பட்டி - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ?"

அன்புச் சகோதரிகளே , அருமை சொந்தங்களே , என்ன அனைவரும் நலமா இருக்கீங்களா ?

என்னடா தளம் முழுக்க புதியதாக மாறிடுச்சே ! பட்டி இன்னும் ஆரம்பிக்களையே ! என்று உங்களின் மனதின் குரல் எனக்கு நல்லாவே கேட்டுடுச்சுங்க . அதான் நம்ம பாப்பையா ஸ்டைல்ல அனைவரையும் கோப்பிட்டேன் .
சீக்கிரம் ஓடியாங்க . இந்த பட்டில பல புதுமைகள் இருக்கு . முதல்ல வந்து பதிவு பண்ணிடுங்க . தலைப்பை படித்து தங்களின் அணியை தேர்வு செய்து கொண்டு கருத்துகளை பதிவிடுங்க . தயவுசெய்து இந்த மைண்டு வாய்ஸ்ல பேசிட்டு ஓடிப்போற வேலைமட்டும் ஆகாதாக்கும் .

இன்றைக்குன்னு இல்லைங்க எப்பவுமே பெண் என்பவள் யாருக்காக ஒவ்வொரு வேலையும் , கடமையும் பார்த்து பார்த்து செய்கிறாள் என்பதை மனதுள் பலமுறை பட்டி வச்சு நடத்திருப்போம் நாம் ஒவ்வொருவரும் . இப்போ இது உங்களுக்கான மேடை . பெண்கள் தங்களின் நேரங்களை யாருக்காக செலவிடுகிறார்கள். தங்களின் மனதிற்கு பிடித்ததை செய்யவா ? அல்லது தன்னை சுற்றி இருப்பவர்களின் வேலைகளுக்காக தன் நேரங்களை செலவழிக்கிறாளா ? இது தாங்க இந்த பட்டி தலைப்பின் விவரம்.

(சரி சரி விபரம் சொன்னதெல்லாம் போதும் வழிவிடுங்க நாங்க பேசனும்னு சொல்ற உங்க வாய்ஸ் கேக்குதுங்க ) .

பட்டிக்கு வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறேன். வாருங்கள் தங்களின் கருத்துகளைத் தாருங்கள்....பட்டியில் பல பல பட்டங்கள் வழங்கப்படவுள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் .

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும் அவ்வளவேதான்.

கவி, ரேவ்ஸ், ரேவா , இமா , சீதாம்மா, ரஜினி, ரேணு, அபி, ஸ்வர்ணா, செண்பகா அண்ணி, பாபு அண்ணா,யாஸினா , ஹமீரா,சத்தியா கார்த்தி, இன்னும் பல பழைய மற்றும் புதிய நட்புகள் அனைவராஇயும் பட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் . பெயர் சொல்லி கூப்பிடுலைன்னு யாரும் கோச்சுக்க கூடாதாக்கும். இது நம்ம தளம், "நம் தளம், நம் உரிமை". ஓடியாங்க அட்டெனென்ஸ் எடுக்கப்போறேன்.

முதலில் வருபவருக்கு எதும் சிறப்பு பரிசுகள் தருவிங்களா? .
நான் தான் முதலில் வந்தேன்.இதற்கு முன் இது போன்ற இழைகளில் நான் பங்கு பெற்றது இல்லை ஆனால் படித்துள்ளேன் சுவாரசியமாக இருக்கும் :-)

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

துண்டு போட்டு இடம் பிடிச்சுடறேன். அடுத்தவங்களுக்காகதான் அப்படீங்கற அணிக்குதான் என் ஓட்டு.
வெளியூர் பயணம். நாளை ஊர் திரும்பிய பின் அடுத்தவங்களுக்கு எல்லாம் நேரம் ஒதுக்கிய பின் எனக்குன்னு நேரம் கிடைக்ஙும் போது பதிவோட வரேன்.

