பிரேமாக்கா ‍ : குழந்தையின் பிறந்தநாள்

அக்கா உங்களிம் இளவரசியின் பிறந்தநாள் நேற்று தான‌ அக்கா ,

( என்னுடைய‌ வாழ்த்துக்கள்)

உங்கள் செல்ல மகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.. ஒரு வருடம் விரைவில் ஓடி விட்டது..

வாவ்! செம‌ பா. ரொம்ப‌ நன்றி !!
ஞாபகம் வச்சிருக்கீங்களே! ஞாயிற்றுக்கிழமை தான் அவளோட‌ முதல் பிறந்தநாள். நல்லா செலிபிரேட் பண்ணினோம். ஆனால் அவளுக்கு தான் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு. அன்னிக்கு டல்லாக‌ இருந்தாள்,அது போட்டோவில் நன்றாகவே தெரியும்.
உங்க‌ அன்பு வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி மஞ்சு உம்மா..

- பிரேமா

மிக்க‌ நன்றி அக்கா !!

ஆமா. ரொம்ப‌ வேகமா போய்டுச்சு.

என்னை மாதிரியே நம்ம‌ அறுசுவை தோழிகள் தேன்மொழி, கிருத்திகா, சஞ்சு பசங்களுக்கும் ஒரு வருஷம் ஆகிருக்கு. அவங்களுக்கும் இங்க‌ என்னோட‌ வாழ்த்துக்கள்.

- பிரேமா

ஞாபகம் வச்சிருக்கீங்களே!// என்க்கு மறக்க முடியாத‌ விசயத்துல உங்க இளவரசி ( யாழினியின் ) பிறந்த நாளும் ஒன்று ,

ஆனால் அவளுக்கு தான் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு. அன்னிக்கு டல்லாக‌ இருந்தாள், // இப்ப‌ சரி ஆயிடுச்சா , ...

பிறந்தநாள் கு என்ன‌ என்ன‌ பன்னீங்க‌ அக்கா
டிப்ஸ் சொல்லுங்க‌ அடுத்த மாதம் எங்கள் செல்லத்தின் முதல் பிறந்த‌ நாளுக்கு தாயார் ஆகி கொண்டிருக்கிரோம்

ஓ சாரி மா. நான் பார்த்தேன் ஆனா பதில் கொடுக்க‌ மறந்துட்டேன். பிறந்த நாள் டிப்ஸ் என்று நினைவுபடுத்தியிருந்தால் உடனே நினைவிற்கு வந்திருக்கும் :)

//// இப்ப‌ சரி ஆயிடுச்சா , ...// வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் குணமாகியது. ஆனால் இன்னும் அவள் டல்லாக‌ இருக்கிறாள்.

