அறுசுவை தளம் - ஓர் முக்கிய அறிவிப்பு

அன்பு அறுசுவை உறுப்பினர்களுக்கு,

ஒரு முக்கிய அறிவிப்பு. அறுசுவை தளத்தின் தோற்றம் மற்றும் சில டெக்னிக்கல் விசயங்களை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அது முழுமையாக நிறைவடையவில்லை என்றாலும், தளத்தினை வெளியிடும் அளவிற்கு நிறைவடைந்துள்ளது. எனவே, புதிய வடிவமைப்பில் உள்ள தளத்தினை வெளியிட்டுவிட்டு, அதன் பிறகு மீதமுள்ள பணிகளை சிறிது சிறிதாக செய்து முடிக்க உள்ளோம்.

முதற்கட்டமாக, தற்போது உள்ள அறுசுவை தமிழ் தளத்தினை முழுவதும் பேக்-அப் எடுத்து, புதிய தளத்திற்கு மாற்ற வேண்டும். சில டெக்னாலஜி மாற்றங்கள் காரணமாக, இந்த Content migration எளிதானப் பணியாக இல்லை. நேரம் அதிகம் எடுக்கின்றது. ஆகவே, அந்த பணி நிறைவடையும் வரை அறுசுவையில் மாற்றங்கள் எதுவும் நடக்கா வண்ணம், பெயர்ப்பதிவு, பதிவுகள் சேர்த்தல் போன்றவற்றை தற்காலிகமாக சில தினங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது.

இந்திய நேரப்படி <b>இன்று (10-செப்-2018) மாலை 6 மணிக்கு மேல்</b> அறுசுவை தளத்தில் பெயர்ப்பதிவு, பதிவுகள் கொடுக்கும் வசதி போன்றவை நிறுத்தப்படும். தளத்தினை முழுவதும் பேக்-அப் எடுத்த பிறகு இங்கே பதிவுகள் எதுவும் கொடுக்கப்படுமாயின் அவை புதிதாக வரும் தளத்தில் இடம்பெறாது. எனவே முன் அறிவிப்பு கொடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

அறுசுவை தளத்தினை பார்வையிடுவதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்த தளத்தில் உள்ள அனைத்தையும் நீங்கள் பார்வையிடலாம். மன்றத்தில் உரையாட இயலாது. புதிதாகப் பெயர்ப்பதிவு செய்ய இயலாது. இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குப் பிறகு புதிய தளம் வெளியானப் பின்னர், பழையபடி நீங்கள் உரையாடலாம். பெயர்ப்பதிவுகள் செய்யலாம்.

அடுத்த இரண்டு தினங்களுக்கு உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற சிரமத்திற்கு வருந்துகின்றோம். மாற்றங்கள் உங்களுக்காகவே செய்யப்படுகின்றது. எனவே, இதனால் உண்டாகும் தற்காலிக சிரமங்களை பொருத்தருள வேண்டுகின்றோம்.

மீண்டும் புதிய அறுசுவையில் சந்திப்போம்.

இந்த இழையினை மேலே கொண்டு வருவதற்காக இந்த பதிவு.

மன்றத்தில் உரையாடுபவர்கள் முக்கியமான கேள்விகள் இருப்பின் அவற்றை இன்று மாலைக்குள் பதிவு செய்து பதில்களை பெற்றுக்கொள்ளூங்கள். தவறினால் அடுத்த இரண்டு தினங்களுக்கு பின்னரே பதிவுகள் கொடுக்க இயலும்.

:-) ரொம்ப சந்தோஷமா இருக்கு அட்மின். கொக்கு பறபற மாதிரி சந்தோஷத்தில் பறக்குது மனது. ;)

இந்து மற்றும் நான் பதில் கொடுக்க வேண்டிய சகோதரிகளில் ஃபேஸ்புக்கில் என்னோடு தொடர்பு உள்ளவர்களுக்கான பதில்கள் நாளை ஃபேஸ்புக் இன்பாக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

‍- இமா க்றிஸ்

நான் எதிர்பார்த்த பதிவு இது.. நன்றி அம்மா..
அதென்ன உங்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி!!! ஏன் இவ்வளவு பெரிய மகிழ்ச்சி..

இதுதான் மாற்றியமைக்கப்பட்ட அறுசுவை தளம். இனி உறுப்பினர்கள் பெயர்ப்பதிவு செய்யலாம். பதிவுகள் கொடுக்கலாம். தற்போதைக்கு பழைய அறுசுவையில் இருந்தவை அப்படியே இங்கே இடம்பெற்றிருக்கின்றன. புதிய சேர்க்கைகள் இன்னும் சில தினங்களுக்குப் பிறகு இடம்பெறும்.

மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் அறுசுவை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Anna arusuvai meendum puthu polivudan migavum santhosam ,
tamil la type pandra option illaya anna , box open aagala

புதிய அறுசுவைக்கு வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் பெரியதாக தெரிவது நல்லாருக்கு சகோ. ஆனா தமிழுக்கு எங்கே போக?
மொபைல்ல மட்டும் தமிழ் வருது.
என்னால் மொபைல்ல டைப் பண்ண கடினமாக இருக்கே
தமிழ்ல டைப் பண்ண வசதி பண்ணுங்க சகோ :)

புது பிறவி எடுத்த அருசுவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

புதிய தளம் நன்றாக இருக்கிறது அண்ணா , மொபைல் லில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்ப சற்று ஈஸி ஆக இருக்கு வாழ்த்துக்கள்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

புதிய தளம் நன்றாக இருக்கிறது அண்ணா , மொபைல் லில் இருந்து பார்ப்பவர்களுக்கு இப்ப சற்று ஈஸி ஆக இருக்கு வாழ்த்துக்கள்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

மேலும் சில பதிவுகள்