மனது குழப்பமாக உள்ளது

அனைவருக்கும் வணக்கம் , நான் அருசுவைக்கு புதிது, குழப்பத்திர்கு விடை தேடி வந்துள்ளேன்

திருமணமாகி 6 வருடம் ஆயிற்ரு , 3வருடம் பிற்கு குழந்தை பிறந்து 11 மாதம் ஆயிற்ரு, குழந்தைய‌ அம்மா வீட்டில் விட்ருக்கேன் நான் வேலைக்கு செல்வதால்,
இங்கு நானும் கண்வர் மட்டும் உள்ளோம், கண்வர் என்னிடம் சந்தோஷமாக இல்லை, என்னுடைய‌ வயது 25 , அவருடயது 40 இது தான் கார்ணமா?

முதலில் வயது மறைத்து திருமணம் நடந்து விட‌ , நான் பின்னாலில் தெரிந்து கேட்டு 2 நாட்கள் பிரச்சனை ,ஆதை அவர் நான் பார்துகொள்வேன் என சொல்ல நானும் இத‌ அம்மா வீட்டில் சொன்னால் தம்பி அப்பா எல்லாம் ஃபீல் பன்னுவாங்கன்னு விட்டுட்ட ,

இப்ப இருக்கற தா பாத்தா ,( நா ஒரு பொம்ம‌ மாதிரி தா தோனுது ) காலையில் சாப்பாடு செஞ்சு , ஆபிஷ் , நைட் வீட்டு வேல‌ , டின்னர் , வாரம் ஒரு முறை baby ya saturday night yeduthuttu vanthuttu monday morning kondu poai vidara varai yenakku intha kavalai illai , appram intha 5 natkaL konjamavathu kanavar kitta keadaikkara santhosam kedaikkala , baby treatement yeduthu poarantha appa doctors 10 to 18 contact la irrukka sonnanga , antha time la 10 to 18 la 5 days irruppom apram avvolothan , na baby porantha nalla santhosama irupparunnu neanacha, aana ippa vara apdi illai , yennoda aasagala na yepdi soldrathu , apdium oru nal nana keatta peasama padunnu sollittanga, na yennavea romba manasula keavalama thittitu paduthutta , apram ma k soldranga, na coimabtore la irrunthu inga friends husband torchel pathi sollumpothellam ippadium irrukkumannu thonuthu , itharku valiyea illaya, ippadium irruppangala, night bed la thirumbi padukkumpothu kal avanga bed la neetiruntha thittaranga, thottu kooda peasa viduvathillai , bike la kai vaikka pidi illai thoal meathu vaithu kai valikkuthunnu , thodaai meal vacha athukkum thittu , theriyama vachuttannu sonna athukku theriyama kooda vaikka koodathunnnnu soldranga , yen age feeling yartta soldrathu (

imaam ma & indhu akka yellarukkum aaruthal vidai soldra neenga yenakkum vidai solluveengannu nambi soldra

பிறகு என்ன சந்தோஷமாக இருங்கள்.. துணி துவைக்கும் வேலை மிச்சம் தானே..

நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்து வீட்டில் கஷ்டபட வேண்டாம் என்று கணவர் நினைத்ததாக கற்பனை செய்து கொள்ளுங்கள்..

எதையும் எதிர்பார்க்காதீர்கள் கொஞ்ச நாளுக்கு.. உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.. கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏதேனும் மாற்றம் வரும்..

உங்கள் கணவரிடம் மனம் திறந்து பேச ஏன் யோசிக்கிறீர்கள்? குறுஞ்செய்தியாக தட்டி அவருக்கு அனுப்பி விடுங்கள்..

நீங்கள் பேசினால் உங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.. உங்கள் கணவர் எதற்கெல்லாம் திட்டுகிறாரோ அவற்றை எப்படி சரி செய்வது என்று பாருங்கள்..

