குழந்தை தலையில் கட்டி போல உள்ளது..

என் குழந்தைக்கு ஒரு வயது ஆகிறது... அவ தலைல அதாவது உட்சிக்கு பக்கத்துல ஒரு கட்டி மாறி இருக்கு... நான் அதை ஒரு பத்து நாட்கள் முன்னாடி தான் பாத்தன்.. அவளுக்கு முடி நிறைய இருக்கு அதனால எனக்கு தெியவில்லை.. அது எப்ப எப்டி வந்துசுனு தெரியல... நான் அதை முதல்ல பாக்கும் போது கீழ விழுந்து நான் தான் கவனிக்காம விட்டேன் nu நினைச்சன்... ஆன கீழ விழுந்தா உட்சி பக்கத்துல அடி பட வாய்ப்பு இல்லை.. நான் டாக்டர் கிட்ட போயி வந்தன் அவர் அதெல்லாம் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாரு...

ஆனால் நான் இது எதனால் வந்துசுன்னு கேக்க மறந்துடன்... அவர் இது ஒன்னும் இல்லனு சொன்னது அந்த டைம் நிம்மதியா இருந்துச்சு... ஆனா திடீர்னு ஒரு கட்டி சும்மா வராது.. இது என் வந்துச்சு எதனல இப்டி இருக்கு. சரி ஆகுமா .. இல்லை நான் வேற டாக்டர் பாக்கணுமா ... ஆனா நான் தொட்டால் அவளுக்கு வழி இல்லை... இத பத்தி எனக்கு பதில் சொல்லுங்க... ரொம்ப கஷ்டமா இருக்கு... எதாட்சு ஒன்னு வந்துட்டே இருக்கு .. please இத பத்தி தெரிஞ்சவங்க கண்டிப்பா பதில் சொல்லுங்க please....

//கீழ விழுந்தா உட்சி பக்கத்துல அடி பட வாய்ப்பு இல்லை.// இல்லைதான். விழாமலே உச்சியில் அடிபடலாமே! மேல் பாதி கதவு திறந்திருக்கும் பான்ட்ரி கப்போர்ட் அல்லது திறந்திருக்கும் லாச்சியின் கீழே தவழ்ந்து போய் எழுந்தால் உச்சியில் தட்டுப் படலாம். உங்கள் வீட்டில் இப்படி வேறு ஏதாவது இடம் இருக்கிறதா? அல்லாமல் ஒரு கதிரையின் அருகே தரையில் உட்கார்ந்து இருந்தால் கூட, கையை ஊன்றி எழும் போது குனிந்தபடிதான் குழந்தைகள் எழுவார்கள். உச்சியில் அடிபடலாம். சின்னதாக பரு ஒன்று இருந்து சீப்புப் பட்டு உடந்திருக்கலாம். அல்லது முடி இழுபட்டு அதனால் வீக்கம் வந்திருக்கலாம். குழந்தை தானே விளையாட்டுக்கு எதனாலாவது தலையில் அடித்து இருக்கலாம்.

சிவந்து இருக்கிறதா? சீப்புப் பட்டால் வலியைக் காட்டுகிறாரா? கட்டு இருக்கும் இடம் சூடாக இருக்கிறதா? சீழ் பிடித்தாற்போல் இருக்கிறதா? தலையில் வேறு எங்காவது சின்னதாக கட்டுகள் இருக்கின்றனவா? இவற்றில் எவையும் இல்லாவிட்டால் யோசிக்க வேண்டாம். ஆனால் வற்றும் வரை கவனித்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்க சொன்ன மாதிரி அடிபட எந்த பொருளும் வீட்ல இல்ல நான் அவள மட்டும் தான் கவணிட்சுட்டு இருக்கேன்.. அவளுக்கு அங்க புண்ணோ சீழ் சூடவோ இல்லை.. வலியும் இல்ல... ஆனா வீக்கம் மட்டும் இருக்கு...

