அறுசுவை

Arusuvai welcome

அனைவருக்கும் வணக்கம். அறுசுவை புது பொலிவுடன் மீண்டும் கிடைத்திருப்பது நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி.எத்துனை இணையம் இருந்தாலும் பேசினாலும் பழகினாலும் அறுசுவைக்கு ஈடாகாது.

என்னைப்பொருத்த வரை அறுசுவையால் நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஒரு காலத்துல மெயில் ஐடி இருக்குன்னு சொல்வதே ஒரு பெருமையான விசயமா இருந்துச்சு அப்படி பட்ட மெயில் ஐடி உருவாக்கினது அறுசுவைக்காகதான். எல்லோருக்கும் எளிமையாக தமிழில் பார்க்கும் தளம் என்றால் அது அறுசுவை என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்காதென நினைக்கிறேன்.இந்த தளம் தமிழில் தட்டச்சு செய்யவும்,படங்கள் பதிவேற்றம் செய்யவும்,பல பல விசயங்களை கற்றுக் கொள்ளவும், இன்னும் சொல்ல போனால் எப்படி பேசனும் பழகனும்னு கூட சொல்லிக் கொடுத்திருக்குன்னு தான் சொல்லனும்.

நிறைய அன்பான தோழிகளை கொடுத்திருக்கு. பள்ளிகளில் படித்த தோழிகள் கூட இப்பொழுது தொடர்பில் இல்லை மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்லனும் ஆனால் இங்கு கிடைத்த அறுசுவை நட்புகள் பொக்கிசம் என்றே சொல்லனும். எத்தனை தளங்கல் இருந்தாலும் அறுசுவை போன்ற பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது என்றே சொல்லனும்.

அறுசுவை பகுதி ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அத்துனை சந்தோசம் கிடைக்குது பிறந்த வீட்டுக்கு சென்றது போல பெரு மகிழ்ச்சி :) ஒரு காலத்துல வீட்ல ஏதாவது புதுசா ஒரு சமையல் செய்ன்னு என் கணவர் சொல்வார் அந்த ரெசிப்பி செய்ய தெரியாதுன்னு சொல்லிட்டா உடனே அறுசுவை போய் பாருன்னு அந்த ரெசிப்பிய எடுத்து கொடுத்திடுவார். என்னடா இது செய்ய தெரியாதுன்னு சொன்னாலும் இந்த அறுசுவையால தப்பிக்க முடியலயேன்னு அறுசுவை மேல கோவம் வரும்,அப்படி இருந்த நான் அறுசுவையில் உறுப்பினராகி குறிப்பும் அனுப்பி அறுசுவையை உலகமாகவும்,குடும்பமாகவும் நினைக்க வைத்த பெருமை அறுசுவைக்கே சேரும்.

அப்படி பட்ட அறுசுவை திரும்பவும் எங்களுக்கு கிடைத்ததில் நன்றியும் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

5
Average: 5 (4 votes)

Comments

ஆஹா. அப்படியே மனசுல இருக்கிறத படம் பிடிச்சு காமிச்சுட்டீங்க.. நிஜத்தில் பல பல விஷயங்கள் இங்குதான் கற்றுகொள்கிறோம். பிறந்தவீட்டுக்கு வந்த மகிழ்ச்சிதான். இதே மாதிரி அடிக்கடி ஏதாவது எழுதுங்க. நமக்கே நமக்கான இடம் இதுதான். நம் மனதில் இருப்பதை இறக்கி வைக்க இதை விட வேறு இடம் இருக்கா என்ன. சூப்பர் சுவா. தொடர வாழ்த்துக்கள்

Be simple be sample

நன்றி ரேவ்ஸ்.. கண்டிப்பாக நமக்கான இடம் அறுசுவை தவிர வேறேது.சுதந்திரமா பயமில்லாம சுத்துர ஒரே இடம் அறுசுவை தான்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர்!
புதுத்தளம் வரட்டும் பதிவு போடலாம் என்று காத்திருந்த மாதிரி இருக்கே! :-) நீள இடைவெளி விடாமல் நிறையப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

நன்றிங்க மா. ஆமாம் மா புதுசு வரபோகுதுன்ன்னு பாபு அண்ணா சொன்னதில இருந்து ஆர்வம் அதிகமாயிடுச்சு.
உங்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயர்ச்சிக்கிறேன் மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உண்மையாகவே இது ஒரு தாய் வீடு போல தான் ஸ்வா.. பழைய இழைகளை எடுத்து பார்த்தாலே அவ்வளவு சந்தோசம்.. மனசு சரி இல்லனா இங்க வந்த போதும் அவ்வளவு ரிலாக்ச இருக்கும். நான் நல்ல சமைக்க ஆரம்பிச்சதே இங்க வந்து பார்த்து செய்ததால் தான். இந்த அறுசுவை தளத்திற்கு என்னுடைய நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹ்ம்ம்ம் புது தளம் வந்ததும் பதிவு போட்டாச்சு, நிஜமாக்கா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை,.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மிக்க நன்றி ரேவ். நிச்சயமாக பழைய இழைகளை பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசம் கிடைக்குது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுபிம்மா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீண்டும் அனைவரையும் இங்கே காண்பது மிக்க மகிழ்ச்சி. உண்மையிலேயே அறுசுவை மறக்க முடியாத தளம்.
இங்கே கிடைத்தவை ஏராளம்
தொடர்ந்து பேசுவோம்

நன்றி நிகி.. ஆமாம் நிகி நாம எல்லோரும் இங்கு இனைந்துதானே இவ்வளவு நட்பு வட்டம் கிடைச்சுருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா நம் தோழிகள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள். இணையத்தில் எங்கெங்கு சுற்றினாலும் நமக்கு தாய்வீடு அறுசுவைதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவி :) ஆமா கவி நிச்சயமாக இது தாய் வீடுதான் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஸ்வர்ணா,

மகிழ்ச்சி! (இத அப்படியே நம்ம சூப்பர் ஸ்டார் வாய்ஸ்ல படிச்சிடுங்க:))

அப்பா! எவ்வளவு நாளாச்சி, இப்படியெல்ல்லாம் பேசி.

நல்ல ஆரம்பம், வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி