முதலில் நான் இதற்கு காக ஒரு த்ரோட் துவங்கியதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்க கிறேன் அட்மின் உட்பட .
இதனால் பல பயனுள்ள த்ரோட் மறைந்து போகலாம் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை நான் துவங்க காரணம் என்னால் மனச்சோர்வு அடைந்த தோழிகள் அனைவருக்கும் எனது சாரியை தெரிவிக்க வேண்டும் என்று தான்.
முக்கியமாக என்னை பற்றி யோசித்து தூக்கம் கேட்ட இமா அம்மாவிற்குஎன் முதல் மன்னிப்பை கேட்கிறேன். அவர் அந்த இலையை படிக்க மாட்டேன் என்றதானால் இந்த இலை.
இப்போ தான் புரிகிறது என்னால் எவ்வளவு பெரிய மன கஷ்டம் அனைவர்க்கும்.என்னை மன்னித்து விடுங்கள். 1000 முறை மன்னிப்பு கேட்கிறேன் . இது வேறும் வாய் வார்த்தை அல்ல என் மனதில் இருந்து ஏற்படுகிறது.
என் மீதும் என் குழந்தை மீதும் அக்கறை கொண்ட அனைத்து சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.
என்னை மன்னித்து விடுங்கள் எதையும் யோசித்து செய்யும் திறன் இருந்தும் யோசிக்காமல் இது போன்ற எண்ணங்களை பகிர்ந்து என் தவறு . இருப்பினும் எனக்கு மிகவும் சரியான நேரத்தில் தீர்வு கிடைத்தது. நன்றி.
இப்போது நான் உணர்கிறேன் . நான் இன்னும் டீன் ஏஜ் பருவத்தில் தான் இருக்றேன். எதையும் செய்து விடலாம் என்ற அசட்டு துனிச்சல் தான் இதற்கு காரணம்.இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நான் சிந்திக்க வில்லை. நான் சிலர் கூறியதை கேட்டு முட்டாலாக சில நாள் வாழ்ந்து விட்டேன். இதற்கு முன்னதான என் பதில் எவரையாவது காய படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
நான் எடுத்த அந்த முடிவால் என் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிக்குமாயின் அந்த குற்ற உணர்வு என்னை வாழ்நாள் முழுவதும் என்னை கொண்று இருக்கும்.
என்னை தெளிவு படுத்திய இமா அம்மாவிற்கும் மற்ற சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உறுதியாக கூறுகின்றேன் நான் மருத்துவமனை உதவியை கண்டிப்பாக ஏற்று கொள்வேன். முதல் பரிசோதனை போது 15 நாள் கழித்து வர சொன்னாற்கள் நான் கண்டிப்பாக மீண்டும் மருத்துவமனை செல்வேன்.
என் குழந்தையை நான் நிச்சயமாக நன்றாக பார்த்து கொள்வேன்.இதை அனைத்தும் மறந்து நான் பழைய படி அறுசுவையில் தொடர்ந்து வருவேன் . உங்கள் அனைவரின் அன்பு எனக்கும் என் குழந்தைகும் என்றும் தேவை.
பி.கு: நான் நிறைய எழுத்து பிழை செய்துள்ளேன் அதற்கும் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.
கார்த்தி சத்யா
//உறுதியாக கூறுகின்றேன் நான் மருத்துவமனை உதவியை கண்டிப்பாக ஏற்று கொள்வேன்.// எனக்கு இது போதும் கண்ணா. சந்தோஷம். அட்மின் தான் என்னை இந்தப் பக்கம் அழைத்து வந்தாங்க. :)
//முதல் பரிசோதனை போது 15 நாள் கழித்து வர சொன்னாற்கள் நான் கண்டிப்பாக மீண்டும் மருத்துவமனை செல்வேன்.// நல்ல முடிவு.
//என் குழந்தையை நான் நிச்சயமாக நன்றாக பார்த்து கொள்வேன். இதை அனைத்தும் மறந்து நான் பழைய படி அறுசுவையில் தொடர்ந்து வருவேன். //சகோதரிகள் ஒருவரை ஒருவர் சரியானபடி வழிநடத்தவும் ஆறுதற்படுத்தவும் தான் அறுசுவை இருக்கிறது. உங்கள் முடிவுகள் எனக்கும் ஆறுதலைக் கொடுக்கிறது.
//உங்கள் அனைவரின் அன்பு எனக்கும் என் குழந்தைகும் என்றும் தேவை.// அது என்றும் இருக்கும்.
உங்கள் இருவருக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்.
- இமா க்றிஸ்
கார்த்தி சத்யா
மிக்க மகிழ்ச்சி..மீதி பதில்களை இமா அவர்கள் சொல்லி விட்டார்..
அவர் மீண்டும் வந்ததில் இன்னும் மகிழ்ச்சி..
இன்று மகிழ்ச்சியான நாள்..
இமா அம்மா
எனக்கு இது போதும் கண்ணா. சந்தோஷம். அட்மின் தான் என்னை இந்தப் பக்கம் அழைத்து வந்தாங்க. :)/// நன்றி மா .எங்கு நீங்கள் வராது இருபிற்களோ என்று நினைத்தேன். அட்மின் கும் நன்றி.
உங்கள் இருவருக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்.// நன்றி மா.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
இந்து
இன்று மகிழ்ச்சியான நாள்/// ஆம் கா .அப்படி தான் நான் நினைக்கிறேன் .நீண்ட நாள் குழப்பத்திற்கு பிறகு தீர்வு கிடைத்து. நன்றி.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Karthi sathia
நல்ல முடிவு.
--
Karthisathya
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள். ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுக்க என் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும்.
கார்த்தி சத்யா
நீங்க உங்க முடிவை மாற்றி கொண்டதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு என் வாழ்த்துக்கள்.
- பிரேமா
TQ frd
TQ sisters.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Karthi sathiya
நீங்க நல்ல முடிவு எடுத்துருக்கீங்க , வாழ்த்துக்கள், நா இன்னைக்கு தா உங்க மெசஜ் பாத்த , முதல்ல உங்க கிட்ட சொல்லரதுக்கு முன்னாடி , நா என் கணவர் கிட்ட சொன்ன , நா வீட்ல பொலம்பிட்டே இருந்த , அவங்க என்னா போன்னே கொஞ்ச நாள் தரமாட்டன்டாங்க, அப்றமா நா அத பத்தி யோசிக்கா மாட்ட, அப்டீன்னு ரிக்வஷ்ட் பன்னி போன் வாங்கன. டுடே வெரி ஹாப்பி.............................................................
,,,,
குட்டி பாப்பா ஆரோக்கியமா பிறக்க வாழ்த்துக்கள் அக்கா