இந்தோனேஷியா, சிங்கப்பூர் அனுபவங்கள் - கவிசிவா

Batam  Indonesia

பாகம் 1

இனிய தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள். அறுசுவையில் எழுதுவதென்றால் நமக்கெல்லாம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல. அதுவும் மிக நீண்ட நாட்களுக்கு பின்னால் எழுதுவது மனதிற்குள் இனம்புரியா மகிழ்ச்சி. இந்தோனேஷிய சிங்கப்பூர் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அனுபவக் கட்டுரையாக மட்டும் இல்லாமல் பயணக்கட்டுரை போன்றும் எழுதலாம் என நினைக்கிறேன். இங்கே சுற்றுலா வர நினைப்பவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்குமே!

மே 20 2000, நான் என்னவரோடு இந்தோனேஷியாவிற்கு வந்த நாள். அன்றிலிருந்து 13 வருடங்கள் “பத்தாம்” என்னும் அந்த இந்தோனேஷிய தீவுதான் எங்கள் வீடு. 
 
இந்தோனேஷியா என்பது 17000 சிறியதும் பெரியதுமான தீவுக்கூட்டங்கள் இணைந்த நாடு. 
தலை நகரம் ஜக்கார்த்தா
அதிகார பூர்வ மொழி பஹாசா இந்தோனேஷியா.
நாணயம் “ரூப்பியா”.

இந்த ரூப்பியா பற்றி பின்னாடி விரிவா பார்க்கலாம். சில தோழிகளுக்கு மறுபடியும் முதல்லேருந்தா ன்னு மைன்ட்வாய்ஸ் கேட்குது.
 
இந்தோனேஷியாவுக்கும் நமக்கும் ஒரு வரலாற்று தொடர்பு இருக்கிறது. கடாரம் வென்ற இராஜேந்திர சோழன் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகள் வரை வென்று ஆட்சி செலுத்தியிருக்கிறார். நமது இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் இங்கே இப்போதும் நாட்டிய நாடகங்களாக அரங்கேற்றப்படுகின்றன. சில கதாபாத்திரங்களின் பெயரிலும் சம்பவங்களிலும் சிறிய மாற்றங்கள்.
 
உதாரணமாக 
சீதா – சிந்தா
சகுனி- சங்குன்னி
இலட்சுமணன் – லஸ்மனா

மேடான் என்னும் தீவில் வம்சாவளி இந்தியர்கள்- தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போதும் தமிழ் பெயர்களையே தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். இப்போதைய இளைய தலைமுறையினருக்குத்தான் தமிழ் தடுமாற்றமாக இருக்கிறது. முதியவர்கள் அழகாக தமிழில் பேசுகிறார்கள். இந்தோனேஷியா சென்ற புதிதில் அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மேடான் தீவை சேர்ந்த ஒரு தாத்தா கடை வைத்திருந்தார். அவரிடம் தமிழில் பேசுவதற்காகவே அவர் கடைக்கு செல்வோம். ஹி ஹி அப்போ பஹாசா இந்தோனேஷியா பேச தெரியாதே..  அவருடைய பேரன் தமிழ் பேச தடுமாறுவார். ஆனாலும் முயற்சி செய்து பேசுவார். வரலாறு எனக்கு கொஞ்சம் தகராறு. அதனால் வரலாற்று தகவல்களை இத்தோட முடிச்சுக்கலாம்.

சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கும் இந்தோனேஷிய தீவுதான் புலௌ பத்தாம் (Pulau Batam) Pulau என்றால் இந்தோனேஷிய மொழியில் தீவு என்பது பொருள். பத்தாம் இந்தோனேஷியாவின் Free trade zone. அதனால் பல பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அதிகம். அதனால் நம்மைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களும் (Expatriates) அதிகம். இந்த தொழிற்சாலைகளால் உள்நாட்டு மக்களும் வேலைவாய்ப்பு பெற்று கொஞ்சம் வளமான தீவு. பன்னாட்டு தொழிற்சாலைகள் வெளியேறி விடாமல் இருக்க தரமான சாலை வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகள் அதிகம்.
 
ஒரு காலத்தில் பத்தாம் தீவு என்பது சிங்கப்பூர் மக்களின் உல்லாச தீவு. அந்த கெட்ட பெயர் மாறி இப்போது நல்ல ஒரு சுற்றுலா தீவு. 

