" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா ? " பகுதி - 4

ஒருவழியா காலை வேலைகளை முடித்து ரெடியாகி வண்டி எடுத்தாச்சுங்க.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் ஊட்டி வந்திருவோம்னு செய்தி அனுப்பியாச்சு.

ஊட்டில எங்க போகனும்? அவங்க எங்க இருக்காங்க?( என்னவர்)

நாம கார்டன் போயிடலாம் , அவங்க அங்க வந்து அரைமணி ஆகிடுச்சாம்.

ஓ அப்போ சரி , அங்கே விவேக்ஸ்ல பார்க் பண்ணிட்டு நடந்து போயிடலாமா?( என்னவர்)

எப்படி பண்ணினாலும் சரிங்க. (சீக்கிரம் கார்டன் போனா சரி.. தோழீஸ் மூன்று நாட்கள் காத்திருந்தது கூட பெரிய விஷயம் இல்லை என்பதுபோல, இந்த அரைமணி கடத்துவது மிக கடினமானதாக இருந்தது) .

அம்மா யாரை பார்க்கப்போகிறோம் ?எவ்ளோ நேரம் இருப்போம் ? அந்த ஆண்டியோட குட்டீஸ் எங்களோட விளையாடுவாங்களா ? (அவங்களுக்கு ஒரு டென்ஷன்..ம்ம்ம்ம்... )
நான் பந்து எடுத்துட்டு வந்திருக்கேன் . நான் ராகுல்கிட்ட இந்த டிக்டாக் சாப்பிடக்குடுப்பேன் . அம்மா அவனுக்கு இது பிடிக்கும்ல ? (ஹரிஷ் கேக்குறான்பா..)

அவங்களோட நல்லா பேசனும் , விளையாடனும் , ஓகேவா ? அவங்களுக்கு இது புது ஊர் , சோ உங்களுக்கு தெரிஞ்சத சொல்லிக்கொடுங்க .

சரிங்கப்பா . (கோரஸ்)

பேசிட்டே பார்க்கிங் வந்தாச்சுங்க . ( பார்க் பண்ணிட்டு நடக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது) .

அம்மாடி, எவ்வளவு கூட்டம் ? (டிக்கெட் வாங்கதான்..!)

சரி நான் கார்டு காட்டி என்ட்ரி போட்டுட்டு வரேன்னு இவர் போய்விட . நானும் பிள்ளைங்களும் பபுல்ஸ் வாங்கினோம் . (வாங்கி சும்மா வச்சிருக்க முடியுமா ? ஆளுக்கு ஒருபக்கம் ஊதினோம்...:-)

அம்மா ஃபோன் அடிக்குது . நான் பார்க்கிறேன் . ஹலோ ஆண்ட்டி நாங்க வந்திட்டோம் .
கார்டன் எண்ட்ரன்ஸ்ல இருக்கோம் . ஆமா , உள்ள வந்திட்டு பேசசொல்றேன் . ஓகே .

அம்மா பபுல்ஸ் விட்டது போதும் , ஆண்ட்டி கால் பண்ணியிருந்தாங்க , அவங்க உள்ள கண்ணாடி மாளிகைல இருக்காங்கலாம் . உள்ள வந்ததும் ஃபோன் பண்ண சொன்னாங்க.

என்னவர் வந்துவிட அனைவரும் உள்ளே சென்றோம் . பந்து எங்கடா ? செக்கிங்ல ஒன்னும் கேக்கலைன்னு கேட்டேன் . பசங்க சொன்னாங்க உங்க ஹேண்பேக்குல போட்டுட்டோம்னு...(!!!)

எந்த இடத்துல அவங்க பார்த்துட்டு இருக்காங்க ? நாம நேரா அங்க போலாமா ? இல்ல சுத்தி பார்த்துட்டு போகலாமா ?( என்னவர் )

இல்லைங்க அவங்க கண்ணாடி மாளிகைல இருக்காங்க . நாம அங்கயே போகலாம் .

கீழையா? மேலயா?

எங்கன்னு தெரில. முதல்ல கீழயே பார்க்கலாம்.

"பார்க்கும் முகங்கள் அனைத்திலும்
ரேணுவைத்தேடுகிறேன் நான்...
ரேணுவும் இப்படித்தானோ ,
என்ற எண்ணத்தில்...!!!
ஃபோட்டோ எடுக்கும் அந்த பையன்
கோகுல் போலவே இருக்கானே !!!
வாங்க அவங்களை பார்க்கலாம்...

கீழே சுற்றிபார்த்துவிட்டு மேலே செல்கிறோம் , ஃபோன் அடிக்குது . ரேணு சொல்லுங்க , நாங்க மேலதான் வந்திட்டு இருக்கோம் .

சரிப்பா நானும் ஆவலுடன் உங்களை பார்க்கத்தான் காத்திருக்கோம் .

ரேணு நீங்க ஃபோன் கட் பண்ண வேண்டாம் , நான் உங்களை எப்படி கண்டுபிடிப்பது ?
அப்படியா !? சரி வாங்க...:-) ( நான் திரும்பி இருந்தா எப்படி கண்டு பிடிப்பீங்க ? ரேணுவின் மைண்டு வாய்ஸ்ப்பா ).

