இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 3

Indonesia rupiah

இந்தோனேஷிய ரூப்பியா பற்றி சொல்வதாக சொல்லியிருந்தேன் இல்லையா.. அதற்கு முன்னாடி ஃபெரி டெர்மினல்லயே நிற்காமல் ஹோட்டல் சென்று ரிலாக்ஸ் பண்ணிகிட்டே பேசலாமே..

பத்தாமில் பொது போக்குவரத்து வசதிகள் குறைவு. ஆனால் டேக்சி சர்வீஸ்கள் நிறைய இருக்கின்றன. போர்ட் டாக்சிகள் பாதுகாப்பானவை. அல்லது நாம் தங்கப்போகும் ஹோட்டல் டேக்சிகளை பயன் படுத்திக் கொள்ளலாம். ஃபெரி டெர்மினல்களிலேயெ ப்ரீ புக்கிங் டேக்சிகள் கிடைக்கும். மொழிப் பிரச்சினை கண்டிப்பாக இருக்கும், இந்தோனேஷிய மக்களுக்கு பொதுவாக ஆங்கிலம் தெரியாது. ஓரிரு ஆங்கில வார்த்தைகளை புரிந்து கொள்வார்கள். இனிமையான மக்கள். இருந்தாலும் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. 
 
ஹோட்டலுக்கு போயாச்சா. இப்போ இந்தோனேஷிய கரன்சி பற்றி பார்ப்போம். இந்தோனேஷியாவின் பொருளாதாரம் சற்று நலிவடைந்தது. பணவீக்கம் அதிகம். 1 சிங்கப்பூர் டாலருக்கு தோராயமாக 10000 ரூப்பியாக்கள் கிடைக்கும். நாங்கள் கேலியாக சொல்லிக் கொள்வது உண்டு, நாங்கள் எல்லோரும் மல்ட்டி மில்லியனர்கள் என்று. ஆம் 200 சிங்கப்பூர் டாலர்கள் நம் கையில் இருந்தாலே நாம் மில்லியனர்தான். ஒரு சிறிய சாக்கலேட் வாங்க வேண்டும் என்றாலே 1000 ரூப்பியா கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் பொருட்கள் சிங்கப்பூரை விட இங்கே மலிவாக கிடைக்கும். உடைகள் மற்றும் கைப்பைகள் பத்தாமில் மலிவாக கிடைக்கும். எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளூர்வாசிகள் இல்லாமல் வாங்க வேண்டாம்.

நான் பத்தாம் சென்ற புதிதில் சிரமப்பட்ட இரண்டு விஷயங்கள் மொழி மற்றும் இந்த பணத்தைக் கையாள்வது. மளிகை சாமான்கள் வாங்கி பில் போட்டு விட்டு வரும் தொகையை பார்த்தால்  நமக்கு தலை சுற்றும். இலட்சங்களிலும் கோடியிலும் பில் வந்தால் மயங்கி விழாமல் இருப்பதே சந்தோஷம். இலட்சம் கோடி என எண்களை பழகி விட்டு நூறாயிரம், மில்லியன் என்று கணக்கு பார்ப்பது வேறு கடினம். அதுவுமில்லாம புள்ளி வைக்க வேண்டிய இடத்துல கமா போட்டு, கமா போட வேண்டிய இடத்துல புள்ளி வச்சிருப்பாங்க. தலை சுத்துமா இல்லையா..?!! 

Rp 1.113.500,00 இப்படி பில் வந்தால் எப்படி வாசிப்பீங்க? 1 மில்லியன் நூற்று பதின்மூன்றாயிரத்து ஐநூறு ரூப்பியா தான் அந்த பில். உங்களுக்கும் தலை சுத்துதா? அப்படியே சுவரோரமா சாய்ந்து உட்கார்ந்துக்கோங்க. இன்னும் சொல்றேன். இதை அப்படியே சிங்கப்பூர் டாலருக்கு கணக்கு போட்டு அதை இந்தியா ரூபாய்க்கு மாற்றி ஐயோ இவ்ளோ விலையான்னு மனசுக்குள்ள பொருமிகிட்டு இப்போ நோட்டுகளை எண்ணி கொடுக்கணும். நூறயிரம் ரூப்பையா அதான் 1 லட்சம் ரூப்பியா நோட்டு 11 எண்ணி எடுத்துக்கணும் அப்புறம் ஒரு 10000 ரூப்பியா நோட்டு 2000 நோட்டு 1, 1000 நோட்டு 1, 500 காயின் 1 இப்படி கொடுக்கணும். இப்படி சில்லறை எடுக்க சிரமப் பட்டுக்கிட்டு 100000 நோட்டு 12 எண்ணி கொடுத்தால் மீதி சில்லறைகளில் சில பல 500 ரூப்பியா காயினும் சில பல 1000 ரூப்பியா நோட்டுகளையும் மீதி தருவாங்க. இந்த சில்லறை காசுகள் வீட்டில் மூடை மூடையா சேர்ந்திடும். அதனால் இப்படி உஷாரா இருந்துக்கணும். புதிதாக வருபவர்கள் கையில் கால்குலேட்டர் வைத்துக் கொள்வது நல்லது.

