மனஅழுத்தம் & ரொம்ப பயம். எனக்கு ஆலோசனை வேண்டும்

வணக்கம் தோழிகளே எனக்கு வயது 21.
எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு. என்ன நினைச்சா எனக்கே பிடிக்கல.சின்ன விசயத்துக்கும் ரொம்ப பயப்படுறேன்.கொஞ்சம் கூட தைரியமே வருதில்ல்லை.மத்தவங்க கிட்ட பேசவே தைரியம் வருதுல்ல ஏதும் தப்பா பேசிருவேனோவ என்று பேசாமலேயே இருந்துர்றேன்.
ஒரு form fill பண்ணணும் or ஏதும் signature வைக்கணுனா கூட பயம் வருது கை எல்லாம் நடுங்குது.
சும்மா தல வலிச்சாலே நமக்கு மூளைல கட்டி இருக்குமோனு யோசிக்கிறேன்.
￰￰எங்கயாவது யாருக்கோ cancer நோய் வந்துருக்காம் or cancer பற்றி படிச்சாலோ எனக்கும் cancer இருக்குற மாதிரி தோணுது. வேற வேற நோயை பற்றி கேள்வி படும் போது எல்லாமே எனக்கும் இருக்குற மாதிரி தோணுது. எனக்கும் இந்த நோய் எல்லாம் வந்துடுமோநு பயமா இருக்கு. Night ல தூக்கமே வருது இல்ல.
அழுகை அழுகையா வருது.
எப்பவுமே தனிமையிலேயே இருக்கணும் போல தோணுது.தனிமைல இருந்தா எதோ யோசனை எல்லாம் வருது.சாப்பிட பிடிக்கவே இல்ல மனசு என்னமோ மாதிரி இருக்கு.
சின்ன வயசுலே இருந்தே எல்லாத்துக்கும் ரொம்ப பயம் ஆனா இப்போ அதை விட பயம்.
10 நாளா பல் ஒன்னு வலிச்சிட்டே இருக்கு புடுங்க போக பயமா இருக்கு.
எல்லா விஷயத்துலயுமே நான் கோழையா இருக்கேன்..
நான் இதுல இருந்து விடு படனும்
எனக்கு உதவி செய்ங்க..

எனக்கு ஆலோசனை வழங்கியதற்கு ரொம்ப நன்றி அக்கா.
உங்க கருத்தை படிச்ச பிறகு எனக்கு மனசுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கு.
நான் இனி ரொம்ப யோசிக்க கூடாது
என்ன நடந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் பபயப்பட கூடாது என்று தான் நினைக்கிறேன்.

￰யாதுமானவன் என்னவன்

மேலும் சில பதிவுகள்