கஜோர் கட்டா

கஜோர் கட்டா

தேதி: October 2, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 20 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பேரீச்சம் பழம் - 15 - 20
தக்காளி - 1 (பெரியது)
பச்சை மிளகாய் - 1
வெல்லம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
உப்பு - சிறிது


 

பேரீச்சை, தக்காளி, பச்சை மிளகாயை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்யவும்.
தேவையானப் பொருட்கள்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதக்கல்
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி பேரீச்சையை சேர்த்து கிளறவும்.
பேரீட்சை
சிறிது உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கெட்டியாகி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்.
கஜோர் கட்டா
சுவையான கஜோர் கட்டா ரெடி. இட்லி, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். பேரீச்சம் பழம் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
கஜோர் கட்டா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புதுசு புதுசா என்னென்னவோ சமைத்து அசத்துறீங்க. கலக்கல் குறிப்பு அபி.

‍- இமா க்றிஸ்