இட்லி மாவு அரைக்க

நான் இட்லி மாவு அரைக்க காலையில ஊற வச்சுட்டு , ஈவ்னிங் போய் தா அரைப்ப‌ , இதே போல் இன்றும் ஊற வச்சுட்டு வந்த, ஆனா எதிர்பாராத விதமா , ஈவ்னிங் அம்மா வீட்டுக்கு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இப்போது நான் என்ன செய்வது ,

எப்போ திரும்ப‌ வருவீங்க‌ என்கிறதைச் சொல்லவில்லை நீங்கள். எப்படிப் போகிறீர்கள்? பைக்கில் என்றால், ஊறவைத்ததை நீரை வடித்துவிட்டு அம்மா வீட்டுக்கு எடுத்துப் போகலாம். காரில் என்றால் அப்படியே எடுத்துப் போகலாம்.

அல்லது... நாளை (அங்கே ஞாயிறு!) திரும்பிவிடுவீர்கள், நேரமும் இருக்கும் என்றால் வந்த‌ பின் அரைத்து இட்லிக்குப் பதில் தோசை வார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

எப்போ திரும்ப‌ வருவீங்க‌ என்கிறதைச் சொல்லவில்லை நீங்கள் // அம்மா நாளைக்கு இரவு தாமா வர‌ முடியும்.

பைக்கில் என்றால், ஊறவைத்ததை நீரை வடித்துவிட்டு அம்மா வீட்டுக்கு எடுத்துப் போகலாம். காரில் என்றால் அப்படியே எடுத்துப் போகலாம்.// அம்மா நா ஆபிஸ்ல‌ இருந்து அப்படியே அம்மா வீட்டுக்கு பஸ்ல போற மா, நா பக்கமா இருந்தா நீங்க‌ சொல்ற மாதிறி செய்சுடுவ,

அல்லது... நாளை (அங்கே ஞாயிறு!) திரும்பிவிடுவீர்கள், நேரமும் இருக்கும் என்றால் வந்த‌ பின் அரைத்து இட்லிக்குப் பதில் தோசை வார்க்கலாம். // இன்னைக்கு காலயிலலிருந்து நாள‌ இரவு வர‌ இருந்தா புளிக்காதா , நா அத‌ ஃப்ரிஜ் வைச்சுட்டு அரைக்கலாமா, ( கணவ்ர் இங்க‌ தா இருப்பாங்க‌)

//இன்னைக்கு காலயிலலிருந்து நாள‌ இரவு வர‌ இருந்தா புளிக்காதா// இங்க‌ என்றால் பிரச்சினை இல்லாம‌ இருந்துரும். குளிர். ;)

//ஃப்ரிஜ் வைச்சுட்டு அரைக்கலாமா// அரைக்கலாம். இட்லிக்கு சரியாக‌ இருக்குமாவென்று தெரியாது. ரிஸ்க் எடுக்காம‌ தோசைக்கு மாறிரலாம். ப்ரிஜ்ல‌ வைக்கிறதானாலும் ஒரு தடவை கழுவி நீரை மாற்றிவிட்டு வைத்தால் கெட்டுப் போகாமலிருக்கும்.

‍- இமா க்றிஸ்

எங்கள் வீட்டில் ஒரு டம்ளர் தான் ஆப்பத்திற்கு அரைக்கிறேன்.. அதுவும் இட்லி மாவு அரைக்கும் சமயம் மட்டும் அரைத்து எடுத்து விடுவேன்..
என் கேள்வி என்ன என்றால் ஆப்பத்திற்கு மிக்ஸியில் அரைத்து செய்தால் நன்றாக வருமா?

அப்படி நன்றாக இருக்கும் என்றால் அடிக்கடி செய்யலாம்.. திடீர் டிப்பன் செய்யலாம் என்று கேட்கிறேன்..

யாரேனும் மிக்ஸியில் அரைத்து செய்த அனுபவம் இருந்தால் சொல்லுங்கள்..

நானும் உங்கள போல தான் கா , இட்லி மாவு அரைக்கும் சமயம் மட்டும் அரைத்து எடுத்து விடுவேன்..

யாரேனும் மிக்ஸியில் அரைத்து செய்த அனுபவம் இருந்தால் சொல்லுங்கள். // மிக்ஸியிலும் தனியா அப்ப‌ அரைப்ப , நாங்க‌ ரெண்டு பேர் தா அதனால என்க்கு மிக்சி ஈசியா இருந்துச்சு, ஆனா டேஸ்டு டிவ்ரண்ட் எப்பவும் போல் தா இருக்கு பெருசா வித்யாசம் தெரியல

அன்னக்கு கண்வ்ரே எப்டி அரைக்கனும்மு கேட்டு அரச்சு வச்சுருந்தாங்க ,

கிரண்டர் ஒரு வலியா கீளீன் பண்ணிட்ட

அப்போ மிக்ஸியில் இனி அரைத்து பார்க்கிறேன்..பரவாயில்லை உங்கள் கணவர் மாவு அரைத்து வைத்து இருக்கிறார்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்..

நான் மிக்ஸியில் அரைத்து செய்து பதிவிடுகிறேன்..

உங்கள் கணவர் மாவு அரைத்து வைத்து இருக்கிறார்.. கொடுத்து வைத்தவர் நீங்கள்.// அக்கா இந்த் ஹெல்ப் பணிக்குச்செல்வதாலும், அன்பு மகளிடம் பிரிர்து இருப்பதாலும் .

Aapam maavu - coconut or palaya sadham enna mix pannuvinga
Quantity konjam solringla

ஆப்பத்திற்கு:

பச்சரிசி-1டம்ளர்
இட்லி அரிசி-1டம்ளர்
வெந்தயம்-2 டீஸ்பூன்
ஜவ்வரிசி-1டீஸ்பூன்(இதற்கு பதில் வடித்த சாதம் ஒரு கைப்பிடி அரைக்கும் போது போடலாம்... நான் எப்போதும் ஜவ்வரிசி தான் ஊற வைத்து அரைப்பேன்)
உளுந்து -அரை டம்ளர்

எல்லாவற்றையும் ஊற வைத்து கொள்ளுங்கள்.. முதலில் உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் அரைத்து விட்டு.. பின் அரிசி இரண்டையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்..

இரவில் அரைத்து ப்ரிஜில் வைக்க வேண்டாம்.. மாவு நன்கு பொங்கினால் தான் சாப்டாக இருக்கும்..

மேலும் சில பதிவுகள்