OPOS குருமா

OPOS குருமா

தேதி: October 1, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

OPOS என்பது One Pot One Shot என்பதன் சுருக்கம். ராம்கி என்று அழைக்கப்படும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களால் பிரபலமாக்கப்பட்டுள்ள இந்த சமையல் முறையில் ஒரே பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாய் வேக வைத்து சமைத்திடல் வேண்டும்.

 

காரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
காய்ச்சிய பால் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதி பத்திரி

அரைக்க
தேங்காய் - 2 துண்டுகள்
கசகசா - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
கரம்மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
தனியாதூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
முந்திரி - 10


 

தேவையானப் பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து கொள்ளவும்.
தேவையானப் பொருட்கள்
ஒரு குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அதில் நெய், எண்ணெய் சேர்க்கவும். பட்டை, லவங்கம், ஏலக்காய், ஜாதி பத்திரி தூவியது போல் வைக்கவும்.
பட்டை, லவங்கம்
அதன் மேல் வெங்காயம், தக்காளியை பரப்பி விடவும்.
வெங்காயம் தக்காளி
அதன் மேல் வெட்டிய காய்கறிகள், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பரப்பி விடவும். மேலும் அரை டம்ளர் தண்ணீர் விடவும். கிளறக் கூடாது.
தேங்காய் விழுது
அப்படியே மூடி அடுப்பில் ஏற்றவும். 2 விசில் விட்டு இறக்கவும்.
குக்கர்
இறக்கியதும் பால் சேர்த்து கலந்து விடவும்.
பால் சேர்த்தல்
எளிமையான சுவையான OPOS குருமா தயார். இது சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்.
OPOS குருமா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே சூப்பரா இருக்கு ரேவ்ஸ். செஞ்சுடுவோம்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கலக்கல் ரேவதி வதக்கலே வேண்டாம் போல அப்ப ரொம்ப ஈசி சூப்பர் ரேவதி

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample

தான்க்யூ சுவா. செய்து பாருங்க நல்ல டேஸ்ட்

Be simple be sample

ஆமாப்பா. 10 நிமிடத்தில் முடிந்துவிடும். காலை நேர பரபரப்புக்கும், விருந்தினரின் திடீர் வருகைக்கும் கைகொடுக்கும். செய்து பாருங்க தான்க்யூ

Be simple be sample

ஆஹா! எனக்கு இந்தக் குறிப்பு ரொம்..ப பிடிச்சிருக்கு. புக்மார்க் செய்துகொள்கிறேன். குறிப்புக்கு நன்றி ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

தான்க்யூ இமாம்மா. எனக்கும் பேவரீட் குறிப்பு இது. ஈசி அண்ட் டேஸ்டி

Be simple be sample