நான் இப்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.நான் காலையில் ,மதியம்,இரவு ஆகிய 3 வேளையில் என்னென்ன சத்துள்ள உணவை உண்ணலாம்?தயவு செய்து கூறுங்கள்.please please.
நான் இப்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.நான் காலையில் ,மதியம்,இரவு ஆகிய 3 வேளையில் என்னென்ன சத்துள்ள உணவை உண்ணலாம்?தயவு செய்து கூறுங்கள்.please please.
கர்ப்பிணிப் பெண்ணிற்கான உணவு.
வாழ்த்துக்கள் ரம்பா (அ) சிம்ரன்,
காலையில் சாப்பிடும் உணவுடன் கேரட் ஜூஸ், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
மதியம் கீரை, பச்சை காய்கறிகள் கலந்த சாலட், முளைக்கட்டிய பயிறு வழக்கமான உணவுடன் சேர்த்துக் கொள்ளவும். குறிப்பாக முருங்கைக்கீரை, பாலைக்கீரைகள் சேர்க்கவும்.
மாலையில் வேக வைத்த தானிய வகைகள், ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடலாம்.
இரவில் பால், ஒரு வாழைப்பழம் அவசியம் சேர்க்கவும்.
மாதுளம் பழம், பேரீட்சை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக காரம், புளி சேர்க்கக் கூடாது.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.
பழங்களில் பப்பாளி, அன்னாசி, மாம்பழம் போன்றவற்றை தவிர்க்கவும்.
உருளைக்கிழங்கு போன்ற வாய்வு பதார்த்தங்களை குறைத்துக் கொள்ளவும்.
அரிசியைக் குறைத்து, கோதுமை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டால், மலச்சிக்கல் வராது.
7 மாதங்கள் ஆனப்பிறகு, 1 நாள் விட்டு 1 நாள், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயக்களி சாப்பிட்டு வந்தால், இடுப்பு பலமாகி, சுகப்பிரசவம் உண்டாகும்.
Take care.
அன்புடன்,
செல்வி.
watever
theres no specific rule to avoid thiuz that blablabla...but
* avoid oily food,fries,etc
*eat all kinda veggies n fruits
*drink plenty of water n fruit juices
*sprouted beans are too gud
*fish iz gud
dunt skip meals
carrot juce
மிகவும் அழகாக எழுதி இருந்தீர்கள்.காலை மாலையில் சாப்பிடும் உணவை அழகாக சொல்லி இருந்தீர்கள்.கேரட் ஜூஸ் செய்வது எப்படின்னு உங்களுக்கு தெரியுமா?தெரிந்தால் சொல்லுங்களேன்.please.
ramba
திருமதி. ரம்பா,
நலமா? நன்கு பசி எடுக்கிறதா? உடம்பை கவனித்துக் கொள்ளவும் (பாப்பாவையும் சேர்த்து).
கேரட்டைக் கழுவி லேசாக தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, தண்ணீர் கலந்து, வடிகட்டிக் கொள்ளவும். ஃப்ருட் எக்ஸ்ட்ராக்டர் இருந்தாலும் போடலாம். (ஒரு பெரிய கேரட் போதுமானது). இனிப்பு பிடித்தால், 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும். இல்லையெனில் சிறிது உப்பும், மிளகு தூளும் சேர்த்து குடிக்கலாம். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், குழந்தையும் நன்கு சிவப்பாகப் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. Take care, all the best.
அன்புடன்,
செல்வி.