//பிறந்தநாள் கு என்ன‌ என்ன‌ பன்னீங்க‌ அக்கா//

* ஒரு மாசத்துக்கு முன்னாடியே பாப்பாக்கு டிரஸ் எடுத்துட்டோம். ட்ரெடிஷ்னல்ல‌ ஒன்னு ட்ரெண்டியா ஒன்னு. காலையில் கோயிலுக்கு போகும் போது பட்டுப்பாவடை ஈவ்னிங் சோளி டைப் மற்றும் மாடல் டிரஸ் பண்ணிவிட்டோம்.
கூடவே மேட்சிங்கா ஹெட் பேண்ட், பேங்கில்ஸ் வாங்கிட்டேன்.(ஆனா போட்டு விட‌ முடியல‌ ஒரே அழுகை)
* அடுத்தடுத்து டெக்கரேஷன். அதுக்கு தேவையான‌ பலூன்ஸ், க்ளிட்டர் பேப்பர்ஸ், பார்ட்டி பேப்பர்ஸ், ஹேப்பி பர்த்டே ஸ்டிக்கர்ஸ், இவளோட‌ பேரை தெர்மக்கோல்ல‌ டிசைன் பண்ணி வாங்கினோம் நல்லா இருந்துச்சு. அடுத்த‌ பர்த்டேக்கு கூட‌ யூஸ் பண்ணிக்கலாம். (என் ப்ரண்ட் அவங்களோட பேபியோட‌ ஸ்பெஷல் மொமன்ட் அப்புறம் ஃபேமிலி போட்டோ போட்டு ஒரு சின்ன பேனர் அடிச்சு சுவத்துல‌ ஒட்டியிருந்தாங்க‌. சிம்பிளா சூப்பரா இருந்துச்சு நீங்க‌ கூட‌ அப்படி ட்ரை பண்ணலாம்)
* பார்ட்டி வீட்லே வைக்க‌ போறீங்கன்னா முதல்ல‌ மெனு தேர்ந்தெடுத்துட்டு அதுக்கேத்த‌ மாதிரி பேப்பர் ப்ளேட்ஸ் & டம்ளர்ஸ் அல்லது பாக்கு தட்டு அந்த‌ மாதிரி முன்னாடியே தேவையான‌ அளவு வாங்கி வச்சுக்கோங்க‌. டேபிள் & டேபிள் ஸ்ப்ரெட் எல்லாம் ரெடி பண்ணிக்கோங்க‌.
* பார்ட்டி ஹால் அல்லது ஹோட்டல்ல‌ பண்றதா இருந்தா முதல்ல‌ பேக்கேஜ் கேட்டுட்டு டேட்ஸ் செக் பண்ணி புக் பண்ணிருங்க‌. மெனு சூஸ் பண்ணி கொடுத்தா டெக்கரேஷன்ஸ்ல இருந்து டின்னர் வரைக்கும் எல்லாம் ப்ளான் பண்ணிருவாங்க‌. நீட்டா முடிஞ்சுரும்.
* நாங்க‌ வீட்டில் பண்ணினோம். எங்களோட‌ மெனு : கேக், சிப்ஸ், பஃப்ஸ், சமோசா, சாக்லேட்ஸ், அப்புறம் சூடா பாதாம் மில்க். ஈவ்னிங் க்ளைமேட்டுக்கு ரொம்ப‌ நல்லா இருந்துச்சுன்னு ப்ரண்ட்ஸ் சொன்னாங்க.
* அப்புறம் போட்டோகிராஃபர்க்கு சொல்லியிருந்தோம். அவரு வந்து சூப்பரா போட்டோஸ் எடுத்துட்டு போய்ட்டாரு. ஆல்பம் போட்டு வச்சுக்கிட்டா காலத்துக்கும் அழியாது. முக்கியமான‌ தருணங்களை நம்ம‌ மிஸ் பண்ண‌ கூடாது இல்லையா? அதனால‌ தான்.
* வேற‌ மிஸ் பண்ணிருந்தா கேளுங்க‌ நான் சொல்றேன்.

- பிரேமா

இந்த‌ இழையை இன்னும் பார்க்கல‌ போல‌ நீங்க‌!

உபயோகமா இருக்குதான்னு சொல்லுங்க‌.

- பிரேமா

பிரேமாக்கா டிப்ஸ் யூஸ்புல் ஆகாம‌ இருக்குமா, நா ரீப்லை பன்ன‌ மறந்துட்ட அக்கா சாரி சாரி ,

உங்க‌ பிளானையும் நா என்னோட‌ லிஸ்ட்ல சேத்திருக்கேன் ,

இன்னும் வேலைக்கு போறீங்களா நீங்க‌, இது உங்களீன் முதல் குழந்தையாக்கா ?

ஓகே பா.

ம்ம்ஆமா பா. வேலைக்கு போகிறேன். என் முதல் குழந்தை தான்.

உங்க‌ டேட் ஆஃப் பெர்த் என்ன‌?

- பிரேமா

வொய் அக்கா ? நா அக்கா அக்கான்னு மெசேஜ் பன்றதனாலயா

15.12.1992 அக்கா

மற்றதோழிகளும் கூறுங்க , வாழ்த்துக்கள் பகுதிக்கு யூஸ்ஸா இருக்கும் //
நீங்களும் அக்கா

பாப்பா யாருக்கிட்ட‌ இருக்கா,

நான் 6 3 1994.

ஹாஹா.. நீங்க‌ தான் எனக்கு அக்கா. இங்க‌ நிறைய‌ பேருக்கு நான் தங்கச்சி தான் போல‌ !!

பாப்பாவ‌ டேகேர் ல‌ சேர்த்துருக்கேன்.

உங்க‌ ஃபேஸ்புக் ஐடி இருக்கா. ரெக்வஸ்ட் கொடுங்க‌.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்