அடுக்கு சோமாசி

தேதி: March 6, 2007

பரிமாறும் அளவு: 25 - 30 சோமாசிகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1/2 கிலோ,
சர்க்கரை - 2 டம்ளர்,
பால் கோவா - 200 கிராம்,
ஏலக்காய் - 5,
முந்திரி - 50கிராம்,
பாதாம் - 50 கிராம்,
பிஸ்தா - 50 கிராம்,
உலர் திராட்சை - 25 கிராம்,
குல்கந்து - 2 கப்,
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்,
டால்டா - 25 கிராம்,
எண்ணெய் - பொரிக்க,
உப்பு - 1 சிட்டிகை.


 

மைதா, உப்பு, சோடா, டால்டா சேர்த்து கலக்கி தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 1/2 மணி ஊற விடவும்.
பால் கோவாவை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தாவை 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.
சர்க்கரையை 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கம்பி பாகு காய்ச்சவும்.
ஏலக்காயை பொடித்து அதில் சேர்க்கவும்.
பிசைந்த மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.(உள்ளங்கை அகலம் இருந்தால் போதும்).
சப்பாத்திகள் தேய்த்த பின், ஒரு சப்பாத்தி மேல் பால் கோவாவை சிறிது எடுத்து பரப்பவும்.
அதன்மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து, மேலே பொடித்த முந்திரி கலவையை பரப்பவும்.
கலவை மேல் தேய்த்த சப்பாத்தியை வைத்து, அதன்மேல் குல்கந்தை பரப்பி வைக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து சோமாசி போல் மடித்து, ஓரத்தை சோமாசி கரண்டியால் வெட்டவும்.
தயார் செய்த சோமாசிகளை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து, சர்க்கரை பாகில் முக்கி எடுத்து வைக்கவும்.


4, 5 சோமாசிகள் செய்தவுடன் பொரித்து விடவேண்டும். உலர்ந்தால், வெடித்து உள்ளிருக்கும் பொருள் வெளியே வந்துவிடும். தேவையானால் சர்க்கரைப் பாகில் வண்ணம் (colour) சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்