குட்டித்தலையின் ஸ்னேக் என்கவுன்டர்கள்

என்னமோ பெரிசா கலாட்டா பண்ணி கிழிக்கற மாதிரி குட்டி கலாட்டக்கள்னு பேரு மட்டும் வச்சுப்புட்டு பேருக்கு மூணே மூணு பதிவை கிறுக்கிப்புட்டு போனவளைக் காணோமேன்னு வையப்படாது மக்காஸ். குட்டித்தலை ரொம்ப பாவம் :)

கிச்சன்ல மசாலா இருந்தாத்தானே சமைக்க முடியும். மண்டைக்குள்ள மசாலா இருந்தாதானே எழுத முடியும். மாசக்கடைசியில கிச்சன்ல உள்ள டப்பாக்களையெல்லாம் தேடி உருட்டி ஒப்பேத்தி சமைக்கற மாதிரி மண்டையில் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு ஒட்டியிருக்கற மசாலாக்களை தட்டி சேர்த்து எழுதி வச்சிருகேன். கம்ப்ளெய்ன்ட் பண்ணாம படிக்கோணும்.

பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு பா...ன்னு சொன்னாலே சகலமும் நடுங்கும். அம்புட்டு ஏன் பாம்பு படம் போட்டிருக்கற புத்தகங்கள், நியூஸ் பேப்பர் ன்னு எதையும் தொடக்கூட மாட்டேன். பார்க்க பாம்புத் தலை மாதிரியும் அதன் தோல் பாம்புத்தோல் மாதிரியும் இருக்குன்னு இங்கே கிடைக்கும் ஒருவகை பழத்தை தொட்டுக் கூட பார்க்க மாட்டேன். அம்பூட்டு பயம். இந்த ஃபோட்டோவில் இருப்பது புவா சாலக் (buah salak) என்னும் அந்த பழம்தான்

இப்படிப்பட்ட உலகமகா தைரியசாலியான என்னைத்தேடி ரெண்டு வாட்டி விசிட் அடிச்சிருக்கார் திருவாளர். பாம்பு. கவனமா தெளிவா தப்பில்லாம படிக்கணும். திருவாளர். பாபு இல்லை திருவாளர். பாம்பு :).

ஒருநாள் விடியற்காலை... அதான் சுமார் ஏழரை மணிக்கு வாசலைத் திறந்து காம்பவுண்ட் கேட்டை திறந்துட்டு உள்ளே வரும் போது பார்த்தால்... போர்ட்டிகோவில் சமத்தா ஒருத்தர் உடலில் மஞ்சள் கட்டங்களோட சிவப்பு புள்ளிகள் வச்ச சட்டை போட்டுட்டு சுருண்டு படுத்து தூங்கிட்டு இருந்தார். யாரா இருக்கும்னு பக்கத்துல போய் உட்கார்ந்து பார்த்தால்.... பா... பா... பாம்பூ...... பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒரே ஓட்டம் வீட்டுக்குள்ளாற... அப்புறம் என்ன தலைவரை கூப்பிட்டு அடிச்சு தூக்கிப்போட்டு... என்னத்த சொல்ல போங்க. சாரோட பெயர் கட்டுவிரியனாம். அப்புறம் சொன்னாக ஆத்துக்காரர்.

அப்புறம் இன்னொரு நாள் காலையில் ஆறு மணிக்கு எழும்பி கிச்சனுக்குள் போனேன். மிக்சி வயரில் காய்ந்த கறிவேப்பிலை தண்டு போல் ஏதோ இருந்தது. சரி ஏதோ இருக்கும்னு தூக்க கலக்கத்துலயே ஆத்துக்காரருக்கு காஃபி போட்டு கொடுத்து அனுப்பிட்டு திரும்பவும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு அதே ஏழரை மணிக்கு எழும்பி கிச்சனுக்கு போய் அந்த கறிவேப்பிலை தண்டு என்னான்னு பக்கத்துல போய் பார்த்தால்... பா... பா... பாம்பூ.... நல்லவேளை இவரும் தூங்கிட்டுதான் இருந்தார். தலைவருக்கு ஃபோன் பண்ணினால் வழக்கம் போல பிசி :(. செக்யூரிட்டிக்கு ஃபோன் பண்ணி குட்டியா ஒரு பாம்பு வீட்டுக்கு விசிட் அடிச்சிருக்கார். வந்து கவனிச்சுட்டு போங்கன்னு சொன்னேன். ரெண்டாவது நிமிஷம் பெரிய கம்போட வந்தாங்க. ஒரே போடு.... தூக்கத்துலேயே அது மேலே போயிடுச்சு. இவரும் குட்டியா இருந்ததாலே இவங்களோட அப்பா அம்மா வீட்டுக்குள்ள எங்கயாச்சும் இருக்காங்களான்னு தேடிப்பார்த்து இல்லைன்னு உறுதிப்படுத்திட்டு போனாங்க. இந்த முறை வந்தவங்க மலைப்பாம்பின் குட்டி.

