அறுசுவை நட்பூக்களுக்கு

Arusuvai new site

பல நாட்கள் மாதங்கள் கடந்து நம் அறுசுவை புது பெண் போன்று பொலிவுடனும், மெருகுடனும் புதுமையான மாற்றங்களுடனும் வந்த நம் அறுசுவைக்கு வாழ்த்துக்கள்

இனிய நட்பூக்களே நலமா.நம் அறுசுவை தளத்தில்தான் எனக்கு பல நெருங்கிய தோழிகள் கிடைத்தார்கள். சிலருடன் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தாலும் பெரும்பாலான தோழிகள் இங்குதான் சந்திப்போம். முதன்முதலாக நான் இணையதளத்தை பயன்படுத்த ஆரம்பித்தபோது நான் பார்த்த முதல் தமிழ்தளம் அறுசுவைதான். இப்போது பல மாதங்களின் முடிவில் புது மெருகுடன் வந்த அறுசுவை பார்த்ததும் முதன்முதலாய் பார்த்த அதே மகிழ்ச்சி. பல மாற்றங்களுடன் நல்ல மாற்றமாக வந்த அறுசுவையை வரவேற்போம். நேற்று தோழிகளுடன் சேர்ந்து புதிதாய் வந்த அறுசுவையை ஆராய்ந்து ஆராய்ந்து பழைய அரட்டைகளும், முதன் முதலாய் அறிமுகமான நிகழ்வுகளும், பட்டிமன்ற வாதங்களும், வாழ்த்துக்களும் பார்த்து பேசி பேசி அன்றைய நாளின் மலரும் நினைவுகளின் சந்தோஷ. தருணங்களை மீட்டெடுத்தோம்.

எல்லோரும் எப்படி இருக்கீங்கன்னு வந்து சொல்லிட்டு போங்க. பழைய தோழிகள் மற்றும் புதிதாய் இணைந்துள்ள தோழிகள் அனைவரும் வாங்க பழகலாம். காத்திருக்கிறேன் அனைவரையும் காண...

Average: 5 (2 votes)

Comments

மற்ற இடங்களில் பேசிக்கொண்டாலும் இங்கே உரையாடுவதில் தனி மகிழ்ச்சி.
முதன்முதல் இங்கே பேசியதெல்லாம் மலரும் நினைவுகளாக வந்து மகிழ்விக்கின்றது

மீண்டும் பேசுவதில் தனி மகிழ்ச்சி. இப்படியே அனைத்து தோழிகளும் வருகை தரனும்

மீண்டும் அறுசுவை கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி :) நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் ரேவ்ஸ் அறுசுவைக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. மீண்டும் அறுசுவை யில் உலவுவது நினைத்தாலே சந்தோசமாக இருக்கிறது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நாம முதன்முதலாக பேசியது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க.. இப்பவும் அதேதான் சொல்லறேன் வந்து ஜோதில ஐக்கியம் ஆகிடுங்க.

Be simple be sample

எனக்கும் சுவா. ஒரு 5 வருஷம் முன்னாடி போய் எல்லாரையும் பார்த்த ஃபீலிங்..

Be simple be sample

எல்லோரையும் இங்கு மீண்டும் காண்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. :-)

வாங்க பழகலாம் என்று கூப்பிடுறீங்க. எனக்கு அறுசுவையில் சில விஷயங்கள் புதுசா பழகணும் போல இருக்கு. சுவா போஸ்ட்டையும் உங்க போஸ்ட்டையும் ஒன்று என்று நினைச்சு நாலு தரம் திறந்து பார்த்து, பிறகு புரிந்துகொண்டேன். :-) இரண்டாவது ஆள் புது போஸ்ட் போட்டாச்சு. சந்தோஷமா இருக்கு பார்க்க.

‍- இமா க்றிஸ்

இரண்டு பேரும் எதிர்பாராமல் ஒரே புகைப்படம் போட்டுட்டோம். உங்களையும் குழப்பிருக்கோமே ;) . இனி களத்தில் இறங்கிடுவோம். அறுசுவையில் கலக்க

Be simple be sample

இந்த அறுசுவையில் சேர்த்து 8 ஆண்டுகள் ஆயிடிச்சு.. இங்க இருந்து அரட்டை அடித்த காலங்கள் வசந்த காலங்கள். அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்றேன். திரும்பவும் இங்க வந்து இருக்கேன் பழையபடி இருக்குமா தெரியல. பல நல்ல உள்ளங்கள் கிடைக்க இந்த தளம்தான் காரணம். இந்த தளம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது. இன்னும் மேலும் மேலும் மெருகூட்ட வாங்க நட்புக்களே...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ரேவ். காணாமல் போனவர்கள் பட்டியல்ல இருந்தவங்கலாம் வெளிய வராங்களே. உங்களுக்கு தான் முதல் வெல்கம் ;)

Be simple be sample

வந்துட்டோம்ல...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மறுபடியும் புது பொலிவுடன் பிறந்திருக்கும் அறுசுவைக்கு வாழ்த்துக்கள். இதற்கு பின்னாடி பாபு அண்ணாவோட மிகப்பெரிய உழைப்பு இருக்கு, நிறைய கஸ்டங்களை தாண்டி நமக்காக அறுசுவையை தந்திருக்காங்க தாங்க்ஸ் ண்ணா, ,,,

கூகிள் ல ஏதோ தேடும் போது கண்ல பட்ட தளம். ரொம்ப நாளா சைலண்ட்டா பார்த்துட்டு எஸ்கேப் ஆகிடுவேன், ஒரு நாள் அரட்டை இழை மூலம் மெம்பராகி நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைக்க காரணமாக இருந்த தளம் இந்த அறுசுவை

ஒரு வெப்சைட் மூலமா இவ்ளோ ப்ரெண்ட்ஸ் இருக்காங்கனு சொன்னா இன்னும் கூட யாரும் நம்ப மாட்றாங்க, ஆனா ஒருத்தருக்கு ஒருவர் முகம் பார்க்காமலே சொந்தங்களை விட ஒரு படி மேல இங்க நாம பழகிறோம்ம்ம்ம்ம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் சுபி. நீங்க சொல்லறது ரொம்ப கரெக்ட். யாரும் நம்ப மாட்டறாங்க. அது எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்லறீங்கன்னு. இவ்வளவு பேர் மீட் பண்ணிருக்கோம்ன்னு சொன்னா கூட ஆச்சர்ய படறீங்க. நம்மை எல்லோரையும் இணைத்தது அறுசுவைதான். எங்கு பழகினாலும் இது போல் அன்பான தோழிகள் வேறு எங்கேயும் கிடைக்கமாட்டார்கள்

Be simple be sample

ரேவ்ஸ் நானும் ஓடி வந்துட்டேன். லீவ் எடுக்காம இங்கே வருவதற்கு ஆசீர்வதியுங்கள் குருவே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட வந்திருக்கறவக கவிதானா. நம்பமுடியவில்லை இல்லை இல்லை.....லை...

இனிமே லீவு எடுத்த பனிஸ்மெண்ட் . உப்புமா செய்து பார்சல் அனுப்பபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் :)

Be simple be sample

அன்பு ரேவதி,

அழகான ஆரம்பம், மணம் பரப்பட்டும் நட்பூக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

நல்வரவு. நீங்களும் அடிக்கடி வந்து உற்சாகம் கொடுக்கனும்.

Be simple be sample

வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்... நலம் நலமறிய ஆவல்... அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.