9 மாத‌ குழந்தைக்கு சளி

என் குழந்தைக்கு 9வது மாதம் நடக்கிறது. சளிக்கு ஏதாவது கைப்பக்குவம் சொல்லுங்கள் ப்ளீஸ்.. நெஞ்சு சளி இல்லை மூக்கில் மட்டும் நீர் வடிகிறது. உதவி செய்யுங்கள் தோழீஸ்.

எனக்கும் சளிக்கு ஏதேனும் பக்குவம் சொல்லுங்கள். எவ்வளவு கவனமாக‌ இருந்தாலும் எப்படியாவது சளி பிடித்துவிடுகிறது. டிப்ஸ் சொல்லுங்கள்.

ஒரு table spoon coconut oil,2 கற்பூரம் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை வெத்தலையில் இரு பக்கமும் தடவி நல்லெண்ணெய் விளக்குல வாட்டி மிதமான சூடு இருக்கும் போது குழந்தை நெஞ்சில் வைங்க..30 நிமிஷம் வைச்சு எடுத்துறுங்க..என் பையனுக்கு சளி பிடிச்ச போது இப்படி தான் என் அம்மா செஞ்சாங்க..

நன்றி பா. ஆனா அதெல்லாம் செஞ்சு பார்த்தாச்சு.. பிரயோஜனம் இல்லை. வேற‌ எதாவது டிப்ஸ் கொடுங்க‌ பா. கஷாயம் கூட‌ கொடுத்தாச்சு.

- பிரேமா

அன்பு பிரேமா,

எங்கள் வீட்டு 9 மாத‌ குழந்தைக்கு நாங்கள் சளிக்கு கொடுப்பது கற்பூரவல்லி கஷாயம்தான். 3 நாட்களில் (காலை ஒரு வேளை) சரியாகுது. முயற்சி செய்து பாருங்கள். சளி ஒழுகினால் வெதுவெதுப்பான‌ நீரில் சிறிது கல் உப்பு போட்டு ஒரு சிறு துணியை முக்கி அவ்வப்போது மூக்கைத் துடைத்தால் மூக்கடைப்பும் விரைந்து குணமாகும்.

அன்புடன்
ஜெயா

ரொம்ப‌ நன்றிங்க‌.. கண்டிப்பா முயற்சி பண்றேன்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்