தாய்மையடைய தயாராவது எப்படி?

தாய்மை

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் தாய்மை என்பது இனிதான ஒரு அனுபவம். இன்றைய காலக்கட்டத்தில் இதனை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அத்தகைய மகத்தான தாய்மையை அடைய எப்படி தயாராக வேண்டும்? கர்ப்பம் தரிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? செய்ய வேண்டியவை எவை?

  • திருமணம் முடிந்த உடனே கணவனும் மனைவியும் முழு உடல் பரிசோதனை (Master health check up) செய்துவிட்டு, குடும்ப மருத்துவரை அல்லது ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து உங்களது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் அல்லது இல்லை என்பது பிரச்சனை அல்ல. எல்லோரும் ஒருமுறை இதனைச் செய்தல் மிகவும் நல்லது. இதனால் பலன் இருக்குமே தவிர இழப்பு எதுவும் இருக்கப் போவதில்லை. 
  • பெண்கள் குறிப்பாக தைராய்டு பரிசோதனை, Pap smear மற்றும் Breast exam செய்வது மிகவும் அவசியமானது. 
  • கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ பரம்பரை நோய்கள் ஏதேனும் இருந்தால் அதை ஒருவர் மற்றவரிடம் சொல்லாமல் மறைக்கவே முயற்சி செய்கின்றார்கள். அதன் விளைவாக பிறக்கும் குழந்தை அதே பாதிப்பிற்கு உள்ளாகின்றது. கணவன் மனைவி என்ற ஆன பின்னர், ஒருவருக்கொருவர் ஒளிவு மறைவில்லாமல் தங்களது உடல் பிரச்சனைகளைத் தெரிவித்து, தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது அந்த பிரச்சனையில் இருந்து உங்கள் குழந்தை விடுபட என்ன தீர்வு என்பதை அவர் தெரிவிப்பார். உங்கள் குழந்தையின் எதிர்கால நலன் கருதி இதனை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
  • கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு இருந்தே ஃபோலிக் ஆசிட் மருந்துகளை பெண்கள் எடுத்துக் கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
  • கணவன், மனைவி இருவரும் இரத்தப் பரிசோதனை செய்து தங்களது ப்ளட் க்ரூப் என்ன என்பதை அறிவது மிகவும் அவசியம். ஒருவர் பாஸிடிவ் இரத்த வகையிலும், மற்றொருவர் நெகட்டிவ் இரத்த வகையிலும் இருந்தால், கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்பின்போதும் வழக்கத்தை விட அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டும். 
  • பற்களில் பூச்சி பல், ஓட்டை போன்ற பிரச்சனைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் பல் ஈறுகளின் வீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்மறை விளைவுகளை உண்டு செய்யலாம். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு ஒரு நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து பற்கள் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை எல்லாம் சரி செய்துவிடுங்கள்.
  • கர்ப்பம் தரித்தலுக்கு முன்பே நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்களது எடை ஆரோக்கியமான எடையாக இருப்பின் குழந்தை பிறப்பில் பிரச்சனைகள் வருவதில்லை. உங்கள் எடை உங்கள் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடையா என்பதை அறுசுவையில் கொடுக்கப்பட்டுள்ள உடல் பருமன் சுட்டு (Body Mass Index)  மூலம் உத்தேசமாக கணக்கிடலாம். அதீத பருமனும், மிகவும் மெல்லிய உடம்பும் குழந்தை பிறப்பின் போது தேவையில்லாத சிக்கல்களை தரவல்லது. எனவே, முறையான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.
  • உடல் ஆரோக்கியத்தைவிட முக்கியமான ஒன்று மன ஆரோக்கியம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மிகவும் ஓய்வான மனநிலையில், மனக் குழப்பங்கள், பயம் எதுவும் இல்லாமல் இருத்தல் மிகவும் அவசியமானது. மனதிற்கு ஸ்ட்ரெஸ் எதுவும் கொடுக்காமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருப்பது, தாய்மையையும், பிள்ளைப் பேற்றையும் இனிமையான அனுபவமாக்கும். எனவே, கர்ப்பம் தரித்தலுக்கு முன்பு மனதளவில் தயாராகுதல் மிகவும் முக்கியமானது. இதற்காக யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். 
  • அடுத்த விசயம், பட்ஜெட். பொருளாதார ரீதியில் கணவன், மனைவி தயாராய் இருப்பதும் அவசியமானது. இயற்கையான பிரசவம் நடைபெற வேண்டும் என்பதுதான் எல்லாரது விருப்பமாக இருந்தாலும், எதிர்பாராத காரணங்களால் பிரசவம் சிக்கலாக செல்வதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தாலோ, அல்லது பிறந்த குழந்தைக்கு உடனடியாக ஏதேனும் மருத்துவ சிகிச்சைகள் கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலோ, பணம் என்பது மிக முக்கிய தேவையாய் இருக்கும். எனவே, போதுமான பணத்தை முன்கூட்டியே சேமித்து வைத்து, பிரசவத்திற்கென்றே தனியே ஒதுக்கி வைத்தல் நல்லது. 
  • இறுதியாக, கருத்தரிக்க தயாராகும் பெண்கள் தங்களது மாதவிடாய் சுழற்சியை சரியாய் கணக்கிட்டு, குழந்தைப்பேறு உண்டாக வாய்ப்பு உள்ள நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் முக்கியமான ஒன்று. கருத்தரிக்க உகந்த நாட்களை அறுசுவையின் இந்த பக்கத்தின் மூலமாக கணக்கிடலாம். இது ஒரு உத்தேச கணக்கிடுதல். எல்லோருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாது.

