பிக் பாஸ் பிக் பாஸ்

பிக் பாஸ்

விடுதலை விடுதலை விடுதலை!!!

அப்ப்ப்ப்ப்ப்பா! )இத விஜய் சேதுபதி வாய்ஸ்ல அழுத்திப் படிங்க) ஒரு வழியா பிக் பாஸ் முடிஞ்சிடிச்சு.

நிஜமாவே சொல்றேன், ரித்விகாவுக்கு 50 லட்சம் கொடுத்த மாதிரி, 106 நாளும் (இந்த ப்ரோக்ராமை திட்டிகிட்டே) பார்த்த நமக்கு ஏதாவது அவார்ட் கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 1 தினமும் பார்க்கவில்லை. கமல் தொகுத்து வழங்குகிறார் என்ற ஆர்வத்தினால், சனி, ஞாயிறில் மட்டும் பார்க்கத் தொடங்கி, அப்புறம் ஓவியா மேட்டர்ல ஒரே ஃபீலிங்க்ஸ் ஆகி, அப்பப்ப பார்த்தோம்.

பிக் பாஸ்

இப்ப பிக் பாஸ் சீசன் 2, தினமும் பார்த்தே ஆகணும் (இத வ.வா.சங்கம் சிவகார்த்திகேயன், சூரி டூயல் வாய்ஸ்ல படிங்க) அப்படின்னு எங்க வீட்டு பிக் பாஸ் உத்தரவு போட்டுட்டாங்க.

மீற முடியுமா? (யாருப்பா அங்க, நம்பிட்டோம்னு லந்தா சிரிக்கறது)

வேற வழியில்லாம, நானும் தொடர்ந்து பார்த்தேன்.

எங்க ரெண்டு பேருக்குமே சீரியல் எல்லாம் பார்க்கற வழக்கமில்ல. இந்த ப்ரோக்ராமில் முக்கிய அட்ராக்‌ஷன், கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதுதான். நிகழ்ச்சியின் ஒரே ஆறுதலும் அவரே.

ஆனா பார்க்க ஆரம்பிச்ச பிறகு, அடிக்ட் ஆகிட்டோம்ங்கறது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு ஏன் தான் இதப் பார்க்கிறோமோ என்று எரிச்சல் பட்டதும் உண்மை.

நான் மனதளவில் உணர்ந்த ஒரு விஷயம், மிகவும் அளவுக்கதிகமான நெகடிவிட்டி வைப்ரேஷன். நிகழ்ச்சி முடிந்ததும், வெறுப்பும் கசப்பும் தோன்றும். தூக்கம் வராது. ஆனாலும் சிலந்தி வலையில் சிக்கின மாதிரி, தினமும் தொடர்ந்து பார்த்தோம் என்பதும் நிஜம்.

அதோட போச்சா, இதப் பற்றி, மக்கள் என்ன பேசிக்கறாங்கன்னு கூகிள் செர்ச் செய்து பார்க்கிற பழக்கம் வேற.

அப்பப்பா! பாலாஜி பேசுவது சரியில்லையென்று சொல்ல வரும் மக்கள் எழுதும் எழுத்தெல்லாம்... என்னவென்று சொல்வது.

இந்த ட்விட்டர், ஃபேஸ் புக் இதிலெல்லாம் இருப்பவங்க கண்டிப்பா ஓரளவுக்கு படிச்சவங்களாகவும், சிந்திப்பவர்களாகவும் இருப்பாங்க என்ற நினைப்பை ஓட ஓட விரட்டி விட்டாங்க.

எத்தனை தரக் குறைவான விமரிசனங்கள், எழுத்துக்கள்! போதுமடா சாமின்னு தோணிச்சு. நல்ல வேளை, நான் ட்விட்டர் அக்கவுண்ட் எல்லாம் ஆரம்பிக்கலை. (இருக்கற ஃபேஸ்புக் பைத்தியத்துக்கே வேப்பிலை அடிச்சு முடியலை)

ரித்விகா வென்றது மிகப் பெரிய ஆறுதல்.

Average: 5 (1 vote)

Comments

தக்கு தக்கு சிக்கு சிகு பிக்பாஸ். நாங்களும் கமலுக்காக ஆரம்பிச்சவங்கதான். உங்க மைண்ட்வாய்ஸ் தான் இங்கேயும் தோணும். நாங்க பிக்பாஸ் பர்ஸ்ட்டும் பார்த்தோம். ஆனா இந்த பிக்பாஸ் 2 ல வந்தவங்களை பார்த்ததும் முன்ன இருந்தவங்க ரொம்ப நல்லவங்களா போய்ட்டாங்க.

Be simple be sample

100% உண்மை எனக்கும் அதே பீலிங் தான் ஏண்டா பார்த்தோம் என்று தோன்றியது எப்படி ஒரு வழியா முடிந்தது, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா பார்க்க மாட்டேன் கிரேட் எஸ்கேப்டா சாமி.. இதோட பிக்பாஸ்க்கு பெரிய கும்பிடு.