மருத்துவர் பிரச்சினை இல்லை என்று சொல்வதால் ஒன்றும் செய்ய வேண்டாம். ஆனால் தினமும் மாற்றங்கள் இருக்கிறதா என்பதைக் கவனித்து வாருங்கள். யோசனையாக இருந்தால் அப்போது மீண்டும் காட்டலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா

என் குழந்தைக்கு கையில் சிவப்பு நிற கட்டி உள்ளது. டாக்டர் அது hemangioma என்று சொல்கிறார். Operation பண்ண சொல்றார். குழந்தைக்கு 2 வயது தான். ஒரே குழப்பமா உள்ளது தோழிகளே. இந்த கட்டி தானே போகதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

God is love

அனேகம் தானாக சிறிதாகி மறைந்து போகும். இத்தனை காலம் எடுக்கும் என்பதைச் சொல்ல முடியாது. இருக்கும் இடத்தினாலோ அதன் அளவினாலோ மருத்துவர் அப்படிச் சொல்லி இருக்கலாம். குழந்தை அந்த இடத்தைக் காயப்படுத்திவிட்டால் சாதாரண காயம் ஒன்றை விட அதிக இரத்தப் போக்கு இருக்கும். சத்திரசிகிச்சை நீங்கள் யோசிக்கும் அளவு பெரியதாக இராது. செய்துவிட்டால் உங்களுக்கு நிம்மதி. குழந்தையைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமா? நீங்கள் இல்லாமல் வேறு யாருடனாவது விட வேண்டி வரும் போது கவலை இராது இல்லையா?

‍- இமா க்றிஸ்

Nandri . Hb 7 dhan iruku. Operation time la blood loss aaguma nu bayama iruku

God is love

நீங்க டாக்டர் / நர்ஸ் இல்லை என்று நினைக்கிறேன். சாமானியர்கள் உங்களுக்கும் எனக்குமே இத்தனை விஷய ஞானம் இருக்கும் போது ஒரு மருத்துவருக்கு இராதா! தவிர, சர்ஜரி - விபத்து இல்லை; எந்த எதிர்பாராத நிலையையும் எதிர்பார்த்து மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள். இது காம்ப்ளிகேட்டட் சர்ஜரியும் இல்லை.

உடல் ஓரளவு இரத்த இழப்பைத் தாங்கவும் இழக்கும் இரத்தத்தை மீண்டும் உற்பத்தி செய்யவும் கூடியது. அந்த அளவுக்கு மேல் போனால் கூட தீர்வு இருக்கிறது.

இத்தனை யோசிக்கும் நீங்கள் அந்தக் கட்டி தானாக உடைந்தால் பக்கத்தில் மருத்துவர் இருக்க மாட்டார் என்பதையும் யோசிக்க வேண்டாமா! அப்போது இரத்தம் வெளியேறாது என்று நினைக்கிறீர்களா? கட்டாயம் சத்திரசிகிச்சைக்குப் போகச் சொல்லவில்லை உங்களை. யோசித்துப் பார்க்க வைக்க சில விடயங்களைச் சொன்னேன், அவ்வளவுதான். :-)

‍- இமா க்றிஸ்

தங்கள் கருத்துக்கு நன்றி. கொஞ்சம் தெளிவு பிறந்து உள்ளது

God is love

வணக்கம். என் குழந்தைக்கு 55 நாட்கள் ஆகின்றது. அவனுக்கு பசும்பால் கொடுத்ததால் அவன் மலம் கழிக்கும் போது தண்ணீராக இருந்தது. மேலும் மலம் நூல் நூலாக இருந்தது. டாக்டரிடம் சென்று மருந்து கொடுத்ததில் மலம் தண்ணீராக போவது சரி ஆகிவிட்டது. ஆனால் இன்னும் நூல் நூலாக போவது மாறவில்லை. இன்னும் எடை கூடாமல் அப்படியே இருக்கிறான். காரணம் தெரியாமல் மிகவும் கவலையாக உள்ளது. மேலும் அவனுக்கு நான் பால் கொடுக்கும் போது சரியான முறையில் தலையை பிடிக்காததால் அவன் தலை நீண்டுவிட்டது. இரண்டு மாதம் ஆக போகிற நிலையில் அவன் தலையை உருட்டி சரி செய்ய முடியுமா? தயவுசெய்து சிறந்த தீர்வு கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்