குழந்தைபேற்றிற்கு இத்தனை விசயங்களை செய்ய வேண்டுமா? எல்லோரும் இப்படித்தான் செய்கின்றார்களா? என்ற கேள்விகள் எழலாம். இவை செய்வதற்கு சிரமமானவை அல்ல. இதனால் பாதிப்புகள் எதுவும் நிகழப் போவதில்லை. மாறாக நன்மைகளே பிறக்கும். சுகமான தாய்மைக்கு தயாராக இந்த வழிமுறைகள் பெரிதும் உதவிடும். 

Comments

மிகவும் அவசியமான கட்டுரை. அறுசுவை தளத்திற்கு வரும் இளம் சகோதரிகள் பலருக்கு உதவும். அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

‍- இமா க்றிஸ்

Enaku marriage aagi 2yrs aaga pogudhu..Enaku baby illa...clomid edudhukitane..bt soln illa...next month FSH injection poda sollirukanka...indha month follicle size left ovary 9 mm,Endo thickness 8.9,Right ovary 9mm,7mm...cyst 2 ovary la yum illa....Enaku romba kastama irukku...bt weight gain aatchu.....thyroid Tab edudhutrukane....Irregular periods irukku

Ennaku marriage aagi 3 months aguthu.... Last month periods thalli pochu but - ve result in preg test and got periods after 50 days.... Endha month um period agala 46 days agiduchu.... Ennaku eppavume irregular periods dan... How to get pregnant with this irregularity... Pls help me...

Sister 28nov period start date, Dec 8th sex vachukittom, ippo naa thayagara vaippu erukka,
Sollunga please,

Ippo Naa pregnant aga mudiyumaa,
Please sollunga, my husband go to abroad

Sister ellarukkum ovulation date same ah varadhu illa neenga date fix pannilam intercourse vacikkadhinga adhu ungalukku stress dha kodukkum ungalukku period start aana 5-vadhu naalirundhu next period ku before 5 days varaikkum oru naal vittu oru naal night mattum oru dhadava intercourse vachikonga mudinja udane elundhirikka vendam 1hour unga position ah maatthama nenga padutthu irunga kaal agatti vaikka vendam idha nenga one month follow pannale podhum next month nenga pregnant dha ungalukkum unga husbandkum problem illena dha ungalukku 1month la result theriyum enakku marriage aagi 1year aagudhu naanga ipdi idha dha follow pannom ippa naa 3month consive ah irukka nenga try panni paarunga try pannum podhu unga husband ku garlic ah gee la varutthu kudutthu morning night sapta sollunga because spem laam nalla active ah irukkum en husband ku countings kammiya irundhuchi nanga medicine edhuvum edutthukkala intercourse vachikkira andha month mattum garlic varutthu sapta kuduttha ipo correct ah irukku so pls sister delay pannama naa sonna dha try panni paarunga nenga chicken saptave kudadhu

Abitha

Frz.... Enaku first baby tube la form agi athuku APM atha abort panom... Ipo Vara 9 date enaku period varathu.. but athigama velai poguthu... Karu katal nadakum podhu ipdi Vellai poguma solunga PLZZ...

Sinthumathi

கருசிதைவு ஏற்படுவது எதனால்?
http://www.tamilxp.com/2018/01/types-of-miscarriage-in-tamil.html

நீங்கள் புதியவர். இங்குள்ள விதிமுறைகள் தெரிந்திராது. வேறு தளங்களின் முகவரிகள் அறுசுவையில் பகிர்வதில்லை. அந்தச் சுட்டியை நீக்கிவிடுகிறீர்களா? அப்படியே அந்தக் கருணைக் கிழங்கு துவையலையும் நீக்கினால் நல்லது.

இப்பொழுதே என் நன்றி.