எதையுமே ஆண்களுக்கு அடிக்கடி சொன்னால் பிடிக்காது.. உதாரணமாக நீங்கள் சாப்பிட்டதும் குளிக்க வேண்டாம் என்று சொல்வது நல்லதாகவே இருந்தாலும்.. ஒரு தடவை சொல்லி கேட்கவில்லையா அவர்கள் மனம் போக்கில் விட்டு விடுங்கள்..

நீங்கள் அவருக்கு தேவையானவற்றை செய்து விடுங்கள்.. அவர் உடம்பை அவர் பார்த்து கொள்வார்.. உங்கள் கணவர் வீட்டில் பணம் பிரச்சினை இல்லைஎன்று தோன்றுகிறது..

இவ்வளவு பணம் கொடுத்து விட்டு மீண்டும் அப்பாவிற்கு பயந்து நிம்மதி இல்லாமல் வேலைக்கு போவதற்கு பதிலாக வேலையை விட்டு குழந்தையை அழைத்து வாருங்கள்..

நீங்கள் உங்களை வருத்திக் கொண்டு வேலைக்கு போக சொல்லி உங்கள் கணவர் சொல்லவில்லை.. உங்கள் கணவர் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்க்கவில்லை..

என்னுடைய கருத்து நீங்கள் வேலையை விட்டு விடலாம்.. வாழ்க்கையா வேலையா?

அது மட்டும் இல்லை வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த வீடு அன்பு நிறைந்த வீடாக மாறிவிடும்(இது என் அனுபவம்)

உங்கள் குழந்தை பத்து நாட்கள் மாமா, தாத்தா பாட்டி இல்லாமல் கவலை படலாம்.. ஆனால் அப்பாவின் அரவனைபப்பு கிடைத்து விட்டால் உங்கள் கணவர் நன்கு மாறிவிடுவார்.. குழந்தையும் மகிழ்ச்சியுடன் அம்மா அப்பாவிடம் வளரும்..

உங்கள் அம்மா அப்பாவிற்கு பணம் கொடுத்து குழந்தை உங்களை பிரிந்து எல்லாம் வேஸ்ட்..

இதுவும் உங்கள் குழந்தை உங்களிடம் வந்து விட்டால் மாறிவிடும்.. குழந்தை சண்டை கூட போட விட மாட்டார்கள்..

நல்ல யோசித்து பாருங்கள்..பெண் குழந்தை உங்கள் கணவருக்கு தாய் போல..

நல்ல மாற்றம் வரும்.. கணவரின் சம்பளம் குறைவாக இருந்தாலும் சமாளித்து வாழ்க்கையை வாழ பாருங்கள்..

உங்களை வேலைக்கு மீண்டும் போக சொன்னால் மட்டுமே செல்லுங்கள்.. உங்கள் கணவர் வேலைக்கு போக சொல்ல மாட்டார் என்று தான் தோன்றுகிறது..

நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்..

இலங்கையர்... எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு இங்க மஹாவுக்கு பதில் சொல்றேன் என்று இடிபாடா எதையாவது சொல்லி மாட்டிக்கப் போறேன். ;)

//அகலமான ப்ளாஸ்டிக் பாத்திரம்// நானும் கொஞ்ச நாள் அந்த வேலை பார்த்தேன். ஆனால் க்றிஸ் போடுறது குறைவு. நாலைஞ்சு துணியை வைச்சுட்டு தானே ப்ளான் பண்ணிக் கழுவுறது தான் பிடிக்குது எப்பவும். சில சமயம் வேலைல இருந்து உடனே தலைநகர் போகச் சொல்லிருவாங்க. அப்போ மட்டும் சட்டென்று ஃபோன் வரும். இன்ன இடத்துல இருக்கிற இன்னின்ன துணியை இப்படிக் கழுவி இன்ன மாதிரி உலத்தி அயர்ன் பண்ணி வைக்கச் சொல்லி. ;) இங்க இப்போ நாங்க 2 பேர் தான். 3 ப்ளாஸ்டிக் இருக்கு. ;) க்றிஸ்ஸுக்கு ஒன்று, எனக்கு ஒன்று, சமையலறைத் துணிகளுக்கு ஒன்று. படுக்கை விரிப்பு, துவாலை, தர விரிப்பு எல்லாம் சேமிக்காமல் உடனுக்குடனே கழுவி திரும்ப அதே இடத்துல போட்டுருவேன். மடிக்கச் சோம்பல். ;)

