பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா இது சீரியல் பற்றி இல்ல. எப்பவோ வந்த பூவே பூச்சூடவா படம் பற்றிதான். சமீபத்தில் டீவியில் இந்த படம் ஒளிபரப்பினாங்க. நம்ம கடைகுட்டி அம்மாக்கு பிடிக்குமேன்னு டீவியில் ரிமைண்டரில் போட்டுவிட்டார். டீவி பார்க்கும்போது சரியாக ரிமைண்டர்க்கு ஏற்றார்போல் மாறி இந்த படம் என்று பார்த்ததும் ஹேப்பி.

எல்லாருமே இந்த படம் பார்த்துதான் இருப்பிங்க. ஏன் இந்த படம் பிடிக்கும் என தெரியவில்லை. எனக்கும் ஒரு வேளை இது போல் அன்னைய விட அன்பான பாட்டி இருப்பதனாலா என்னன்னு தெரியல. படம் பார்க்கும்பொழுது எல்லாருக்குமே அவரவர் பாட்டி நியாபகமும்,குறும்பு பேத்தியின் நியாபகம் வரும்.

அழகான கிராமத்தில் தனியாக இருக்கும் பாட்டி அவரை தேடி வரும் பேத்தி. பேத்தியை நம்பாமல் குழப்பத்தில் ஏற்க முடியாமல் இருப்பார், இனி எப்போதும் பிரிய மாட்டேன் என வாக்கு கொடுக்கும் பேத்தி. குட்டி வாண்டுகள், பக்கத்துவீட்டு ஹீரோ வழியில் சந்திக்கும் சின்ன சின்ன பாத்திரங்கள் இவர்களுடன் முக்கியமான கேரக்டர் அந்த காலிங்பெல்..
அவர்களை சுற்றிய உலகம் அவர்களுக்குள் ஒரு உலகம் என அவர்கள் சுழன்று வரும்போது நாமும்தான் அவர்களுடன் கலந்தே போய்விடுவோம்.

அழகாய் சுற்றி வரும் பாட்டி, பேத்தி இப்படியே இருந்துவிடுவார்களா என ஆசையாய் பார்க்கும்போது அவர்களை பிரிக்க வருகிறது காலம். பேத்திக்கு தலையில் இருக்கும் நோய் ஆபரேஷன் செய்தால் அவள் திரும்பலாம் அல்லது வராமல் போகலாம் என்ற நிலை வரும்போது அந்த பாட்டி எடுக்கும் முடிவும் பேத்தியை அனுப்பி விட்டு அவர் காலிங்பெல் பூட்டும்போது நாமும் அவரை போலவே திரும்ப வருவாள் என நம்பிக்கையுடன் படம் முடியும்
எவ்வளவு முறை பார்த்தாலும் கடைசி காட்சி மனதில் கணத்தை கூட்டும்.
தமிழில் ஜேசுதாசு பாடும் 'பூவே பூச்சூடவா ' என தொடங்கும் பாடல் இன்னும் இதயத்தை கரைக்கும். அங்கு பாட்டி மகளாகவும் பேத்தி அன்னையாகவும் மாறும் காட்சிகள் இன்னும் உணர்வு ஊட்டும்.

மலையாளத்தில் அதே போல் வரும் பாடல் ' ஆயிரம் கண்ணுமாய்' என ஆரம்பம் ஆகும். அந்த பாட்டும் கேளுங்க.

உங்களுக்கு பிடிக்குமா இந்த படம்

5
Average: 5 (2 votes)

Comments

எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிக்கும் நானும் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் எங்கு சென்றாலும் பாட்டியின் புடவை தலைப்பு பிடித்துக் கொண்டு தான் இருப்பேன் குடும்ப பிரிவால் பாட்டி எங்களிடம் பேசுவது இல்லை இருப்பினும் தொலைபேசியில் அழைத்து திட்டு வாங்குவேன் இன்று நினைத்தாலும் கண்களில் கண்ணீர்

கவலை படாதீங்க. மீண்டும் அது போல் அரவணைப்பு கிடைக்கலாம் அல்லது நாம் மற்றவருக்கு கொடுக்கலாம்.

Be simple be sample

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

- பிரேமா

பாட்டாவே படிச்சுட்டீங்களா ;)

Be simple be sample

எனக்கும் இந்த படம் பிடிக்கும் ரேவ்ஸ், நல்லா எழுதியிருக்கீங்க.
பாட்டி, பேத்திக்கான அன்பு அம்மா மகளை விட அதிகமானது எனக்கும் என் பாட்டியை ரொம்ப பிடிக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்யூ சுவா. கரெக்டா சொன்னீங்க பாட்டி பேத்தி அன்பு அம்மா மகளை விட அதிகமானதுன்னு ;)

Be simple be sample

முதல் முறை அந்தப் பாடலுக்காக, படம் பார்த்தேன். எனக்கு நதியா அணியும் ஆடைகள் - விசேடமாக தோடுகள் பிடிக்கும். :-) நதியா தோடுகள் நிறைய வைத்திருந்தேன்.
'ஆயிரம் கண்ணுமாய்' கேட்டேன். இனிமை.

‍- இமா க்றிஸ்

;) . நதியா கொண்டை,கிளிப், குதிரைவால் ஹேர்ஸ்டைல்ல்ன்னு நிறைய மாற்றம் எடுத்து வந்தாங்க. அழகான ட்ரசிங் சென்ஸ் அவர்களுக்கு.
ஆயிரம் கண்ணுமாய் லேட்டஸ்ட் வெர்ஷன் பாடலும் நல்லாருக்கும் அதுவும் கேளுங்க :)

Be simple be sample

எனக்கும் இந்த படம் பிடிக்கும்.பூவே பூச்சூடவா ஆக தமிழில் பார்த்ததை விட "நோக்கெத்தா தூரத்து கண்ணும் நட்டு" ஆக மலையாளத்தில் ரொம்ப பிடித்தது. தமிழில் எஸ்வி சேகர் நடித்ததை விட மலையாளத்தில் மோகன்லால் அருமையாக செய்திருப்பார். அந்த கூலிங் கிளாஸ் காமெடி... அதில் அசடு வழியும் மோகன்லால்... ஹா ஹா...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மலையாளம்ல பாட்டுதான் பார்த்திருக்கேன். என்ன பண்ண கவி அப்படி ஒரு மோகன்லால் அங்க. நமக்கு வாய்ச்சது எஸ்.வி தான் :(

Be simple be sample