இந்த கால்குலேட்டர்கள் பேரம் பேசவும் உதவும். மால்களில் ஷாப்பிங் செய்யும் போது அங்குள்ள சிறிய கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அவர்கள் சொல்லும் விலையை அவங்க கால்குலேட்டரில் நமக்கு காமிப்பாங்க. நாம் கேட்கும் விலையை நம்ம கால்குலேட்டரில் அடித்து காண்பிக்கலாம். மொழி தெரியாவிட்டாலும் சிரித்த முகத்துடன் நம்மோடு வியாபாரம் செய்வார்கள். என்னுடைய நாத்தனார் கணவர் சிங்கையில் இருந்து வரும் போது யாருடைய துணையும் இல்லாமல் மொழியும் தெரியாமல் இந்த கால்குலேட்டர் வைத்தே பேரம் பேசி பொருட்கள் வாங்கி டேக்சி காரர்களிடமும் பேரம் பேசி வீட்டுக்கு திரும்பி வந்திடுவார்.

இந்த பிரச்சினையே வேண்டாம் கார்ட் தேய்ச்சுக்கறேன்னு மட்டும் இருந்துடாதீங்க. சர்விஸ் சார்ஜ் மற்றும் எக்ஸ்சேஞ் ரேட் காரணமாக நமக்கு நஷ்டம். நாங்க முடிந்தவரை அங்கே கார்ட் உபயோகிப்பதில்லை.  என்னடா பாகம் 3ம் முடிஞ்சிடுச்சு இன்னும் சுற்றிப் பார்க்க கூட்டிட்டு போக மாட்டேங்கறாங்களேன்னு நினைக்காதீங்க. இந்தோனேஷிய மொழியைப் பற்றி அடுத்த பகுதியில் பார்த்துட்டு டூர் கிளம்பிடுவோம். அப்படியே எங்கள் அனுபவங்களையும் பார்ப்போம்.
 

- கவிசிவா

இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 2
இந்தோனேஷிய அனுபவங்கள் - பகுதி 1

Comments

கட்டாயம் ஒரு விசிட் அடிக்க வேண்டியது தான். கிளம்ப முன்னாடி ஒரு தடவை இங்க வந்து ரிவைஸ் பண்ணிட்டுப் போகலாம். :-)

இந்தத் தொடர் முடிஞ்ச பின்னால அந்த ருப்பியா நோட்டுகள் ஒவ்வொன்றையும் பற்றி தனியாக போஸ்ட் போட முடியுமா கவீஸ், ப்ளீஸ்!

‍- இமா க்றிஸ்

ருப்பியா படிச்சதும் இனிமே அங்க இருப்பியா ந்னு தோணுது. மில்லினியர் கவி கேட்கும்போதே சூப்பரா இருக்கே :). கணக்கு ரொம்ப கண்ணை கட்டுதே. அப்படியே நான் சுவத்துல முட்டு கொடுத்துகறேன். கணக்கு முடிச்சுட்டு வாங்க.

Be simple be sample

அனுபவம் அருமை கவி... ருப்பியாக்கு விளக்கம் கேப்பியா கேப்பியா ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தாமதமான பதிலுக்கு முதலில் மன்னிச்சூ...
கண்டிப்பா இமாம்மா நீங்க இந்தோனேஷியா கிளம்ப முன்னால் சொல்லுங்க. முடிந்தால் நீங்கள் வரும் நேரம் நானும் வந்து விடுகிறேன் :)
இந்தோனேஷிய நோட்டுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நான் தனியே ஆராய்ந்தது இல்லை. னிமேல் தேடிப் படிக்கிறேன். முடிந்தால் கடுரையிலும் சேர்க்கிறேன் இமாம்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹா ஹா ரேவ்ஸ் அப்படியே உங்களை வடிவேலு போஸ்ல திங்க் பண்ணிட்டேன் :)
கணக்கெல்லாம் முடிச்சாச்சு வாங்க அங்கேயே முட்டு கொடுத்துட்டு இருந்தீங்கன்னா சாப்பாடு கிடைக்காது சொல்லிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அதானே இனிமே கேப்பியா ருப்பியா கேப்பியா... நாங்க யார் கேட்டாலும் லட்சம் ருப்பியா கொடுப்போம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!