சமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா ?

சமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா? நான் மீன் குழம்பு செய்தால் செய்த அன்று காரகுழம்பு போல் உள்ளது. நான் சமையல் செய்த பாத்திரத்திலே உணவை வைப்பது வழக்கம். மறுநாள் வேறு பாத்திரத்தில் மாற்றி வைத்துவிடுவேன். மீன் குழம்பு மறுநாள் நல்ல கம கம மணத்தோடும் சுவையோடும் இருக்கிறது.

//சமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா?// இது உணவையும், பாத்திரத்தையும், உங்கள் ஊர்க் காலநிலையையும், நீங்கள் எவ்வளவு நேரம் உணவை வைத்திருக்கப் போகிறீர்கள் என்பதையும் பொறுத்தது.

புளி சேர்த்துச் சமைக்கும் உணவுகளை உலோகப் பாத்திரங்களில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. அமிலம் உலோகங்களுடன் தாக்கமுறும். பரிமாறுவதற்காக மேசையில் எடுத்து வைப்பது பரவாயில்லை, கொஞ்ச நேரம் தானே! தரமான எவர்சில்வர் பிரச்சினை இராது. கண்ணாடிப் பாத்திரங்கள், மட்பாத்திரம் அல்லது செராமிக் பாத்திரங்கள் பாதுகாப்பானவை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்