean pani ellam velila vantha mathiri irunthathu ivlo naal la ipdi enaku vanthathe ila konjam ena nu solungalen plz

//நான் சும்மா இருக்கிறதுனால தான் இந்த பிரச்சினை எல்லாம் வருது என்று சொல்றிங்களா?// ஓம். //அப்போ நான் என்ன பண்ணலாம்?// புத்தகம் வாசிக்கலாம், வீட்டை அலங்கரிக்கலாம், தோட்டம் செய்யலாம், தைக்கலாம், பின்னலாம், அறுசுவை க்ராஃப்ட் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம், விதம் விதமான‌ சமையற் குறிப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம், குக்கரி க்ளாஸ், கேக் டெகரேஷன் என்று ஏதாவது புதிதாகப் படிக்க‌ ஆரம்பிக்கலாம், நகங்களை அலங்கரிக்கலாம், அறுசுவைக்கு கவிதை எழுதி அனுப்பலாம். மனம் உண்டானால் இடமுண்டு. ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன‌ செய்ய‌.

//எல்லாருக்கும் வர்ற சாதாரண பிரச்சினை எனக்கு மட்டும் ஏன் பெருசாக விளங்குது// நீங்கள் 'மட்டும்' என்று இல்லை, இப்படி மனதைக் குழப்பிக் கொள்ளும் வேறு பெண்களும் இருக்கிறார்கள். சும்மா இருக்கிறதாலதான் என்று முதலே சொன்னேனே! திரும்பவும் அதே கேள்வியைக் கேட்கிறீங்க‌. ;)

நீங்களாக‌ நினைத்தாலல்லாமல் யாரும் உங்களுக்கு உதவ‌ முடியாது கண்ணா. உதவி கேட்டால் போதாது. முயற்சி செய்யவும் வேண்டும்.

‍- இமா க்றிஸ்

யோசிக்க‌ வேண்டாம். இது பிரச்சினையான‌ விஷயமாக‌ எனக்குப் படவில்லை. இடையில் எப்போவாவது இப்படி இருக்கலாம். சிலருக்கு மாதவிலக்கின் போது கட்டிகளாகப் போவது மாதாமாதம் ஆகும் விடயம். சிலருக்கு எப்போதாவது இப்படி ஆவது உண்டு. உங்களுக்கு அடுத்த‌ மாதம் மாதவிடாய் சரியாகி இருக்கும். அல்லாமல் அப்போதும் உங்களுக்குக் கவலையாக‌ இருந்தால் ஒரு மருத்துவரைப் பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

Nandri amma

எல்லோருக்குள்ளும் மனப்பயம் எழுவதுண்டு. பலர் மனதை அடக்கி ஆளத் தெரிந்திருக்கின்றனர். மனம் பயம் கொண்டு கற்பனை பண்ண தொடங்கும் போதே தட்டி அடக்கப் பழக வேண்டும். எம்பாட்டுக்கு இருந்து (தீய) கற்பனைகளை வளர்க்க கூடாது.

நீங்கள் உங்கள் மீதே இரக்கம் கொண்டுள்ளீர்கள். அதை விடுங்கள். மனம் "எனக்கு வருத்தம் வருமோ" என நினைக்கும் போது மனதை அதட்டி அடக்குங்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் அவர் நாமங்களை ஆழமாக உச்சரியுங்கள். கடவுளை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை. எதற்கும் பயப்பட கூடாது.

// கொஞ்சம் கூட தைரியமே வருதில்ல்லை.மத்தவங்க கிட்ட பேசவே தைரியம் வருதுல்ல ஏதும் தப்பா பேசிருவேனோவ என்று பேசாமலேயே இருந்துர்றேன்.//
சாதாரண விஷயங்களை பேச ஏன் பயப்பட வேண்டும். எல்லோரும் உங்களுக்கு சமமானவர்கள் தானே. முதலில் எல்லோருடனும் சேருங்கள். அவர்கள் பேசுவதை அமைதியாக கேளுங்கள். பின் மெது மெதுவாக பேசத் தொடங்கி விடுவீர்கள். பயம் என்று காரணங்கள் சொல்லி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது.

இப்பொழுது தான் உங்களுக்கு சின்ன வயது. வாழ்க்கை உங்களை தைரியசாலியாக்கும்.
முதலில் உங்களை நீங்கள் நேசியுங்கள். தைரியமாய் இருங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை.

மேலும் சில பதிவுகள்