
தேதி: September 29, 2018
பரிமாறும் அளவு: 2 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்
மொத்த நேரம்: 25 நிமிடங்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - பாதி
காரட் - சிறியதாய் ஒன்று
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
முதலில் இரண்டு முட்டைகளை வேக வைத்து எடுத்து, முட்டை ஓட்டினை நீக்கி தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இரண்டு முட்டைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, நறுக்கிய காய்களைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

அடுப்பில் தவாவினை வைத்து எண்ணெய் தடவி சூடேறியதும், அதில் பாதி முட்டை கலவையை ஆம்லெட்டாக ஊற்றவும். மிளகுத்தூள் தூவவும்.

முக்கால் பதம் வெந்ததும், ஏற்கனவே அவித்து வைத்துள்ள முட்டைகளை துண்டங்களாக நறுக்கி ஆம்லெட்டில் சேர்க்கவும். ஆம்லெட் வெந்ததும் அதை திருப்பிப் போடாமல் சுருட்டி எடுத்து வைக்கவும்.

மீதமுள்ள முட்டைக் கலவையை மறுபடியும் ஆம்லெட்டாக ஊற்றவும். முக்கால் பதம் வெந்ததும் ஏற்கனவே செய்து வைத்துள்ள ஆம்லெட் சுருளை அதன் மேல் வைத்து சிறிது நேரம் வேகவிடவும்,

ஆம்லெட் வெந்ததும் மீண்டும் சுருட்டவும்.

ஆம்லெட் சுருளை வட்ட வடிவ துண்டங்களாக வெட்டி பரிமாறவும்.

Comments
செண்பகா
பார்க்கவே அழகாருக்கு .
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவர்ணா
ரொம்ப நன்றி....
செண்பகா
ஈசியா இருக்கு. கலக்கல் பிரசண்டஷன்.
Be simple be sample
hai anni..
yemmy recipe.. parkave super iruku.. super super..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவதி
ரொம்ப ஈசிபா..தாங்க்யூ ரேவதி
ஹாய் ரேவதி
நன்றி பா...
செண்பகா
ஆம்லட் ஸ்டைலா இருக்கு. பிடிச்சிருக்கு. குறிச்சு வைக்கிறேன்.
- இமா க்றிஸ்
Yummy
My children liked it. Thanks.