பட்டம் தந்த பட்டம்

பட்டம் தந்த பட்டம்

அன்று மாலை நேரம்
உலர வைத்த துணிகள் அனைத்தும்
எப்போது‌ எங்களை எடுக்கப் போகிறாய்
என கேட்காத குறையாய்
காற்றில் பறந்து கொண்டிருந்தது!!!!
நானோ என் தம்பி தங்கைகளுடன்
பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தேன்....
தம்பி!!! அங்கு என்ன செய்கிறாய்?...
துணிகளை மடித்து வைக்கச் சொன்னேனே..
என்ன ஆயிற்று?..
என்று அப்பாவின் குரல்..

என் கட்டுப்பாட்டில் இருந்த
பட்டத்தின் மாஞ்சாவை
தம்பியிடம் ஒப்படைத்து விட்டு நகர்ந்தேன்
இதோ முடிந்தது அப்பா என்று!!!!!

பட்டம் பெறும் வயதில்
பட்டம் விட்டு மகிழ்ந்த தருணம் அது..!
பட்டம்..!
எவ்வளவு அழகாகவும்
சுதந்திரமாகவும் கட்டுப்பாட்டுடனும்
காற்றில் அசைந்து அசைந்து பறக்கிறது
எந்தக் கவலையுமின்றி....
அன்று தம்பியின் கையில் இருந்த மாஞ்சா அறுந்து
எங்கோ சென்று விழுந்தது... அப்பட்டம்!!!!
மறுநாள் காலையில் வந்து சேர்ந்தது ஓர் கடிதம்....
கடிதத்தை படித்த அப்பா,
உன் கல்லூரியில் இருந்து பட்டமளிப்பு விழாவிற்கு
அழைப்பு வந்துள்ளது தம்பி என்றார்....
அம்மா தம்பி தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டிய காரணத்தால்
நீயும் அப்பாவும் போய் வாருங்கள் என்றாள் புன்னகையோடு..

கால்வாய் நீரோ.. கம்மாய் நீரோ..
குளத்து நீரோ.. குட்டை நீரோ...
ஏரி நீரோ.. எந்நீரோ..
கடலில் வந்து கலக்கின்ற பட்சத்திலும்
கடல் கண்கொள்ளாக் காட்சியாகவே பிரதிபலிக்கிறது!..
அதுபோலவே உயரமோ குட்டையோ
ஒல்லியோ குண்டோ
நல்லவரோ கெட்டவரோ
இங்கு வந்து சேருகின்ற போதிலும்
நல்ல நட்பு(பை) பெற்ற மனிதர்களாக்குகிறது கல்லூரி!!

மரத்தடியில் நடந்த வட்டமேசை மாநாடுகளும்..
டீ கடை பெஞ்ச்களும்... உணவகங்களும்...
பேராசிரியர்களை நண்பர்களாகவே நினைத்து
வாதாடிய தருணங்களையும் மறக்க முடியுமோ!!!!

எங்களைப் பிரித்த ஊர்ப் பேருந்து நிலையங்கள்...
ஒன்று சேர்க்கும் வேலூர் பேருந்துகள்...
அந்தக் காலத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு
மரியாதையும் வேலை வாய்ப்பும் இருந்தது...
இந்தக் காலத்திலோ பட்டத்திற்கு மதிப்பும் இல்லை
வேலை வாய்ப்பும் இல்லை...
இங்கு தான் பட்டமும் கல்வியும் கூட வியாபாரமாகி விட்டதே!!!!
இவ்வாறு அப்பாவுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன்
பேருந்து நிலையத்தில் அமர்ந்து...
மீண்டும் காத்துக் கொண்டிருக்கிறேன்!...
பட்டம் பெறுவதற்கு அல்ல!..
நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் விடுவதற்கு.....

வயது முதிர்ந்தால் என்ன முதிராவிட்டால் நமக்கென்ன...
நாமும் விடுவோம்..
பறப்போம்.. பெறுவோம்.. பட்டத்தை!!

ஆக்கம்: ரெங்கன் பாபு
உறுப்பினர் எண்: 61292

Comments

அப்பா இல்லாத கவிதையே இல்ல போல..
சூப்பர், தொடர்ந்து எழுதுங்க.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்ததில் மகிழ்ச்சி அக்கா.

உங்கள் ஆக்கத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது மெதுவே என் வயசு இறங்கிப் போவது மாதிரி உணர்ந்தேன். :-) எனக்கும் பட்டம் விடும் ஆசை வருகிறது.

உங்களுக்குப் பட்டம் கட்டத் தெரியும் இல்லையா? எனக்கு மறந்து போய் விட்டது. குட்டியாக ஒரு பட்டம் கட்ட வேண்டும். கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.

‍- இமா க்றிஸ்

அதற்கென்ன தாராளமாக செய்து விடலாமே... மிக்க மகிழ்ச்சி தங்களின் வரிகளை படித்ததும்...

nalla kavidhai. . How to send kavidhaigal to admin?

நன்றிகள் பல,
முத்து

https://www.arusuvai.com/tamil/node/34258

மேலே உள்ள இழையைத் திறந்து பாருங்கள். அங்கேயே உங்கள் கவிதைகளைப் பதிவிடலாம்.

‍- இமா க்றிஸ்

@இமா க்றிஸ், உதவிக்கு நன்றி!

நன்றிகள் பல,
முத்து