மகாவுக்கு பதில் சொல்றதா சுயபுராணம் பாடுறேன். ;) மன்னித்துக் கொள்ளுங்கள்.

//முதல் குழந்தைக்கு அத்துனை செலவும் அம்மாதான் செய்ய வேண்டும்// சமீபத்தில் குயிலின் இனப்பெருக்க முறை பற்றிய வீடியோக்கள் அதிகம் பார்க்கிறேன். சில சமயம்... இங்கு ஒரு சகோதரி, விலங்குகளின் பிரசவத்துடன் மனிதப் பிரசவத்தை ஒப்பிட்டு எழுதியிருந்தது நினைவுக்கு வரும். எமக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா அறிவுதான் பல பிரச்சினைகளை உருவாக்குகிறதோ என்று தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. ;(

//keela yezhutthu uthavi// அங்க போகத் தேவையில்லை. இங்கே நேரடியாகவே தமிழ் வரும். //romba late aaguthu ka type panna// ஆகாது கண்ணா. நீங்கள் 'romba late aaguthu ka type panna' என்று தட்டினால் அது தானாகவே, 'ரொம்ப லேட் ஆகுது கா டைப் பண்ண,' என்று தட்டீருமே! அப்படித்தான் நாங்களும் தட்டுகிறோம். எக்ஸ்ட்ராவாக எந்த வேலையும் இல்லை. //office time la chat panna// ;) தப்பு இல்லையா அது! அழகாகத் தமிழில் தட்டி இருக்கிறீங்க. நன்றி. இப்படியே தொடர்ந்தால் படிப்பவர்களுக்கு வசதி.

//சொல்லி பயனில்லை, இன்னும் மாறவில்லை‍ (மாற்றம் இல்லை)// ம். நீங்கள் அவர் போக்குக்கு மாறிவிடலாம். சின்னக் காரியம்தானே இது! நிஜமாவே சொல்றேன் கண்ணா. ஆரம்பத்தில் இருப்பது போல கிழவி ஆகும் சமயம் இருக்க மாட்டீங்க. இப்பவே வேலையை அவங்க செய்யுறாங்கன்னா.. சூப்பர், விட்டுருங்க. பிற்காலத்தில் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

//எதையுமே ஆண்களுக்கு அடிக்கடி சொன்னால் பிடிக்காது.// ஹிஹி! இந்து... ;)) ஆண்களுக்கு மட்டுமா! எனக்கும் பிடிக்காது, குழந்தைகளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. மஹாவுக்கும் கூட... இன்னும் ஓரிரண்டு தடவைகள் நாம் பதில் சொல்ல... எம்மை மெல்லிதாகவாவது பிடிக்காமல் போகும். ;)

இந்து சொன்ன நிறைய விடயங்களில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள் மகா. நான் சொல்வது வேறு; உங்கள் நிலை உணர்ந்த உங்கள் வயதொத்தவர் ஒருவர் சொல்வது வேறு. அவர் சொல்வதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

பிறகு என்ன சந்தோஷமாக இருங்கள்.. துணி துவைக்கும் வேலை மிச்சம் தானே.. // ம் சரிங்க‌ அக்கா அப்படி நினைத்து கொள்கிரேன்

எதையும் எதிர்பார்க்காதீர்கள் கொஞ்ச நாளுக்கு.. உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.. கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள். ஏதேனும் மாற்றம் வரும்.// இப்போது இது தான் என் பன்னிகொன்டிடுக்கிரேன்

