முருங்கைக்காய் சாம்பார்

முருங்கைக்காய் சாம்பார்

தேதி: October 8, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 15 நிமிடங்கள்

மொத்த நேரம்: 25 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம் பருப்பு - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி
முருங்கைக்காய் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 10
கத்தரிக்காய் - ஒன்று
கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
கல் உப்பு - அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
முருங்கைக்காய்
குக்கரில் பருப்பு, சீரகம், மஞ்சள் தூள், நெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வெயிட் போட்டு 3 விசில் வரும் வரை வேக விடவும், பின்னர் 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
குக்கரில் வேக வைத்தல்
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கிய முருங்கைக்காயை போட்டு வேக வைக்கவும். விரும்பினால் கூடுதலாக மாங்காய், பரங்கிக்காய் போன்ற காய்களையும் நறுக்கி சேர்த்து வேக வைக்கலாம்.
காய்கள் வேக வைத்தல்
முருங்கைக்காய் வெந்ததும் ஊற வைத்த புளியை ஊற்றி, கலந்த மிளகாய் தூள், கல் உப்பு, கத்தரிக்காய், மாங்காய் சேர்த்து கிளறி விட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.
புளிக்கரைசல்
சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
தாளித்தல்
சாம்பார் கொதித்ததும் வதக்கியவற்றை சேர்க்கவும்.
சாம்பார்
வேக வைத்த பருப்பும் சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். சுவையான சாம்பார் தயார்.
முருங்கைக்காய் சாம்பார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆசையா இருக்கு பார்க்க. இப்படி சாம்பாராகச் சாப்பிட்டதில்லை. கிடைக்க மாட்டேன் என்கிறதே காய். ;(

‍- இமா க்றிஸ்

தக்காளி போடலயே .. நீங்க போடமாட்டீங்களா :)

Be simple be sample

ஆமாம் ரேவதி தக்காளி சேர்க்க மாட்டோம்.. புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்போம்.

அம்மா நீங்க நாகை வந்தபோது நான் இந்த சாம்பார் செய்து கொடுத்ததில்லையா. இந்த சாம்பார் உங்களுக்கு செய்து கொடுத்தது போல நினைவு...

மாங்காய் முருங்கை சாம்பார் நினைக்கவே சாப்பிட தோனுது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தாங்க்யூ..சுவர்ணா..

நீங்க தான் வரைட்டி வரைட்டியா கொடுத்து உபசரிச்சீங்களே! நிறைய சுவை பார்த்ததில் மூளை ஓவர்லோடட். :-) இப்போ நினைவு வருது. இது தனியா உங்களோட சாப்பிட்ட அன்று நீங்க சமைத்தது. வடைகறியும் வைச்சுக் கொடுத்தீங்க. நினைவு இருக்கு. நீங்க சமைச்ச எல்லாமே சுவையா இருந்துது.

‍- இமா க்றிஸ்

டபுள் என்ட்ரி ஆகிட்டு. சாரி. ;(

‍- இமா க்றிஸ்