‍- இமா க்றிஸ்

திருமணம் ஆகி ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் எனது அண்ணி
உள்ளார்.அதற்கு என்ன தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்.
அண்ணன் வெளிநாட்டில் உள்ளார்

Sri Divya

Unga Annan velinattil ettana varusama erukkar

2 வருசமாக இருக்கிறார் வருகிற மார்ச் மாதம் வருகிறார். A. Shakila banu sister

Sri Divya

Hi toligale,

Enakku uyine sutam pananum etacum erukka- urine vadai varutu

தயவுசெய்து தோழிகள் ஆலோசனை தரவேண்டும். எனது அண்ணி மனமுடைந்து போய் இருக்கிறார்.
இது நீடித்தால் ஏதேனும் விபரீதம் ஆகிவிடும்.நல்ல வழி கூறுங்கள்

Sri Divya

Hi frnds I am new to this gp actually enoda last period date 26-jan enaku regular periods but period ipo 1 day delay agiruku Na last 1 yr baby ku try panitu iruko enaku tried and headache matu last 1 week a iruku idhu pregnancy symptoms a ? Pls enaku romba confused a iruku explain any 1

45 நாட்கள் கழிந்த பின் ஹோம் ப்ரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பாருங்க. முடிவு எப்படி வந்தாலும் டாக்டரையும் பார்க்கிறது அவசியம்.

‍- இமா க்றிஸ்

Hi sisters நான் இன்று தான் வந்துள்ளேன். எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லை . 3 முறை IVF பண்ணேன் success ஆகலை இப்போது tablet எடுத்து கொண்டு உள்ளேன் . கரு முட்டை வளர்ச்சி குறைவு மற்றும் நீர்க்கட்டி உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். முட்டையின் மீது நீர்க்குமிழி போல் உள்ளது என்றனர். உடல் எடை 62 உள்ளது குறைக்க வேண்டும் . ஆனால் தாய்மை அடைய எந்த பாதிப்பும் இல்லாம‌ல். எனக்கு ஒரு சந்தேகம் follicular study என்றால் என்னவென்று கூறுங்கள் pls help me.

பழைய கேள்விதான். பதில் சொல்ல... அல்ல, கேட்கத் தோன்றியது. திருமணம் ஆகாமல் குழந்தை கிடைக்காது என்பது சின்னவர்களுக்கே தெரியும். கணவர் கூட இல்லாமல் கர்ப்பம் ஆக முடியாது என்பதை எப்படி வளர்ந்த ஒருவர் அறியாமல் இருப்பார்? விபரீதம் ஆகும் என்ரு பயந்தால், அண்ணாவை ஒரேயடியாக அண்ணியோடு வந்து இருக்கச் சொல்லுங்க ஸ்ரீ திவ்யா அல்லது அண்ணியை அண்ணா இருக்கும் நாட்டுக்கு அனுப்பி வைங்க.

‍- இமா க்றிஸ்

Thanks sis

Frnds enaku regular periods dha but Indha month late agiruku last 1 yr a nanga baby ku try panrom Iniki enaku 35 th day but pregnancy test negative wait pani 10 days ku apram patha positive aga chance iruka frnds enaku let pain and abdominal pain iruku. Enaku romba confusion a iruku romba stress a feel panra

AdHu vandhu ungaloda karu muttai oda size a measure panradhukaga panuvanga ovulation time 14 to 15 days andha days kula unga egg normal growth iruku nu papanga unga last month period date la irundhu 12 th pana soluvanga again 14 or 15 th day panuvanga correct time injection potu unga egg a release panuvanga neenga andha time la uravu vachikita baby ku neraya chance iruku

Hi friends.. நான் இங்க புதுசு.. எனக்கு marriage ஆகி 1 year ஆகுது. Doctor கிட்ட செக் பண்ணதுல கருமுட்டை வளர்ச்சி இல்லை pcod இருக்குனு சொல்றாங்க.. எந்த மாதிரி food items எடுத்துக்கிட்டா கருமுட்டை வளரும். Help me friends.

Be unique

நீங்கள், 'கருமுட்டை வளர' என்று மேலே வலது பக்கம் உள்ள கூகுள் சர்ச் பாக்ஸில் தட்டி, 'என்டர்' கொடுங்க. இது பர்றிப் பேசி இருக்கும் தமிழில் உள்ள இழைகள் எல்லாவற்றையும் காட்டும். தமிங்கிலத்திலும் சில இழைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். என்று தட்டினாலும் வரும். என்னால் இன்று தேடிக் கொடுக்க இயலவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்கள் பிரச்சினை தீர்ந்து கர்ப்பமடைய என் பிரார்த்த்னைகள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் pcod பிரச்சினைக்கு
லவங்க பட்டையை தூளாக அரைத்து,
அதை 3 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் அளவு கொண்டு கொதிக்க வைத்து, அதை மூன்று டம்ளர் ஒரு டம்ளர் ஆக மாற்றி, தேன் கலந்து சாப்பிடவும். ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் பின்னர் பின்னர் வெற்றிதான்....

எனக்கு திருமணமாகி 1 வருடம் 4 மாதம் ஆகிறது.. நான் கடந்த முன்று மாதம் ஆக டாக்டர் இடம் பரிசோதனை மேற்கொண்டேன்.. எனக்கும் என்னவர்க்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்று சொல்லி விட்டார்... டாக்டர் எனக்கு இரண்டு மாதத்திற்கு போலிக் மாத்திரை கொடுத்தார்... நானும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன்.. இரண்டு மாதம் மாத்திரை சாப்பிட்டும் நான் இப்பொது மாதவிடாய் ஆகி விட்டேன்.. (2 மாதம் பின் நீங்கள் கண்டிப்பாக கரு உற்றிபிர்கள் என்று டாக்டர் சொன்னார் ஆனால்...).எனக்கு மிகவும் மன வேதனையாய் உள்ளது.. நீங்கள் எனக்கு பதில் அழிக்க வேண்டும்.

ஜூன் 2 இல் டாக்டர் இடம் போனேன் ... டாக்டர் 5 நாட்கள் மாத்திரை கொடுத்தார் பின் 10 ஆவது நாள் வந்து ஸ்கேன் பண்ணிட்டு 11 ஆவது நாள் iui இன்ஜெக்ட்டின் போட சொன்னாங்க.. அதன் படி நடந்தேன். பின் 12 ஆவது நாள் மீண்டும் கருமுட்டை வளர்ச்சி பார்த்தாங்க... கருமுட்டை நன்கு வளர்ந்து உள்ளது. 5டயஸ் காண்டக்ட் இருங்க... பின் பீரியட் ஆனா 2 ஆவது நாள் வாங்க இல்லைன்னாலும் வாங்க சொன்னாங்க... எனக்கு இப்ப 20 ஆவது நாள் கருமுட்டை எப்படி இருக்கும் என்றும் நான் கருவுற்று இருக்கேனா இல்லையா என்பது நீங்க தா சொல்லணும் தோழி. 20 ஆவது நாளில் hometest செய்தால் பலன் கிடைக்குமா? தயவு செய்ட்க்கு எனக்கு பதில் அழிக்கனும்ம் தோழி...

இவை உங்களைப் பார்க்கும் மருத்துவர் மட்டுமே பதில் சொல்லக் கூடிய கேள்விகள். 20ம் நாள் ஹோம்டெஸ்ட்டில் நெகடிவ் தான் காட்டும். பார்த்தால் கவலையாக இருக்கும். ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுக்க மாட்டீர்களா? 45ம் நாள் வரை பெரும்பாலும் நெகடிவ்தான் காட்டும். பொறுமையாக இருங்க. ஆனால் உங்களுக்கு மாதவிலக்கு தாமதிப்பதாகத் தெரிந்தால் மருத்துவர் சொன்னது போல போய்ய்ப் பாருங்க. மாதவிலக்கு ஆகினாலும் அவர்கள் சொன்னது போல இரண்டாம் நாள் போங்க. நம்பிக்கையோட இருங்க. நீங்கள் விரைவில் தாய்மை அடைய என் பிரார்த்தனைகள்.

‍- இமா க்றிஸ்

--

‍- இமா க்றிஸ்

Imma Amma உங்கள் உடனடி பதில் எனக்கு ஆறுதல் தருகிறது அம்மா.... இன்று எனக்கு 23 rd எனக்கு கால் பாதம் தான் வலிக்கிறது. சிறிது நேரம் உட்கார்ந்து நின்றால் எனது weight என் கால் பாதம் (நடப்பதற்கு கொஞ்சம் சிரமாக உள்ளது.)வலிக்கிறது..காலை இல் அதிகமாக உடம்பு அனல் போன்று சூடாக உள்ளது.... எனக்கு நீங்க தான் சொல்லணும் ஏன் இப்படி உள்ளது என்று.... கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள் அம்மா...

நான் டாக்டர் இடம் சென்று கேட்டேன்... 3 to4 days symptoms இருக்கும்.. கடவுளை பிராத்தனை செய்யுங்கள் என்று சொல்லி கால் வலிக்கு மாத்திரை கொடுத்தார்.எனக்கு இப்போது கால் வலி இல்லை..27 வது நாள் கொஞ்சம் பயமாகமும் உள்ளது. வலது பக்கம் வயிற்றில் சிறிது வலி இழுப்பது போன்று உள்ளது.உதவுங்கள் தோழிகளே.. இப்படி தான் இருக்குமா?