
தேதி: September 30, 2018
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்
மொத்த நேரம்: 25 நிமிடங்கள்
பச்சரிசி 1 கப்
கல்கண்டு 1 கப்
நெய் 4 ஸ்பூன்
பால் 3 கப்
முந்திரி, திராட்சை தலா 10
அரிசியை கழுவி ஊற வைக்கவும். கல்கண்டை பொடி செய்து கொள்ளவும்.

குக்கரில் பால் + 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அரிசியை சேர்க்கவும்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.

மூன்று விசிலுக்குப் பின்னர் திறந்து பொடித்த கல்கண்டு சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வைத்து கலந்து விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை சிவக்க வறுத்து சேர்க்கவும்.

சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.

Comments
ரேவ்ஸ்
சூப்பர் ரேவ்ஸ். கலக்கல் போட்டோ .
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
அட்மின் அண்ணா
குறிப்பை தொடர்ந்து வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி
Be simple be sample
சுவா
தான்க்யூ சுவா.
Be simple be sample
கல்கண்டு பொங்கல்
எனக்கு ரொம்ப பிடித்த டிஷ் கடைசியில் ஒரு பின்ச் பச்சை கற்பூரம் சேர்த்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்
reva
reva super.. kalaku reva.. display (main) picture pongalo ponguthu paalu ponguthu padanum pola iruku.. mm kalakal..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
Rajeesurya
தான்க்யூ ராஜீ. அடுத்த முறை செய்யும் போது கட்டாயம் சேர்க்கிறேன். குறிப்புக்கு நன்றி
Be simple be sample
ரேவ்
அப்படியே பாடிட்டே செய்துட்டு சொல்லனும் சரியா. தான்க்யூ
Be simple be sample
கல்கண்டு பொங்கல்
சூப்பர்! சாப்பிட்டு முடிஞ்சதும் எனக்கு அந்த குட்டி பானையை அனுப்பிருங்க. அழகா இருக்கு. :-)
- இமா க்றிஸ்
இமாம்மா
பானை அப்படியே வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க.. :)
Be simple be sample