Intrauterine pregnancy
Enakku abortion agi 13 naal agirathu ippo scan seythathil ithu potirunthathu please enna enru sollunga sister please
Intrauterine pregnancy
Enakku abortion agi 13 naal agirathu ippo scan seythathil ithu potirunthathu please enna enru sollunga sister please
Please naan doctor pakkala
Please naan doctor pakkala late aguthunnu vanthuten kulanthai veru ullathu athan vanthuten innum rendu naal agum athan ungalitam kekkuren
Tablet vaithu abortion seythu
Tablet vaithu abortion seythu piragu scan seythathil ulle theettu irunthal doctor enna mathiri treatment kudupannga
Please therinthavargal pathil
Please therinthavargal pathil koravum
ரேகா சரவணன்
//Intrauterine pregnancy// என்றால் கரு கருப்பையில் எங்கு இருந்திருக்க வேண்டுமோ அங்கு வளர்ந்திருந்தது என்று அர்த்தம். அது இப்போது வளர்வதையும் குறிக்கலாம்; முன்பு இருந்த நிலையையும் குறிக்கலாம்.
//ippo scan seythathil ithu potirunthathu// சில மருத்துவத் தேவைகளுக்காக சில விடயங்களைக் குறிப்பிடுவார்கள். உதாரணத்துக்கு, ஒருவரது மூன்றாவது கர்ப்பத்தின் போது ரிப்போர்ட்களில் முதல் கர்ப்பம் இரண்டாம் கர்ப்பம் பற்றிய குறிப்புகள் இருக்கும். உங்களைப் பொறுத்த வரை, இது அபார்ஷனுக்கு முன்பான நிலையைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிடவே இல்லை.
நீங்கள் முழுமையாக எல்லாக் கதையையும் சொல்லியிருக்கிறீர்களா என்பது தெரியாது. அதனால் இது ஊகம் தான்.
//doctor pakkala late aguthunnu vanthuten kulanthai veru ullathu athan vanthuten// இப்படிச் சொல்வதற்காகக் குறை எண்ண வேண்டாம். இது கவலையீனமாக இருக்கும் விடயம் அல்ல. //kulanthai veru ullathu// அதனால் தான் இன்னும் கவனமாக ஒழுங்காக சிகிச்சைகளை எடுத்தாக வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம்.
//Tablet vaithu abortion seythu// மருத்துவர் சொல்லித் தான் செய்திருப்பீர்கள். அப்படியானால் மருத்துவர் அபிப்பிராயத்தைக் கேட்பதே நல்லது. நீங்களாக மாத்திரை எடுத்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.
//enna mathiri treatment kudupannga// அது உங்கள் நிலையையும் டாக்டரையும் பொறுத்தது. இப்போ இங்கு கேட்டு, மனதைக் கலவரப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்; கிடைக்கும் பதில்களால் கவனமில்லாமல் இருக்கவும் வேண்டாம். சிலது... இப்படி விடயம் தெரியாதவர்களிடம் பதில் பெறுவதை விட அமைதியாக இருப்பது ஆரோக்கியமானது. சில விதமான பதில்கள்... மீண்டும், 'வீட்டில் குழந்தை இருக்கிறது,' என்று கவலைப்பட வைக்கும். கர்ப்பம் முழுமையடந்து பிரசவம் என்று வந்தால்... அப்போ குழந்தை வீட்டில் இருக்கு என்று வீட்டிலேயே பிரசவம் பார்ப்பீர்களா? நிச்சயம் மாட்டீர்கள். ஏதாவது வழி இருக்கும் இல்லையா? தேவை வந்தால் குழந்தையைப் பார்க்க மாற்றுவழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே தவிர உங்கள் சிகிச்சையைப் பின்போடக் கூடாது.
- இமா க்றிஸ்
Nanri ma scanla chinna pulli
Nanri ma scanla chinna pulli mathiri irunthathu athan payanthu poi ketten
Evening doctor pakkanum onnum problem illama irukkanumnu nenakkiren
Abortion piragu bleeding 6
Abortion piragu bleeding 6 naal than irunthathu ithu sariya ma illai abortion ana innum athiga naal bleeding irukkum
ரேகா சரவணன்
//6 naal than irunthathu ithu sariya// அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். மீதியை மருத்துவர் சொல்லுவார்.
