செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி

செட்டிநாடு மஷ்ரும் கிரேவி

தேதி: October 12, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்

மொத்த நேரம்: 30 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மஷ்ரும் 200 கிராம்
வெங்காயம் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
எண்ணெய் 50 மில்லி

வறுத்து அரைக்க
தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் 10 அல்லது 15
தனியா 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
ஏலக்காய் 2
அன்னாசிப்பூ 2
பட்டை 2
கிராம்பு 2

வதக்கி அரைக்க

சின்னவெங்காயம் 1 கப்
தக்காளி 3
இஞ்சி 1 துண்டு
பூண்டு 1


 

முதலில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்.
வறுத்தல்
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
அரைத்தல்
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தாளித்து வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்..
வெங்காயம் வதக்கவும்
அரைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
அரைத்த மசாலா
நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
நறுக்கிய காளான்
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி
செட்டிநாடு மஷ்ரும் கிரேவி தயார்.
செட்டிநாடு மஷ்ரும் கிரேவி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெகு அருமையாக இருக்கிறது. பார்க்கவே சாப்பிடத் தோணுது.

‍- இமா க்றிஸ்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample

செய்து சாப்பிட்டு பாருங்க. வெஜ்தானே.. நன்றி

Be simple be sample

காளான் கிரேவி பார்க்கவே சாப்பிட தூண்டுது செம்ம .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்யூ சுவா. சிக்கன் கிரேவி போலவே டேஸ்ட் செம :) செய்து பாருங்க.

Be simple be sample