
தேதி: September 29, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - 2 தேக்கரண்டி
பால் - 200 மி.லி
சீனி - 4 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
கிஸ்மிஸ் பழம் - 5
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு பின்ச்
கேரமல் செய்ய :
சீனி - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 தேக்கரண்டி
பச்சரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (ஒன்றிரண்டாக உடைத்தால் போதும்)

குக்கரில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து கேரமல் தயார் செய்யவும்.

கேரமல் தயாரானதும் உடைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அரிசியுடன் பால், 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி சிறு தீயில் 3 விசில் விடவும்.

குக்கரை திறந்து சீனி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து 3 - 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து வறுத்து பாயசத்துடன் சேர்க்கவும்.

சுவையான கேரமல் பாயசம் ரெடி. சூடாக பரிமாறவும்.

Comments
abhi rajaseakar
kearamal payasam simply super ,
yellarum arusuvai puthusa open panna tha varanumnnu irutheengala , yeana unga kurippellam pakkirom
but neenga yarum mandram side vanthu pathathey illa ( ippa )
Manjula
நன்றிங்க.. அறுசுவை சைட் வேலை நடந்ததால் இப்போதுதான் வெளியிட்டு இருக்காங்க..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
பாயாசம்
வாவ்! வாவ்! அருமை அபி.
- இமா க்றிஸ்