Abortion

நான் அறுசுவைக்கு புதுசு, நான் மிகவும் கவலையில் இருக்கிறேன், அதற்கு காரணம் எனக்கு அபார்சன் ஆனது தான், எனக்கு 9த் ஜூன் பீரியட்ஸ் வந்தது, 40வது நாளில் pregnancy test செய்தேன், இரண்டு கோடு டார்க்காக (positive) விழுந்தது, இதனால் நாங்கள் மிகவும் சந்தோசமாக இருந்தோம், இந்த சந்தோஷம் எங்களுக்கு நீடிக்காமல் 41 வது நாளில் அதாவது நேற்று எனக்கு ப்ளீடிங் வர ஆரம்பித்தது விட்டது, எங்கள் வீட்டில் அனைவரும் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் பிளீடிங் வர தான் செய்யும் என்று சொன்னார்கள், பின்பு நாங்கள் அடுத்த அரை மணி நேரத்திலேயே ஹாஸ்பிடலிற்கு சென்றுவிட்டோம், அங்கு டாக்டர் ஸ்கேன் செய்து பார்க்க சொன்னார்கள், ஸ்கேன் ரிப்போர்டில் கரு பாதிக்கு மேல் வெளியே வந்துவிட்டதாக சொன்னார்கள், எங்களுக்கு மிகவும் வருத்தமாகி விட்டது, மீதி வெளியேறுவதற்கு டேப்லட் கொடுத்தார்கள், எனக்கு புரியவில்லை தோழிகளே, எதற்காக இப்படி ஆனது, டாக்டரிடம் கேட்டால் அவர்கள் சொன்னார்கள் வெயிட் தூக்கினால் இப்படி நடக்கலாம் என்று சொன்னார்கள், ஆனால் நான் நிச்சயமாக எந்த வெயிட்டும் தூக்கவில்லை, நான் ரெஸ்ட்லயே தான் இருந்தேன், எதற்காக இப்படி ஆனது என்று புரியவில்லை, இதுபோல யாருக்காவது நடந்திருக்கா, அப்புறம் எனக்கு ப்ளீடிங் நேற்று மிகவும் அதிகமாக வந்தது, அதனை என்னால் உணர முடிந்தது, பிளீடிங் வந்ததிலிருந்து என் அடிவயிறு இப்பொழுது வரை வலித்து கொண்டே இருக்கிறது,.. டாக்டர் நான்கு நாள் கழித்து வர சொல்லியிருக்கிறார்கள்,.. பலீஸ் இது போல தானாகவே கரு களையுமா என்று சொல்லுங்கள் தோழிகளே
<!--break-->

சில நேரம் ஏன் இப்படி நடக்குதுனு யாராலயும் சொல்ல முடியாது பா. எனக்கும் இப்படி நடந்திருக்கு. வீட்டுக்கு வெள்ளை அடிச்சாங்க நான் வேலை செய்ததால கரு கலைந்தது. சுண்ணாம்பு சூடு. கரு கலைவதற்க்கு வேற காரணம் என்னனா எடை அதிகமா தூக்குனா, கரு சரியா வளர்ச்சி அடையாம இருந்தா, மனதில் எதாவது வருத்தம் இருந்தாலும் கரு கலையும். வருத்தபடாதிங்க, மீண்டும் கர்ப்பம் ஆவிங்க.

//இது போல தானாகவே கரு களையுமா// தானாகவே கலைவது உண்டு. ஓரிரண்டு நாட்களே என்றாலும் மனதுக்கு வெகு கஷ்டமாக இருக்கும் இல்லையா!

//நான் நிச்சயமாக எந்த வெயிட்டும் தூக்கவில்லை// அது மட்டும் என்றல்ல, வேறு காரணிகளும் இருக்கின்றன. காரணம் என்னவாக இருந்தாலும் ஒரு சின்ன விடயத்தை மனதில் எடுத்துக் கொள்ளுங்கள். பிற்பாடு ஆரோக்கியமாக வளரக் கூடிய குழந்தையாக இருந்திருதால் அது எந்தத் தடையையும் தாண்டி வளர்ந்திருக்கும். ஏற்றுக் கொள்ளச் சிரமமாக இருந்தாலும், 'நல்லதற்கே' என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

ப்ளீடிங் பீரியட்ஸை விட சற்று அதிகமாக இருக்கலாம். யோசிக்க வேண்டிய‌ அளவு அதிகமாக‌ இருந்தால், நான்கு நாட்கள் என்று காத்திராமல் முன்பே போகலாம். வலிக்கு... பாரசெடமோல் எடுக்கலாம். வெந்நீர்க் குளியல் உதவும். கொஞ்சம் ஓய்வு எடுங்க. மனது வலிக்கும் போது உடல் வலி பெரிதாகவே தெரியும்.

முடிந்தவரை மனதைச் சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருக்கப் பாருங்கள். கூடிய விரைவில் மீண்டும் தாய்மையடைய அன்போடு என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

நான் மிகவும் பாதுகாப்பாக தான் இருந்தேன் பா, ஆனால் எனக்கு பேக் பெயின், அடி வயிற்றில் வலி இருந்து கொண்டே இருந்தது, என் வீட்டில் சொன்னதற்கு கர்ப்பமாக இருக்கும் போது இது போல தான் வலி இருக்கும் என்றார்கள், அதனால் தான் நானும் விட்டுவிட்டேன், முன்கூட்டியே மருத்துவரை சந்தித்திருந்தால் இப்படி நடக்காமல் இருந்திருக்கும் இல்லையா சிஸ்

ஆமா சிஸ், ஒருநாள் என்றாலும் அது மிகப்பெரிய வேதனையை தந்தது, எனக்கு எப்பொழுதும் நான்கு நாட்கள் பிளீடிங் இருக்கும் ஆனால் இந்த தடவை முதல் நாளிலேயே அதிகமாக ஏற்பட்டது, இரண்டாவது நாளில் குறைந்து விட்டது, அதனால் மருத்துவரை சந்திகபோகவில்லை, ரொம்ப நன்றி சிஸ் உங்க பதிலுக்கு

ஆமா பா. கடவுள் வேற எதோ நல்லதா தரலாம்னு இருக்கார் போல். அடுத்த முறை கர்ப்பம் ஆகும் போது இன்னும் கவனமா இருப்பிங்கல்ல.

தோழிகளே...

நான் சொல்லிருந்தேன் இல்லையா எனக்கு அபார்சன் ஆகிவிட்டது என்று, கரு பாதிக்கு மேல் வெளியே வந்துவிட்டது, மீதி வர டேப்லட் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லிருந்தேன், நான்கு நாட்கள் கழித்து வர சொல்லிருந்தார்கள், நேற்று நான் ஹாசப்பிடல் சென்றிருந்தேன், அங்கு மீண்டும் இன்னொரு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்கள், நாங்களும் எடுத்தோம், ஸ்கேன் ரிப்போர்டில் இன்னும் அந்த மீதி கரு வெளியே வர வில்லை என்று வந்திருக்கு, க்ளீன் பண்ண வேண்டும் என்கிறார்கள், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது, கிளீன் பண்ணுறது என்றால் எப்படி செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா தோழிகளே, அனைவரும் பயம் காட்டுகிறார்கள், கிளீன் பண்ணாமலேயே சிறிது கருவை வெளியேற்ற முடியுமா?, ப்ளீஸ் rply பண்ணுங்க தோழிகளே

Bayapadadhinga sis...clean panradhuna D&C nu solluvanga..stomach la iruka balance karuva veliya eduthuruvanga sis...appo than next baby form aagum endha badhippum illama...maximum 2 hours aagum sis...enakum first time abortion aagum pogum indha mathery than pannanga...pain edhum irukadhu sis...

நீங்க pain இருக்காதுனு சொல்றீங்க, ஆனால் மற்ற எல்லாரும் ரொம்ப வலிக்கும் னு சொல்றாங்க, அதான் எனக்கு பயமா இருக்கு, அப்றம் உங்களுக்கு 1st baby யை அபார்சன் பண்ணாங்களா, இல செக்கேன்டா

Enaku 1st baby sis...growth illanu abortion pannanga... Tablet moolamathan first pannanga...ungala mathery than scan panni pakkum podhu padhi than vandhuruku konjam ulla iruku stomach clean pannanum nu sonnanga...ennoda experience la pain edhum illa sis... Clean pannum podhu mayakka oosi poduvanga...so enna panranganu namaku theriyadhu...max half hr illa 1 hr kula mayakkam thelinjidum appuram endha pain um illa...again scan panni clear aagiduchu nu kattunanga...then vittuku anupitanga...na eppodhum pola casual ah than irundhen...2 days lite ah bleeding irukum appuram sari aagidum sis...matthavanga solranganu bayandha appuram ungaluku than kastam...

Appadiya ma, neenga ipo sonatha ketaparam tha konja bayam poyiruku, night lam thookame ila, ila nenachu, ipo tha konjam relax ah irku, thank u ma en bayam ponathu ungalala tha :-)

மேலும் சில பதிவுகள்