நவராத்திரி ஒன்பது நாட்களுக்குமான நைவேத்தியங்களாக என்ன செய்யலாம்?
பொதுவாய் நைவேத்தியத்திற்கு செய்யக்கூடிய பலகாரங்கள் இவை.
சுண்டல்
வறுவல்
துவையல்
பொரியல்
அப்பளம்
வடகம்
சூரணம்
முறுக்கு
திரட்டுப்பால்
வெண்பொங்கல்
புளியோதரை
சர்க்கரைப் பொங்கல்
கதம்ப சாதம்(காய்கறி கலந்த சாதம்)
தயிர் சாதம்
தேங்காய் சாதம்
எலுமிச்சம்பழ சாதம்
பாயசம்
அக்கார அடிசல்
கடைசி நாளன்று மகா நைவேத்தியம் என்று சொல்லப்படும் வெள்ளை சாதம் படைக்க வேண்டும்.(இவற்றை வடிக்கக்கூடாது. குக்கரில் பொங்கி இறக்கலாம்.) அல்லது சுத்தான்னம் (வெள்ளை சாதம்), இலை வடகம், வெண்ணெய், சுக்கு வென்னீர் இவற்றை நைவேத்தியம் செய்யலாம்.
மேலே சொன்னவற்றில் எதெல்லாம் முடிகிறதோ, எப்படி எல்லாம் செய்ய முடிகிறதோ, அது போல செய்து கொள்ளலாம்.
நைவேத்தியத்துக்கான யோசனைகள்:
ஞாயிறு: கோதுமையில் செய்த அப்பம் அல்லது கடலைப் பருப்பு சுண்டல்
திங்கள்: வெல்லப் பாயசம் அல்லது வெண் பொங்கல் அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலை சுண்டல்
செவ்வாய்: சிவப்பு கொண்டைக் கடலை சுண்டல் அல்லது சோயா பீன்ஸ் சுண்டல்
புதன்: பாசிப்பயறு சுண்டல் அல்லது பச்சைப் பட்டாணி சுண்டல்
வியாழன்: கடலைப்பருப்பு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்
வெள்ளி: வெண் பொங்கல் அல்லது கல்கண்டு சாதம் அல்லது மொச்சை சுண்டல்
சனி: காராமணி சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல்
நவராத்திரியின் ஒன்பது தினங்களுக்கும் தினசரி அணியும் உடைகளுக்கான யோசனைகள்:
ஞாயிறு: சிவப்பு அல்லது ஆரஞ்சு
திங்கள்: லேசான ஹாஃப் ஒயிட் நிறம்
செவ்வாய்: சிவப்பு அல்லது ஆரஞ்சு
புதன்: பச்சை
வியாழன்: மஞ்சள், பொன் நிறம்
வெள்ளி: வெள்ளி நிற ஜரிகை கலந்த உடைகள்
சனி: நீல நிறம்
விஜய தசமியன்று புதிய கலைகளைக் கற்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு புதிய பாடங்கள் ஆரம்பிக்கலாம்.அன்று இரவு, மரப்பாச்சி பொம்மைகள் அல்லது முதலில் வைத்த ஒன்றிரண்டு பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும். மறு நாளிலிருந்து எல்லா பொம்மைகளையும் எடுத்து வைத்து விடலாம்.
நவராத்திரியின் போது, முடிந்த அன்று கோவில்களில் வைத்திருக்கும் கொலுவைப் போய் பார்க்கலாம்.
சாதாரணமாக எட்டாம் நாளன்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் இருக்கும். இந்த அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தால், கட்டாயம் மறு நாள் அதே கோவிலுக்குச் சென்று, அம்மனின் சரஸ்வதி அலங்காரத்தையும் பார்த்து வர வேண்டும்.
சரஸ்வதி பூஜையன்று கோவிலுக்குப் போகும்போது, பென்சில்கள், பேனாக்கள் போன்ற பொருட்களை பூஜையில் வைத்து, அங்கு வரும் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழலாம்.
எல்லோரும் இனிதாய் நவராத்திரியைக் கொண்டாடுவோம்..
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன செய்யலாம்?
நவராத்திரி - கொலு வைக்கும் முறை
Comments
நவராத்திரி
மிக்க நன்றி. நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீங்க சீதா. தெரிந்துகொள்ளச் சுவாரசியமாக இருக்கிறது.
அங்கங்கே சுட்டிகள் கொடுப்பது குறிப்புத் தேடும் சகோதரிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அட்மினுக்கு நன்றி.
- இமா க்றிஸ்