இப்போ இந்த தீவுக்கு எப்படி போவது விசா நடை முறைகள் என்னென்னன்னு பார்க்கலாம். 

சென்னை, மதுரை, திருச்சி, கோவை ன்னு எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகள் இருக்கின்றன. சிங்கப்பூருக்கு வர இந்தியர்களுக்கு விசா தேவை. சுற்றுலா விசா எளிதில் கிடைக்கும். விசா பெறும் வழிமுறைகளும் எளிதானது. ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்க முடியும். அல்லது ட்ராவல் ஏஜென்சி மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். சிங்கப்பூரிலிருந்து அருகிலுள்ள பிற நாடுகளுக்கும் செல்ல திட்டமிடும் போது மல்டிப்பிள் என்ட்ரி விசா(Multiple entry visa) வாங்க வேண்டும். இப்போது டூரிஸ்ட் விசா அப்படிதான் கொடுப்பதாக நினைக்கிறேன். ட்ராவல் ஏஜென்சியில் உறுதி செய்து கொள்வது நல்லது. சிங்கப்பூரிலிருந்து ஒரு மணிநேர சிறிய கப்பல் பயணம் செய்தால் இந்த தீவை அடைந்து விடலாம். இந்த தீவிற்கு வர இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. நாம் இறங்கும் இடத்திலேயே நுழைவு விசா கிடைக்கும். தற்போது கட்டணம் எதுவும் இல்லை.
 
என்னடா இது முதலில் இறங்குற சிங்கப்பூர் பற்றி சொல்லாம நேரடியா இந்தோனேஷியா போயிட்டாளேன்னு நினைக்காதீங்க. 13 வருடங்கள் வாழ்ந்த இடம் இல்லையா… அதான் பாசம் ஜாஸ்தி. சிங்கையும் சுற்றுவோம் அப்புறமா.

கப்பல் பயண அனுபவங்கள் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்….

- கவிசிவா

 

Comments

அழகான துவக்கம். உங்க எழுத்தை படிக்க கசக்குமா... வாழ்த்துக்கள். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டுரை ஆரம்பம் நல்லா இருக்கு மேடம். இந்தோனேசியாவில அடிக்கடி நிலநடுக்கம் வருமாமே? எப்படி பயமில்லாம இருந்தீங்க? நீங்க சந்திச்ச அனுபவம் இருந்தா அது பத்தியும் எழுதுங்க

"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"

- மஹா

வெல்கம் பேக் கவி. எங்களை எல்லாம் சிங்கப்பூர் இந்தோனேஷியா கூப்பிட்டு போக வந்துருக்கிங்க. நாங்க தயார் ஆகிட்டோம் உங்க கூட பயணம் வர..வெயிட்டிங் அடுத்த பகுதிக்கு ;)

Be simple be sample

கவி நானும் ரெடி பத்தாமை பார்க்க ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாங்க வாங்க நானும் ரெடியாட்டேன் ஊர் சுற்ற ராெம்ப வருடம் ஆச்சி ஊா் சுற்றி அறுசுவையில்.. கிளம்பிட்டோம் கிளம்பிட்டோம்.. வழியில் அடிக்கடி எதாவது சாப்பிட கேட்பேன்.. கவி பேக் பண்ணிடுங்க.. எனக்கு மட்டும்.. (தப்புதவறிக்கூட ரேவா கிட்ட சாெல்லிடாதீங்க..)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாங்க வாங்க நானும் ரெடியாட்டேன் ஊர் சுற்ற ராெம்ப வருடம் ஆச்சி ஊா் சுற்றி அறுசுவையில்.. கிளம்பிட்டோம் கிளம்பிட்டோம்.. வழியில் அடிக்கடி எதாவது சாப்பிட கேட்பேன்.. கவி பேக் பண்ணிடுங்க.. எனக்கு மட்டும்.. (தப்புதவறிக்கூட ரேவா கிட்ட சாெல்லிடாதீங்க..)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி வனி. படித்து ஊக்கப்படுத்த நீங்க இருக்கும் போது உற்சாகமா எழுத வருமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி மஹா. நாங்கள் இருந்த பத்தாம் தீவில் இதுவரை நிலநடுக்கம் வந்ததில்லை. 2004 சுனாமியின் போதும் பாதிப்பில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பெட்டி படுக்கை எல்லாம் கட்டி ரெடியா இருங்க. அடுத்த பகுதியில் கப்பலில் போகப்போறோம். நன்றி ரேவ்ஸ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுவா. சுற்றிக்காட்ட நானும் ரெடி. மனசுக்கு பிடிச்ச கொசுவத்தி சுற்றுவதும் சுகம்தானே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி இந்தோனேசியாவ பத்தி உங்க அனுபவம் படிக்க படிக்க என் கண்ணுக்குள்ள துபாய், அபுதாபி வந்துபோகுது.