உங்கள் கணவரிடம் மனம் திறந்து பேச ஏன் யோசிக்கிறீர்கள்? குறுஞ்செய்தியாக தட்டி அவருக்கு அனுப்பி விடுங்கள்..// அத்ற்கு வாய்ப்பே இல்லை அவருக்கு மெசேஜ் , சாட்டிங் எதுவும் பிடிக்காது, ( பர்த்டே செலிபிரேசன், அனிவசரி, )ஆல்சோ (மொபைல் 1100 தா வச்சுருக்காங்க‌ நா ஆச‌ பட்டு டச் போன் வாங்கி குடுத்த செமயா திட்டு மட்டும் மிச்சம் அப்றம் அவங்க சம் பீப்பில் கு மட்டும் பார்வ்ர்டு மெசேஜ் பன்னி பாத்ருக்க, இங்க‌ என்னோட‌ கசின்ஷ் விஷ் பன்னுவாங்க‌ குருப்ப்ல சாட்டிங் எதுக்கும் ஒரு ரீப்லேவும் இருக்க்கது

நீங்கள் உங்களை வருத்திக் கொண்டு வேலைக்கு போக சொல்லி உங்கள் கணவர் சொல்லவில்லை.. உங்கள் கணவர் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என்று உங்களை எதிர்பார்க்கவில்லை// வேலைக்கு போக சொன்னார் நானும் போய்கொன்டு இருக்கிரேன், இடயில் பாப்பாவா பாத்துகிரன்னு சொன்னா வேலைக்கி போன்னு சொல்லிட்டார் ,காரணம் ‍ அப்பா வேலைக்கு போகலனாலும் காசு கேக்கராங்க‌( இது மாமி வீட்டில் தெரியாது) அதுக்கு வேன்டி கன்டிப்பா வேலைக்கு போக‌ சொல்லிட்டார், நான் சம்பாரிச்சு உங்க் வீட்டு பிரச்சனைக்கு பணம் தரமுடியாது( நியாயமானது தா என்று ) நா போய்ட்டு இருக்கா, ( அப்பா இப்ப‌ நா வேலைக்கு போர்துல குரியா இருக்காங்க‌ ரீசன் மந்திலி என்னால ஒரு இன்கம்)
என்னுடைய கருத்து நீங்கள் வேலையை விட்டு விடலாம்.. வாழ்க்கையா வேலையா?/ மாமி வீட்டில் குழந்த‌ பிரந்து 5 மாதத்திலிருந்து வேலைக்கு போ பைய‌ சம்பாதியத்தா செலவு பன்னலான்னு இருக்கயான்னு நொடுக்கு நொடுக்கு கேள்வி ‍,

.

இதுவும் உங்கள் குழந்தை உங்களிடம் வந்து விட்டால் மாறிவிடும்.. குழந்தை சண்டை கூட போட விட மாட்டார்கள்..

நல்ல யோசித்து பாருங்கள்..பெண் குழந்தை உங்கள் கணவருக்கு தாய் போல.. // வாய்ப்பு இல்லாம்ல் தவிக்கிரேன்

