மசாலா பொருள்கள்

மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம், சோம்பு போன்ற மசாலா பொருட்கள் ஒரு நாளைக்கு
எத்தனை மில்லி கிராம் அளவுக்கு சேர்க்க வேண்டும்?உணவில் அதிகம் சேர்க்கபட்டால் ஆபத்து என இன்டர்நெட்டில் படித்தேன். நாம் தினமும் உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூளில் இந்த பொருட்கள் இருப்பதால் அறிய விரும்புகிறேன்.

//உணவில் அதிகம் சேர்க்கபட்டால் ஆபத்து என இன்டர்நெட்டில் படித்தேன்.// உண்மை என்னவென்றால், உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளும் கூட அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பிரச்சினையை உண்டாக்கும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு,' இல்லையா! எதையும் அளவோடு வைத்துக் கொண்டால் பயப்படத் தேவையில்லை.

நீங்கள் குறிப்பிட்டிருப்பவை சுவையூட்டிகள். உடலுக்கு அவசியம் இல்லாதவை. ஒட்டுமொத்தமாகத் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை. அவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மருத்துவச் சிறப்புகள் இருக்கும்.

//ஒரு நாளைக்கு எத்தனை மில்லி கிராம்// இதைக் கணிப்பது கஷ்டம். :‍) ஒரு தடவை சமைப்பதை ஒரே ஆள் சாப்பிட்டு முடிப்பதில்லை. தவிர... தனித்தனியே கணிக்க நினைத்தால்... குழம்பில் இருப்பதோடு மீதிக் காய்கறிகளில் சேர்ப்பதையும் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டும். பிறகு... சமைப்பது எதுவும் அதற்குரிய சுவையில் இராது. :‍) வேறு ஏதாவது தான் கிடைக்கும்.

//நாம் தினமும் உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூளில் இந்த பொருட்கள் இருப்பதால் அறிய விரும்புகிறேன்.// ஒரு சமயத்திற்கு, குழம்புக்கு நீங்கள் சேர்க்கும் தூளின் அளவு வெகு குறைவு. அதில் உள்ள மசாலைகளின் விகிதம் என்று பார்த்தால், ஒவ்வொன்றும் வெகு குறைவாகத் தான் இருக்கும். பிறகும் கூட, ஒவ்வொருவர் பரிமாறும் அளவு இன்னும் குறைவு. எனவே பயப்படத் தேவையில்லை. மெனுவில் தினமும் வெவ்வேறு வித உணவுகளை இணையுங்கள்.

என் அபிப்பிராயம்... மசாலைகள் ஒரு அளவுக்கு மேல் சேர்ந்தால் பதார்த்தம் சுவைக்காது. சுவையாக இருந்தால், அளவு சரியாக இருப்பதாகக் கொள்லலாம். நீங்கள் பிரியாணி, மசாலா தேநீர் அடிக்கடி உண்பவராக இருந்தால், அவற்றைக் கொஞ்சம் குறைக்கலாம். அவற்றில் மசாலைப் பொருட்கள் அதிகம் சேர்ப்பார்கள் இல்லையா!

¬¬¬¬¬
கேள்விக்குத் தொடர்பில்லாத விடயம் ஒன்று. கமா, முற்றுப் புள்ளி, கேள்விக் குறி போடும் ஒவ்வொரு தடவையும் மறக்காமல் தொடர்ந்து ஒரு முறை ஸ்பேஸ் கீ தட்டுங்க. அல்லாவிட்டால் முழுவதும் சேர்த்து ஒரே சொல் போல் தெரியும். சில சமயங்களில் இழையையும் தாண்டி வலது பக்கம் வெளியே நீண்டும் தெரியும். முன்பு அட்மின் சொல்லியிருந்த விடயம் இது. முடிந்தால் உங்கள் கேள்வியை எடிட் செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

Thanks sister. என்னுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது. பொது பிரிவில் குழம்பு மிளகாய் தூள் தலைப்பில் சந்தேகம் கேட்டுள்ளேன். தங்களால் இயன்றால் பதில் தரவும் தோழி. உங்கள் கூடுதல் தகவலுக்கும் நன்றி தோழி. இந்த பதிவில் உங்கள் ஆலோசனையை பின்பற்றி உள்ளேன் என்று நம்புகிறேன். தவறு இருந்தால் குறிப்பிடவும். திருத்தி கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்