எழுத்து வழியா மட்டும் தான் கூட்டி போவீங்களா? டிக்கெட் போட்டு கூட்டி போனாலும் செமயா இருக்குமே,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேவா. சாப்பாடு எல்லாம் கிடைக்கும் ஆனால் இந்தோனேஷிய சாப்பாடுதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அறுசுவை கெட்டுகெதர் பத்தாமில் வச்சுடலாமா :). நாம் வாழ்ந்த இடங்கள் மீது எப்பவுமே ஒரு பாசம் இருக்கும் இல்லையா.
நன்றி ரேணு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த ரேவ் புள்ள் சொல்லுதுன்னு என்னய விட்டுட்டு போய்டாதிங்க கவி. நான் வழிலலாம் அடிக்கடி சாப்பிட கேட்க மாட்டேன். மொத்தமா வாங்கி கொடுத்துட்டா நான் பாட்டுக்குனு சாப்பிட்டுகிட்டே வருவேன். சரியா

Be simple be sample

ஆமாமா... மறக்காம ரேவ்ஸ்க்கு 10 பொட்டலம் உப்புமா வாங்கிக்குடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

துபாய் அபுதாபி பற்றி எழுதுங்க... உங்களுக்கும் ஃபளாஷ் பேக் ஆச்சு, எங்களுக்கும் படிக்க ரசிக்க புது கட்டுரை ஆச்சு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீண்டும் அறுசுவையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது . கடல் கடந்தும் நம் தமிழர் பற்றி பேசுவதும் , தமிழர்களை நினைவுறுத்தும் நிகழ்வுகள் நடப்பதும் மிகவும் பெறுமையாகவும் , மகிழ்ச்சியாகவும் உள்ளது . கப்பல் பயணத்தில் இணைகிறேன் . வாழ்த்துக்கள் கவி .

அம்மா தாயே. உப்புமா கொடுக்கறதுக்கு மட்டும் எவ்வளவு பிசினாலும் வந்துடறதா. நீங்க சொல்லுங்க கவி இந்தோனேஷியா உணவுல உப்புமா இல்லதானா.. :)

Be simple be sample

நீங்க இல்லாமலா ரேவ்ஸ். வாங்க வாங்க வந்து வண்டியில ஏறுங்க :). உங்களுக்கு கெரெப்போ அதான் பா இந்தோனேஷியா சிப்ஸ் வாங்கி தரேன். சாப்பிட்டுட்டே வாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹா ஹா இங்கேயும் உப்புமாவா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரேணு. கண்டிபாக ரேணு. இந்தோனேஷியர்கள் நம் மன்னர்கள் அவர்களை ஆண்டதை பற்றி நம்மிடம் சொல்லும் போது ஏதோ நாமே சாதிச்சது போல பெருமையாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்தோனேஷியாவில் உப்புமா இல்லை. ஆனால் எங்க வீட்டுல உப்புமா செய்யலாமே :). சரி சரி அழாதீங்க உப்புமா தரமாட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமா ரேணு நாங்க துபாய் அபுதாபி பற்றி தெரிஞ்சுக்குவோம்ல. எழுதுங்க ரேணு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கை வண்ணம் காண மகிழ்ச்சி, தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹை சீதாம்மா எப்படி இருக்கீங்க... எவ்ளோ நாளாச்சுது...
நன்றி சீதாம்மா. அறுசுவையில் எழுதுவதென்றாலே மகிழ்ச்சிதானே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுவையான பொங்கலை எங்களோடும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கவீஸ். எனக்கு இது நிச்சயம் ஒரு வழிகாட்டியாக இருக்கப் போகிறது.

‍- இமா க்றிஸ்

எப்போ பத்தாம் போக போறிங்க சொல்லுங்கோ... முடிந்தால் அப்போது நானும் அங்கே வந்திடுவேன். நன்றி இமாம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!