நல்ல மாற்றம் வரும்.. கணவரின் சம்பளம் குறைவாக இருந்தாலும் சமாளித்து வாழ்க்கையை வாழ பாருங்கள் / எங்கள் வீட்டில் வேரு , என்னுடய சம்பள்ம் ஏடிம் எல்லாம் அவர் கையில் , அவருடய‌ இன்க்ம் இன்னமும் எனக்கு தெரியாது ( கேட்டேன் திட்டு அமைதியாய் விட்டுவிடேன் ) கடன் பிர்ச்சனை இல்லை, கடைக்கு கூப்பிடு போக‌ மாட்டாங்க‌ லிஷ்டு குடுதா அவருக்கு வேன்டாத‌ பொருலை விட்டுட்டு மீதி வாங்கி வந்துவிடுவார் , ( நான் என் உணவு முரயை மாற்றிவிட்டேன்) பஸ் ஃபேர் இல்லை அவரே பிக்கப் டிராப் எல்லாம்(அலைச்சல் மிச்சம் நினச்சுக்கற)
உங்களை வேலைக்கு மீண்டும் போக சொன்னால் மட்டுமே செல்லுங்கள்.. உங்கள் கணவர் வேலைக்கு போக சொல்ல மாட்டார் என்று தான் தோன்றுகிறது.. / சொன்னால் நானும் எனது மகளுடன் வாழ்க்கையை ரசிப்பேன் .

நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.. / எனது கையின் இல்லை என்னவரான‌ அவரின் கையில்

மாகாவின் + பாயின்ட் ( எனது கண்கள் கலங்குவது என் தலயனையில் மட்டும் எப்போதும் உதடு சிரிப்பை விடுவதில்லை அனைவரிடமும் ) என் பிரச்சன்ய யாரிடமும் சொல்வதில்லை , நாடுவதில்லை உங்களிடம் முகம் தெரியாத‌ நண்பர்கள்

அப்ப‌ என்ற ஆணிடம் கிடைக்காதா அன்பு கண்வனிடம் கிடைக்கும் என்று எதிபார்த்து ஏமாற்றமே மிச்சம்

தப்பு மஹா உங்கள் அப்பாவிற்காக வேலைக்கு போவது எல்லாம்..

அப்பாவிற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்.. அதுவும் மாமிக்கு தெரியாமல்..

கணவரின் வருமானத்தை செலவு செய்து வாழ்க்கை நடத்த தான் மனைவி இருக்கிறார்(என் கணவர் ஏதேனும் என்னை சொல்லி விட்டால், உடனே உங்கள் சம்பாத்தியத்திற்கு எனக்கு முழு உரிமை உண்டு..அந்த பணத்திற்கு முதல் உரிமை நான் தான்.. உங்களுக்கு சமைத்து போட நான் என்றால், எனக்கு செலவு பன்னதான் நீங்கள்.. என்னை பார்த்து கொள்வதற்கு தான் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்று உரக்கமாக சொல்லி விடுவேன்)..

நீங்கள் அப்பாவிற்காக வேலைக்கு போக தேவையில்லை,உங்கள் கணவரும் உங்கள் அப்பாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை..

யோசித்து பாருங்கள் 1100 மொபைல் வச்சிருக்க உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் பணத்தேவைகள் குறைவு தான்..

தெளிவாக தெரிகிறது நீங்கள் தான் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு.. உங்கள் பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால் கணவர் மனைவி குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இருக்க பாருங்கள்..

18,வயதை தாண்டிய ஒரு இளைஞருககே ஹாஸ்டலில் தங்குவதற்கு மாதம் 3500தான்(சாப்பாடு உட்பட)
ஆனால் உங்கள் குழந்தைக்கு மாதம்4000,இதர சாமான்கள் அனைத்தும் வாங்கி கொடுத்து நிம்மதி இல்லாமல் இருப்பது சரியா?

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை....உங்கள் வாழ்க்கை உங்கள் முடிவு.

புரிகிரது அக்கா , சுயயோசனை எடுக்கா முடியாதா நிலை , அட்வான்ஷ் டெலிவரிக்கு வாங்கியது கலிக்கும் வர‌ வேலைக்கு போக வேன்டிய சூழ்நிலை,

இங்கே வரும் மனதும் உடலும் சாரந்த‌ பிரச்சனைகளும் அதற்கான‌ விடயமும் . அவர்களுக்கு மட்டுமல்ல‌ , இப்போது வாழ்க்கை யை நடத்தும் எங்களுக்கும் ஒரு அறிவுரையாகவும், பெரியது ஆகாம்ல் பிரச்சனை முடிக்கும் வழியயும் கொடுக்கிறது