- இமா க்றிஸ்
imma ma
enaku kulandai peradu endrudan 62 nal agudu enum bleeding stop agala hospital pona edhu normal nu sldranga Ena ma pndrdu yedavadu tips kudinga pls
I love babieeeeeeee
டெனி
//62 nal agudu// இன்று ஒன்பது வாரங்கள் அதாவது இரண்டு மாதங்களும் ஒரு வாரமும்!!
//enum bleeding stop agala// நிறையக் கேள்விகள் தோன்றுகின்றன. பிரசவத்தின் போது ஆரம்பத்தில் இருந்ததிலிருந்து குறைந்திருக்கிறது அல்லவா? குறைந்து திரும்பவும் கூடிற்றா! தினமும் அண்ணளவாக எத்தனை பாட்ஸ் பயன்படுத்துகிறீர்கள்? அல்லது லைனர்கள் மட்டும் போதியதாக இருக்கிறதா? அல்லது அதுவும் தேவையில்லை எனும் அளவு குறைவாக இருக்கிறதா? நீங்கள் சொல்வது ப்ளீடிங்கா ஸ்பாட்டிங்கா? என்ன நிறமாக இருக்கிறது? ப்ளீடிங் கர்ப்பமாகும் முன் மாதவிடாய் சமயம் இரண்டாவது நாள் அன்று இருந்த அளவு இருக்கிறதா? அதை விடக் கூடுதலா குறைவா? எந்த நேரத்தில் அதிக இரத்தப் போக்கு இருக்கிறது? வலி அல்லது வேறு ஏதேவது சிரமங்கள் இருக்கிறதா?
//hospital pona edhu normal nu sldranga// எப்போ போனீங்க என்று நீங்க சொல்லவில்லை. எப்போ போனீங்க? எத்தனையாவது நாள்?
நீங்கள் அம்மா / அத்தை வீட்டில் இருக்கிறீர்களா அல்லது தனியாக இருக்கிறீர்களா? வீட்டு வேலைகளையெல்லாம் யார் பார்க்கிறார்கள்? உதவிக்கு ஆட்கள் இருக்கிறார்களா?
எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லுங்கள். திரும்ப வந்து படித்துப் பார்க்கிறேன்.
உங்களுக்கு ப்ளீடிங் என்று பெரிதாக இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் நீங்கள் இத்தனை நாட்கள் கழித்தும் இலகுவாக வந்து அறுசுவையில் கேள்வி வைக்கும் நிலையில் இருந்திருக்க மாட்டீர்கள். உங்களைப் பாராத இமாவுக்குத் தோன்றுவது இது. டாக்டர் உங்களை நேரில் பார்த்திருப்பார். நீங்கள் வீக்காகவோ அனீமிக்காகவோ இருப்பதாகக் கண்டிருந்தால் உங்களுக்கு ப்ளீடிங் இல்லாவிட்டாலும் கூட ஏதாவது பரிகாரம் / ஆலோசனை சொல்லியிருப்பார். அவர் பார்வைக்கு நீங்கள் ஆரோக்கியமாகத் தெரிந்திருக்கிறீர்கள்.
சிறுநீர் & சமிபாட்டுக் கழிவுகள் ஒழுங்காக வெளியேற வேண்டும். டாய்லட் போக வேண்டும் என்னும் உணர்வு வராவிட்டாலும் நீங்களாக இடைக்கிடை போக வேண்டும். டாம்பன்ஸ் பாவிக்க வேண்டாம். ஒரு முன்னெச்சரிக்கைக்காக, நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை பாட் மாற்றுங்கள். தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
nanum ammavum oreye compound la than irukom ma enaku bleeding 5 to 6 drop than varudu vetu vellai Nan than sairan ma 40 days la hospital ponom normal nu sonanga Nan 5 hrs ku oruka pad mathiruvan ma papa porandu avalava bleeding ila 20 days ku mela than Nala bleeding aga arambichudu ma aprm edaila 5 days bleeding ila aprm marubadiyum bleeding achu epo varaikum stop agala ma morning la irundu bleeding ila nit bleeding agudu Ena pndrdu ma nenga keta kelvi kulam badil soli irukan nu nenaikuran ma enanla tamil type pna mudiyala ma sry
I love babieeeeeeee