பனிக்குடம் பற்றிய சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே

வணக்கம் தோழிகளே

எனக்கு இன்னும் 10 நாட்களில் குழந்தை பிறக்க இருக்கிறது, இன்று மருத்துவரிடம் checkupக்கு சென்றேன். குழந்தை நன்றாக இருக்கிறது என்றும் தண்ணீர் அதிகமாக இருக்கிறது என்றும் சொன்னார்கள், பனிக்குடம் தண்ணீர் அதிகமாக இருப்பதால் ஏதும் சிக்கல் வருமா? மற்றும் நான் கருத்தரித்த நாளில் இருந்து மாத்திரைகள் எதையும் சாப்பிடவில்லை. அதனால் ஏதும் விளைவுகள் இருக்குமா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

Bayapadathinga. doc panikuda neer adhigama irukunnu solirukanga; but adhanala problemnu solalaye.. thanni ilama ethana mothers cesserian aayiruku theriyuma? adhanala confuse panikadhinga. ur baby is safe. doctor edhum soladha varaikum edhayum ninachu confuse panikadhinga. May god bless you

- பிரேமா

பயப்பட வேண்டாம். எல்லாம் சரியாக இருக்கும்.

மத்திரைகள் சாப்பிட்டேதான் ஆக வேண்டும் என்பது இல்லை. ஆனால் மருத்துவர் பரிந்துரைப்பதைச் சாப்பிடாமல் விட்டுவிட்டு பிறகு யோசிப்பது பிழை. அடுத்த கர்ப்பத்தின் போது கவனமாக இருங்கள். இம்முறை யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

கவலை பட தேவை இல்லை

குழந்தை பிறக்க சில நாட்களே இருக்கும் நேரத்தில் மனகுழப்பம் வேண்டாமே

மருத்துவரின் அறிவுரைப்படியே நடந்து கொள்ளுங்கள்

சந்தோசமான மனநிலமையே இப்போது தேவை

ML

மேலும் சில பதிவுகள்