அன்பு ரேவதி, செண்பகா

அடுத்த பிக் பாஸ் பாக்கக் கூடாதுன்னு தோணுது, ஆனா, வழக்கம் போல மாட்டிக்குவோம்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கண்டிப்பா பார்ப்போம். ;)

Be simple be sample

ஹாய் சீதா! நலம்தானே! மீண்டும் இங்கு சந்திக்க முடிவது... மகிழ்ச்சி. எல்லோரையும் இழுத்து வந்ததற்கு பாபுவுக்கு நன்றி. :-) (இங்கும் பெயரை 'டாக்' செய்யும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)

நான் முழுசா உட்கார்ந்து பார்த்தது இல்லை சீதா. க்றிஸ் பார்ப்பாங்க. நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டே காதில் விழுவதை வாங்கிக் கொள்வேன். இடையில் 'ப்ரீஸ்' சொல்லிட்டு போய் உட்கார்ந்து பார்ப்பது உண்டு. ஒரு அறுசுவைத் தோழி கேட்டார், 'நீங்களுமா!' என்று. அப்போதே தோன்றிற்று, எங்காவது ஒரு 'பிக்பாஸ்' இடுகை பதிவிட வேண்டும் என்று. மனம் மாறாமலிருந்தால் எப்போதாவது பதிவிடுவேன்.

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,

ஆமாம் இமா, அட்மின் கொடுத்த டாஸ்க்தான் இந்தப் பதிவு:) இன்னும் என்னெல்லாம் டாஸ்க் கொடுக்கப் போறாரோ தெரியலயே:)

பிக் பாஸ் தினமும் பாக்கறப்ப நான் அறுசுவையைத்தான் நினைச்சேன். எல்லோரும் ஆக்டிவ் ஆக இருந்தால், தினமும் விமரிசனப் பதிவு எழுதலாமேன்னு.

கண்டிப்பாக நீங்க எழுதுங்க, படிக்க ஆவலுடன் காத்துட்டு இருக்கோம். வி ஆர் வெயிட்டிங்! (வாய்ஸ் நல்லா இருக்கா)

அன்புடன்

சீதாலஷ்மி

'வி ஆர் வெயிட்டிங்!' அவ்வ்! ;))

நல்ல அட்மின் எனக்கு டாஸ்க் எதுவும் கொடுக்கல. வாழ்க்கை ஒரு டாஸ்க்கை முடிச்சு 'அப்பாடா!' என்கிறதுக்குள்ள இன்னொரு டாஸ்க்கை டாண்ணு தட்டுல போட்டு விட்டுருது. இங்க படிச்சு கமண்ட் போடுறதே பெரிய டாஸ்க்கா இருக்கு. :-) ஆனா இந்த டாஸ்க் - ரிலாக்ஸிங்கா இருக்கு. புது அறுசுவைல எங்க என்ன இருக்கு என்கிறதுதான் சிதம்பர சக்கரமா இருக்கு. பழகிரும். :-)

‍- இமா க்றிஸ்

பிக்பாஸ்... ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ன்னு கமல் நம்மை கண்ணை நோண்டிடுவேன்னு சைகையில் சொல்லுவாரே :). முதல் சீசன் ஓவியா வுக்காக பார்த்தேன். அவரின் அந்த தன்னம்பிக்கை, நேர்மை ரொம்ப பிடிச்சுது. சில விஷயங்கள் கற்றுக் கொள்ளவும் முடிஞ்சுது. ஆனால் ஃபாலோ பண்றதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இந்த சீசன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்தேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா,

பிக் பாஸ் நம்மை இழுப்பதற்கு ஒரு சைகாலஜிகல் காரணம் - அதில் நடக்கும் சம்பவங்களில் நம்மையும் ஒரு இடத்தில் மேட்ச் பண்ணிப் பாக்கறோம் என்பதுதான்.

ஆஃபிஸில் /குடும்ப உறவுகளில், க்ரூப்பிஸம் ஃபார்ம் பண்ணி, டார்கெட் பண்ணியிருக்காங்க என்று பெரும்பாலான பெண்களுக்கு தோணும். அதனால்தான் ஓவியாவுக்கு அவ்வளவு சப்போர்ட் கிடைச்சதுன்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

சிதம்பர சக்கரம் - இந்த வார்த்தை நல்லா இருக்கே.

எனக்கும் இன்னும் புது அறுசுவை பழகலை. முகப்பு எங்கே எங்கேன்னு தேடினேன் 2-3 நாள்!

இப்ப கொஞ்சம் பரவாயில்ல. நாம இங்க பத்து வருஷத்துக்கும் மேல இருக்கோமா, இப்ப வீட்டில் பொருட்களை மாத்தி வச்சுட்ட மாதிரி ஒரு சின்ன தடுமாற்றம். கொஞ்சம் கொஞ்சமா பழகிடும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி