சுகியம்

சுகியம்

தேதி: October 2, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கடலைபருப்பு 1 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 2 ஸ்பூன்
மைதா 1 கப்
உப்பு சிறிது
எண்ணெய் பொரிக்க


 

கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து மலர வேக விடவும். வேக வைத்த பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்து ஆற வைத்து அரைக்கவும்.
கடலைப்பருப்பு அரைத்தல்
பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதித்ததும் அரைத்த கடலைப்பருப்பை சேர்த்து, தேங்காய் துருவல், ஏலக்காய் தட்டி சேர்த்து கிளறவும்.
வெல்லம் சேர்த்தல்
நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி ஆற விடவும். 2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.
பூரணம்
ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். மைதாவில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். விரும்பமெனில் புட்கலர் சேர்க்கலாம்.
பூரண உருண்டை
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். மைதாவில் உருண்டையை முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.
பொரித்தல்
தோய்த்து எடுத்த உருண்டைகளை நான்கைந்தாக எண்ணெய் சட்டியில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
எண்ணெய்யில் பொரித்தல்
மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும். சுகியம் தயார்.
சுகியம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் . சூப்பர்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample

எனக்கும் பிடிக்கும். ஆனா இவ்வளவு நாளா செய்யவே வரல. இப்பதான் வந்தது. தான்க்யூ

Be simple be sample

அருமை ரேவதி. ஒரு சந்தேகம். செய்த அன்றே சாப்பிடணுமா வைத்திருந்தும் சாப்பிடலாமா?

‍- இமா க்றிஸ்

நாங்க செய்தா அன்றே மொத்தமா சாப்பிட்டுவோம் :p . மறுநாள் வரை வைத்து கொள்ளலாம்.

Be simple be sample