அம்மே... ரெண்டுவாட்டி விசிட் அடிச்சப்போவும் சமத்தா தூங்கிட்டு இருந்தாங்க. அதனால் கொஞ்சம் தப்பிச்சேன். அப்புறம் என்ன அன்னிக்கு சமையலுக்கு விட்டாச்சு லீவு :). அதுக்கப்புறம் எப்போ கிச்சனுக்கு போனாலும் யாராச்சும் இருக்காங்களான்னு ஒருவாட்டி பார்த்து உறுதிப்படுத்திட்டுத்தான் அடுத்த வேலை.

என்ன இது ஸ்னேக் என்கவுன்டர்ன்னு தலைப்பு போட்டுட்டு பாம்பு படம் எங்கேன்னு கேட்கப்படாது... அதான் சொல்லிட்டேனே பாம்பு படம் எடுக்க வேண்டாம் அதோட படம் பார்த்தாலே பயம்னு. சோ நோ ஃபோட்டோ...

No votes yet

Comments

ஆத்தாடி உங்களைத்தேடி கட்டுவிரியன், மலைபாம்பு ந் பெரிய பெரிய அப்பாடக்கர் தான் வந்துருக்காங்க ;) .இங்கலாம் சாரை பாம்புதான் பார்த்திருக்கோம். வீட்டுல இல்ல ரோட்ல

Be simple be sample

பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்லுவாங்க உண்மைதான், ஆனா நீங்க அதை நகைச்சுவையாக சொல்லியவிதம் சூப்பருங்க:)

என்னதான் தைரியமா இருந்தாலும் பாம்புன்னு சொன்னா எல்லாருக்குமே ஒரு நடுக்கம் கண்டிப்பா வரும். இதுல வீட்டுக்குள்ளயே தரிசனமா? வெரி குட்... ஆனால், அந்த பழத்துல என்ன செய்வாங்கன்னு சொல்லலயே...

ரேவ்ஸ் நாம எல்லாம் அதுங்களை விட பெரிய அப்பாடக்கருங்கன்னு அதுங்களுக்கு தெரியலை போல :) மலைப்பாம்பு கூட ஓகே ஆனால் அந்த கட்டுவிரியன் இருக்கே.. அது பாம்புன்னே தெரியாமல் பக்கத்துல குனிஞ்சு உட்கார்ந்து என்னன்னு பார்த்தேன்.... பாம்புன்னு தெரிஞ்சதும் ஓடின ஓட்டம் இருக்கே.... அவ்வ்வ்...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் செண்பகா, பாம்பை பார்த்த பின்னாடி பல நாட்கள் ஒரே உதறல்தான். இப்போ நினைச்சு பார்த்தால் காமெடியா இருக்கு. ஆனால் அன்னிக்கு... அம்மே....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னாது வெரிகுட் ஆ..... ஏம்ம்மா ரேணு ஏன்...

அந்த பழமா... அதை இந்தோனேஷியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நான் கடைகளில் அது இருக்கும் திசை பக்கமே போக மாட்டேன்ல.... பயம் மக்கா பயம்...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவிசிவா,

யம்மாடியோ, படிக்கறப்பவே பயம்ம்ம்ம்மா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ரேவா பாம்புன்னா பயமா. எங்க வீட்டுக்கு வாங்க எத்தனை விதமான பாம்பு பாா்க்கனுமோ பாா்க்கலாம். அப்பறம் பாம்பு உங்கள் தாேழன் தாேழியா மாறிவிடும். இங்கே அவங்க டான்ஸ் எல்லாம் பயங்கறமா ஆடுவாங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

:-) பொஸம் முடிஞ்சு இப்போ பாம்பா!

அந்தப் பழம் எந்த அளவில் இருக்கும்? சுவை எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. படம் கொஞ்..சம் பிரப்பம்பழத்தை ஞாபகப்படுத்துது.

‍- இமா க்றிஸ்

அந்த பழம் சிறிய கிவி அளவில் இருக்கும். சுவை... தெரியவில்லை. நான் தான் அந்த பழத்தைக் கண்டால் எட்டடி விலகியே ஓடுவேனே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரெண்டு பாம்பும் தூங்கிட்டு இருந்தது. அதனால தப்பிச்சேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆத்தீ... பாம்பு டான்ஸ் பார்த்திருக்கீங்களா... படா தைரியசாலிதான் நீங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!