
தேதி: October 1, 2018
பரிமாறும் அளவு: 3 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மொத்த நேரம்: 10 நிமிடங்கள்
மில்க் பிஸ்கட்ஸ் - 12
கோகோ பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 டின்
கேக் ஸ்பிரிங்க்ஸ் - 1/4 கப்
பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல் - 1/4 கப்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும். பிஸ்கட்டுகளை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

பொடித்த பிஸ்கட் தூளுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதனுடன் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

அழுத்தி பிசையாமல் விரல்களால் மிருதுவாக ஈரப்பதமாக பிசைந்து கொள்ளவும்

சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து உருட்டி தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

சில உருண்டைகளை ஸ்பிரிங்கிஸ்ஸில் பிரட்டி எடுக்கவும். டேஸ்டி பிஸ்கட் சாக்லேட் பால்ஸ் ரெடி.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

பொடித்த நட்ஸ் வகைகளிலும் பிரட்டி எடுக்கலாம்.
Comments
அபி
சூப்பா்.. ராெம்ப ஈஸியான செய்முறை.. நிச்சயம் என் மகளுக்கு செய்து தருகிறேன்.. நன்றி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
அபி
குட்டீஸ் ரெசிபி சூப்பர் ..
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பாபு அண்ணா!
;))) அபி ஸ்வீட்ல புதுசா என்னமோ ஸ்ப்ரிங்ஸ், ஸ்ப்ரிங் கிஸ் எல்லாம் சேர்த்திருக்காங்க. ;)) எடிட் பண்ணி விடுங்க.
- இமா க்றிஸ்