சிசேரியன் வலி

சிசேரியன் செய்த இடத்தில் இடது பக்கத்தின் மேலே வலி உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் கர்ப்ப பை எந்த பக்கம் இருக்கும். கர்ப்ப பை சுருங்க வலி இருக்குமா அல்லது வேறு எதற்காக வலி இருக்கும்.... உதவுங்கள்....

//கர்ப்ப பை எந்த பக்கம் இருக்கும்.// நடுவில்.
//கர்ப்ப பை சுருங்க வலி இருக்குமா// இருக்கலாம்.
//சிசேரியன் செய்த இடத்தில்// எத்தனை நாட்கள் கடந்திருக்கிறது சிசேரியன் செய்து? சத்திரசிகிச்சை ஒன்று நடந்திருக்கிறது. காயம் ஆறும் சமயம் இப்படி இருப்பது உண்டு.

//வேறு எதற்காக வலி இருக்கும்.// பொதுவாக‌... தசைப்பிடிப்பு, வாயுப் பிரச்சினை, வயிற்றுப் போக்கு, உணவு விஷமாதல், அல்சர், ஹேணியா. உணவு ஒவ்வாமைக்கு இப்படி வருவது சாதாரணம்.

வேறு காரணங்களும் இருக்கலாம். உங்களுக்கு யோசனையாக‌ இருந்தால் டாக்டரிடம் ஆலோசனைக்குப் போவது நல்லது. அவர்களுக்கு எங்கே எப்படி வலித்தால் என்னவாக‌ இருக்கும் என்று அதிகம் தெரியும்.

‍- இமா க்றிஸ்

சிசேரியன் செய்து 1மாத ஆகிறது. அத்துடன் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளது. டாக்டர் இடம் போய் வந்தோம் மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை.வயறு முழுவதும் வலிக்கமால் ஓரு பக்கமாக வலிக்குது அதுதான் என்ன என்று புரியவில்லை.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

நீங்கள் விபரங்களை முழுமையாகக் கொடுக்கவில்லை.
//குடும்ப கட்டுப்பாடு// என்ன விதமானது?
//டாக்டர் இடம் போய் வந்தோம்// என்ன சொன்னார்?
//மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை.// என்ன மாத்திரை?
// வலிக்குது// நோகிறதா? குத்துவது போல் வலியா?

ஒன்றும் இராது என்றே நினைக்கிறேன். பொறுக்க முடியவில்லை என்றால் திரும்பப் போய்க் காட்டுங்க. அறுசுவையில் கேட்டு... பதில் கிடைக்கக் காத்திருக்க வேண்டாம். நாங்கள் சொல்லும் பதில்கள் சரியாக இருக்க வேண்டும் என்பது இல்லை.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி அம்மா. நேற்று டாக்டர் இடம் திரும்பவும் போய்விட்டு வந்தோம். வேறொரு மாத்திரை கொடுத்தார் இப்போது கொஞ்சம் ok....குத்துவது போலத்தான் வலிக்கிறது.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

திரும்பவும் போனது நல்லது. யோசிக்க வேண்டாம். மெதுவே சரியாகிரும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்