
தேதி: October 12, 2018
பரிமாறும் அளவு: 5 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
பால் - ஒரு லிட்டர்
எலுமிச்சை - பாதி
ஒரு லிட்டர் பாலை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து அரை லிட்டர் வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.

பின்னர் சிம்மில் வைத்து, பாலில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கிளறவும். சிறிது நேரத்தில் பால் திரிந்து, திரி திரியாக வரும்.

திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

துணியைச் சுற்றி இறுகக் கட்டவும். நீர் அடி வழியே வெளியேறும் விதமாக ஓட்டைகள் உள்ள ஒரு பாத்திரத்தின் மேல் அதனை வைக்கவும்.

அதன் மேலே வெயிட் வைக்கவும். ஒரு தண்ணீர் பாத்திரத்தைக்கூட வைக்கலாம்.

எட்டில் இருந்து பத்து மணி நேரம் அப்படியே வைத்து இருக்கவும். ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியிலே வைக்கவும். நீர் எல்லாம் வடிந்து கெட்டியான பனீராக அது மாறிவிடும்.

அதனை விரும்பிய வடிவில் துண்டங்கள் போட்டுக் கொள்ளலாம். வீட்டிலேயே தயாரிக்கும் கலப்படம் இல்லா பனீர் ரெடி.

பனீர் வடிகட்டிய நீரை பிரியாணி செய்வதற்கு பயன்படுத்தலாம். பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும்.
Comments
பனீர்
சூப்பர் செண்பகா. படங்கள் எல்லாம் அழகா இருக்கு. இனி கடையில் வாங்காமல் செய்துதான் சாப்பிடப் போகிறேன்.
- இமா க்றிஸ்
ஈசியான பனீர்
இத்தன ஈசியா வீட்டிலயே பனீர் செய்யலாமா!!! இது தெரியாம கடைகள்ல வாங்கிட்டு இருந்தேனே!!! இனி வீட்லயே செஞ்சுட வேண்டியதுதான். தேங்க்ஸ்
"ஒரு மணி நேர பேச்சைவிட ஒரு நிமிட சிந்தனை மேலானது"
- மஹா
நன்றி
இமாம்மா செய்து பாருங்க ரொம்ப ஈசி ஆனா டைம் எடுக்கும்.
மஹாகணேஷ்
ரொம்ப நன்றி செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
செண்பகா
இவ்வளவு ஈஸியான செயல்முறையா? கண்டிப்பாக முயற்சி செய்து பார்த்துட்டு சொல்றேன். மிக்க நன்றி
- பிரேமா
செண்பகா
அழகா இருக்கு பார்க்கவே எளிமையான செய்முறை.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Paneer preparation
Simple and super. Photos are good.
பிரேமா
ரொம்ப நன்றி
மலர்
தேங்க்யூ
பன்னீர்
தானாக திரிந்த பாலில் பன்னீர் செய்யலாமா செண்பகா?
அன்புடன்
ரீஹா :-)
ரீஹா
திரிந்த பால் என்றால் கெட்டுப்போன பாலா? அதில் செய்தால் நன்றாக இருக்காது.
இல்லை. பசும்பால் வாங்கி
இல்லை. பசும்பால் வாங்கி fridge ல் வைக்க மறந்து விட்டேன். கொஞ்ச நேரம் கழித்து காய்ச்சினேன். திரிந்து விட்டது செண்பகா அதில் கெட்டு போன வாடை வர வில்லை. அதா கேட்ட.
அன்புடன்
ரீஹா :-)
ரீஹா
தானாகத் திரிந்தது அதில் பிழை இருந்த காரணத்தால் தானே! வாடை வராவிட்டாலும், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
- இமா க்றிஸ்
பன்னீர்
நன்றி இமா.
அன்புடன்
ரீஹா :-)