நடுவர் மன்னிச்சூ... பிற பதிவுகளுக்கான பின்னூட்டங்களும் ஊர் திரும்பிய பின் என சொல்லிக் கொண்டு அடுத்தவர்களுக்கான கடமை என்னை அழைப்பதால் வடை சாரி விடை பெற்றுக் கொள்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாருங்கள் சத்யா,///முதலில் வருபவருக்கு எதும் சிறப்பு பரிசுகள் தருவிங்களா? ./// கண்டிப்பாக ,வழக்கமா இரு அணியிலும் முதலில் வரும் நபர்களுக்கு பழரசம் கொடுத்து வரவேற்போம். இன்று அது உங்களுக்கு . இந்தாங்க வெயிலுக்கு குளிர்ச்சியா அவகேடோ ஜீஸ் குடிங்க . அப்படியே எந்த அணிப்பக்கம் பேசப்போறீங்கன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும் . சுவாரஸ்யம் மட்டும் இல்லை பல பயனுள்ளதாவும் நம்மை சிந்திக்க வைப்பதாகவும் இருக்கும் . பட்டமளிப்பு விழா பட்டி முடிவில் அறிவிக்கப்படும் . சிறப்பான கருத்துகளை உங்களின் அணிக்காக எடுத்து பதிவிடுங்கள் . வாழ்த்துக்கள் :-)

பழரசம் தந்தமைக்கு நன்றி அக்கா ஆனால் இங்கு மழை. அதிகம் குடித்தால் சளி பிடிக்கும் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன்.
நான் இது போன்ற உரையாடல்களில் புதிது என்பதால் சகோதரி கவிசிவா அவர்களை பின்தொடர்கிறேன். எனக்கு என்னவோ அந்த அணிதான் சரின்னு படுது:-D

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

நீங்களும் பழரசம் அருந்துங்கள் .
முதல் ஆளாக வந்து பெண்களின் நேரம் அடுத்தவர்களுக்காகவே செலவிடப்படுகிறது என்ற அணிக்கு வலுசேர்த்துள்ளீர்கள் . தங்களின் கருத்துப்பதிவுகளுக்காக பட்டியும், மக்களும் ஏன் நடுவரும் காத்துக்கொண்டு இருப்போம் . விரைந்து வாருங்கள் .

//பழரசம் தந்தமைக்கு நன்றி அக்கா ஆனால் இங்கு மழை. //இங்கே படு வெயில் சத்யா . அது கிடக்கட்டுப்பா... நீங்களும் அடுத்தவர்களுக்காக அணியா ? நல்லது . உங்கள் தரப்பு வாதங்களைக் காண காத்துக்கிடக்கிறேன் .

நானும் பெண்கள் மற்றவர்களுக்காக தான் நேரம் செலவழிக்கிறார்கள் என்றே பேச போகிறேன். சீட் போட்டாச்சு பாயின்ட் டோட வரேன் பையன் அழறான்

பட்டிக்கு வருகை தந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் . இந்தாங்க நீங்களும் ஒரு டம்ளர் ஜூஸ் குடிங்க . நம்மூர் பக்கம் மழையா கொட்டுது சளிப்பிடிக்கும்னு சொல்லி நீங்களும் ஓடிறாதீங்க . சரிங்களா ? கண்ணுங்களா அணிய சொல்லிப்போட்டிங்க இதேபோல டக்கு டக்குன்னு உங்கள் அணிக்கான வாதங்களையும் முன்வைங்க .

அட எம்புட்டு நேரமா நடுவர் கூவி அழைக்குறேன் . ஏனுங்க மக்களே , அடுத்தவங்கன்னு பேசற அணிக்கு பலம் சேர்த்துட்டே இருக்குதுங்க . அவங்களுக்கேன்னு பேச யாரும் முன் வரலையே!!( ஓடியாங்க சீக்கிரம் , )
கல்ப்ஸ், சுமி , அமீனா, தளிகா, இன்னும் பல முகங்கள் காணோமே! வாங்க வாங்க எல்லாரும்.

மேலும் சில பதிவுகள்