ஈசி கோதுமை ஹல்வா

ஈசி கோதுமை ஹல்வா

தேதி: October 5, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்

மொத்த நேரம்: 35 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கோதுமை மாவு - 1/2 கப்
சீனி - 1 கப்
ஏலப்பொடி -- 1/4 ஸ்பூன்
முந்திரி - 6
குங்குமப்பூ - 1 சிட்டிகை
நெய் - 1/4 கப்


 

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அதில் சீனி சேர்த்து கரைந்ததும், ஏலப்பொடி பாதியும், குங்குமப்பூவையும் சேர்த்து வைக்கவும்.(விருப்பப்பட்டால் கலர் சேர்க்கலாம்)
சீனி பாகு
அடி கனமான வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.
நெய்யில் முந்திரி
அதே நெய்யில் கோதுமை மாவை சேர்த்து கலர் மாறும் வரை கைவிடாமல் கிளறவும்.
நெய்யில் கோதுமை
மாவு பாதி கெட்டியானதும் கொதிக்க வைத்த சர்க்கரை நீரை சேர்த்து கிளறவும்.
சர்க்கரை நீர்
நெய் பிரிந்து வரும் பொழுது வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
ஈசி கோதுமை ஹல்வா
சுவையான எளிமையாக ஹல்வா தயார்.
ஈசி கோதுமை ஹல்வா


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலா்ஃபுல் ரெசிபி சுவா.. சூப்பா்டா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குறிப்பை வெளியிட்ட பாபு அண்ணாவுக்கு நன்றி.
நீண்ட இடைவெளிக்கு பின் முகப்பில் எனது குறிப்பு பார்க்க பெருமகிழ்ச்சி..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்க்யூ ரேவ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

செம யம்மி.. அள்ளி சாப்பிடணும் போல இருக்கு. :)

Be simple be sample

ஆஹா அல்வா சூப்பருங்க...

சூப்பர் சுவர்ணா. கடைசி படம் - பார்க்கவே சாப்பிடத் தூண்டுது.

‍- இமா க்றிஸ்

தேங்க்யூ ரேவ்ஸ் ... சாப்பிடுங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேங்க்யூ செண்பகா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றிங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எளிமையான அருமையான சுவையான குறிப்பு