//அவங்க சம் பீப்பில் கு மட்டும் பார்வ்ர்டு மெசேஜ் பன்னி பாத்ருக்க,// அவருக்குத் தெரிந்து பார்த்தீங்களா மகா! இத்தனை பிரச்சினை சொல்கிறீர்கள். ஃபோனைத் தொட‌ அனுமதிக்கிறாரா! அல்லது அவருக்குத் தெரியாமல் பார்த்தீர்களா! எனக்கு ஒருவர் இன்னொருவர் ஃபோனைப் பார்ப்பதில் உடன்பாடு இல்லை.

//சுயயோசனை எடுக்கா முடியாதா நிலை// சொல்லிக் கொடுத்தாலும் யோசிக்க‌ மாட்டேன் என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் இங்கு கேட்பது... இல்லை, பேசுகிறீர்கள் அப்படித்தானே! உங்கள் பாரம் இறங்குவதற்காக‌ மட்டும் பேசுகிறீர்கள். மற்றவர்கள்!! நேரம் வீணா!! பரவாயில்லை. எம் பதில்கள் வேறு யாருக்காவது உதவும். நிச்சயம் யாராவது சின்னதாகவென்றாலும் பலன் பெற்றிருப்பார்கள்.

//அட்வான்ஷ் டெலிவரிக்கு வாங்கியது// ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று சொல்கிறீர்கள். (பத்து மாதம் டெலிவரிக்கான‌ பணத்தைச் சேமித்துக் கொள்ளப் போதவில்லையா! எம் கைக்கு ஏற்றபடி தான் வீக்கம் இருக்க‌ வேண்டும். வரவுக்குள் செலவு செய்ய‌ வேண்டாமா!) இங்கு அனேகம் இப்படித் தான் ஆகிறது. ஒருவர் கேள்வி கேட்பார். நாம் எம் அபிப்பிராயத்தைச் சொல்வோம். பிறகு பதிலாக‌ இன்னொரு புதிய‌ பிரச்சினை சொல்லப்படும். இதில் தவறு இல்லை. ஒரேயடியாக‌ எல்லாப் பிரச்சினைகளையும் சொல்ல‌ முடியாது தான். நாம் கேட்கும் கேள்விகள், சொல்லும் அபிப்பிராயங்கள் கேள்வி கேட்டவரை வேறு விடயங்களைச் சொல்ல‌ வைக்கிறது. ஆனால் இந்த‌ இழையில்... முதல்முதலில் இழை ஆரம்பிக்கும் சமயம் பிரதானமாகச் சொல்லப்பட்ட‌ பிரச்சினையிலிருந்து நீங்கள் வெகு தொலைவு வந்தாயிற்று. அந்தப் பிரச்சினையைப் பற்றிய‌ பேச்சே இப்போ காணோம்.

மீண்டும்... உங்கள் பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். எமக்குத் தெரியாதுதான். ஆனால் நீங்கள் எதிலிருந்தும் வெளியே வரத் தயாராக‌ இல்லை. எதையும் மாற்றவோ மேம்படுத்தவோ தயாராக‌ இல்லை எனும் போது... இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க‌ வேண்டும், நீங்கள் அனுபவிப்பதை அனுபவித்துத் தான் ஆக‌ வேண்டும். அதைச் சந்தோஷமாக‌ அனுபவித்தால் வலி இல்லை. எதிர்ப்புக் காட்டி அனுபவித்தால் வலி இருக்கத்தான் செய்யும்.

‍- இமா க்றிஸ்

யாருக்காவது உதவியாக‌ இருந்தால் சந்தோஷம்தான். :‍) அதை இங்கு பதிவு செய்யத் தோன்றியிருக்கிறது உங்களுக்கு. மிக்க‌ நன்றி மஞ்சு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்