மீன் குழம்பில் மீன் சீக்கிரம் ஊற டிப்ஸ் ப்ளீஸ்

நான் வைக்கும் மீன் குழம்பு செய்த அன்று கார குழம்பு போல் உள்ளது. ஆனால் மறுநாள் மீன் குழம்பில் மீன் ஊறி அட்டகாசமான சுவையுடன் உள்ளது. குழம்பில் மீன் ஊறினால்தான் குழம்பு சுவையாக இருக்கும் என்று ஆன்லைனில் பார்த்தேன். ஆனால் என் பெரியம்மா வைக்கும் மீன் குழம்பு செய்த அன்றே சுவையும் மணமும் ஆளை தூக்கும்.டிப்ஸ் தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ் .

//என் பெரியம்மா வைக்கும் மீன் குழம்பு செய்த அன்றே சுவையும் மணமும் ஆளை தூக்கும்.// 1. அவர்கள் பயன்படுத்தும் அதே மிளகாய்ப் பொடி & மீதிப் பொருட்களைச் சேருங்கள். 2. மீன் ஐஸ் போட்டதாக‌ இருக்கக் கூடாது. 3. எல்லாவற்றியும் பிரட்டி ஊற‌ வைத்துவிட்டுப் பிறகு சமையுங்கள்.

சமைத்து முடிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சட்டியை இறக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள். அந்த மெல்லிய‌ வெப்பம் சுவை ஊறுவதற்கு உதவும்.

முன்பே இன்னொரு மீன்குழம்பு கேள்வி எங்கோ வைத்திருந்தீர்களோ!! படித்த‌ கேள்வி போல் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

மீன் குழம்பு செய்யும் போதும் சில நாள் புளி சேர்த்து சில நாள் தக்காளி சேர்த்து சில நாள் மாங்காய் சேர்த்துன்னு செய்தால் சுவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.சிலவகை மீன் குழம்பில் நான் எப்போதுமே இறுதியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி இறக்குவேன். மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். வெந்தயத்தை வறுத்து பொடித்து கால் தேக்கரண்டி அளவு இறக்கும் முன் தூவினாலும் சுவையும் மணமும் சூப்பராக இருக்கும்.

மீன் குழம்பு வைக்கும் போது மீன் துண்டுகளில் உப்பும் காரமும் நன்றாக பிடிக்க மீனை சுத்தம் செய்த பின் சிறிது புளிக்கரைசல் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பத்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து விட்டு வழக்கம் போல் குழம்பு செய்தால் நன்றாக இருக்கும். மீன் வறுவல் செய்யவும் இப்படி ஊற வைத்து விட்டு பின்னர் நீரை வடித்து மசாலா பிரட்டி பொரித்தால் நன்றாக இருக்கும்.

இது அருசுவை ல‌ சொன்னது தா ல் நா நா மீன் குழம்பு அருசுவை ல‌ பாத்து தா வச்ச , என்னைக்கும் இல்லாத டேஸ்ட் அதுல இருந்து , நீங்களும் டிரை பன்னிபாருங்க‌ , நம்ம அரைக்கற பொருள் ல உம் இருக்கு

சிஸ்டர் ஆமா முன்னமே கேட்ருந்தேன். கண்டிப்பா try பண்ணி பாத்துட்டு சொல்றன். நன்றி.

உங்கள் டிப்ஸ்க்கு நன்றி சிஸ்டர்.

மேலும் சில பதிவுகள்