மேலே ,
"யானையைச் சுற்றிலும்
வண்ணப்பூக்கள் அலங்கரிக்க...
சற்று தள்ளி ஒரு பெண்
குடத்திலுள்ள நீரை
குளத்தில் கொட்டிக்கொண்டிருக்க...
பூக்களால் வேயப்பட்ட குடிலில் அமர்ந்து
ஃபோட்டோ எடுக்கணும்னு குட்டீஸ் அடம்பிடிக்க...
அவர்களை கண்டபின்னே அனைத்துமென நான் உறைக்க...
ஒரு ஃபோட்டோதானே எடுத்துட்டு வரட்டுமென என்னவர் சொல்ல...
அங்கங்கே ஐந்தாறு ஃபோட்டோக்கள் எடுத்து குட்டீஸ் திருப்தியடைய...
திரும்ப மலையேறினோம் ரேணு குடுப்பங்கள் சந்திக்க..."

நாங்க மேல வந்திட்டோம் ரேணு நீங்க எங்க இருக்கீங்க?

நாங்க இங்கதான் இருக்கோம்ப்பா , நீங்க எங்க காணோமே !!!

சுற்றி சுற்றி ஃபோனில் பேசியபடியே அலைந்தோம் இருவரும் சில நிமிடங்கள்....
பிறகு நீல சுடிதாரில் ஒரு பெண் வந்து நீங்க ரேணுதான ? நான் தான் ரேணுன்னு சொன்னாங்க...!!!:-)

அட இப்பதான இங்க உங்கள கடந்து சென்றேன் . அப்பவே சொல்லிருக்கலாம்ல ?

உங்க குட்டீஸ் பார்த்தவுடனேயே நீங்கதான் ரேணுன்னு நான் கண்டுபுடுச்சுட்டேன்(முன்னமே பார்த்திருப்பதால்) . கொஞ்சம் விளையாடலாம்னுதான் சொல்லலை...:-)

அது சரி :-) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ரேணு சந்திச்சது ...

ஆமாம் ரேணு இன்னும் கனவு மாதிரியே இருக்கு...(திருச்சி ரேணு).

சரி வாங்க முதலில் அவர்களை அறிமுகம் செய்து வைத்துவிட்டு வரலாம் . அப்பதான் நாம ஃப்ரியா பேசமுடியும் .

அட நாங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க அறிமுகமாகி பேசிக்கிட்டு இருக்காங்க... நாங்க அறிமுகம் செய்யலாம்னு இருந்தோம் , நீங்களே பேசியாச்சா ? இவங்க தான் திருச்சில இருந்து வந்திருக்காங்க . என்னோட தோழி ரேணுகா . இது அவங்க கணவர், இது அவங்களோட குட்டீஸ், கோகுல், ராகுல்.

இது என்னோட கணவர், குட்டீஸ் பேரு பிரவின் ராஜா ,ஹரிஷ் ராஜா .
நீங்க பேசிட்டு இருங்க , நாங்க குட்டீஸ்கிட்ட இருக்கோம் . தனியா வந்து குட்டீஸ் நீங்க ஒருத்தரோட ஒருத்தர் நல்ல ஃப்ரெண்டா இருக்கனும் . பார்த்து பத்திரமா விளையாடுங்க . எங்கயாவது போகனும்னா எங்ககிட்ட சொல்லிட்டு போங்க . நாங்க அங்க பேசிட்டு இருக்கோம் ஓகேவா ? இப்படி பல அட்வைஸ் கொடுத்து அவங்கல கண்பார்வைலயே வச்சுட்டு பேச ஆரம்பித்தோம் . ( அனைவருக்கும் கும்பிட்டு வணக்கம் சொல்லியாகிவிட்டது , இனி எங்க வேலைய நாங்க பார்க்கிறோம் . நீங்கலும் வரீங்களா? )

அறுசுவை முதல் அன்றைய தினம் வரை அனைத்து வித விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம் . இதற்கிடையில் குட்டீஸ் ஃபோட்டோஸ் எடுப்பது , குதித்து விளையாடுவது , பந்து விளையாட்டுன்னு பல விஷயங்கள் நடந்தேறின . அவங்களும் நல்லா பழகிட்டாங்க .

என்னவர் வந்து அழைத்தார் , மதியம் சாப்பாட்டு நேரம் ஆகிடுச்சு . சாப்பிடபோகலாம் . இவங்க இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு . நாளைக்கு கிளம்புறாங்கபோலன்னு சொன்னார் . (எவ்வளவு நேரம் பேசினோம்னு எங்களுக்கே தெரியல).

வண்டிகிட்ட வரவரைக்கும் பேசிட்டு வந்தோம் . பல இடங்களில் குட்டீஸ் ஃபோட்டோஸ் எடுத்தாங்க . கோகுல் ரொம்ப அமைதியானவன் , அழகான புகைப்படங்கள் பல எடுத்திருந்தான் .
அவங்க வண்டி ஓட்டுனரிடம் எங்களை ஃபாலோ பண்ண சொல்லிட்டோம் . (நடுவில் ரேணு சொன்னாங்க , இல்லை நாங்க இன்னும் பார்க்க நிறைய இருக்கு பார்த்துட்டு அப்புறமா சாப்டுக்கிறோம்னு , நானும் என்னவரும் அவங்களை விடும் எண்ணமே இல்லை . என்னவர் சொன்னார் , நீங்க முன்னாடியே சொல்லிருந்தா வீட்டுலயே தங்கி சாப்பிட்டிருக்கலாம் . இது எங்க விருந்துன்னு ) .

நீங்களும் எங்களை ஃபாலோ பண்றீங்கதானே....!??

நாங்கள் சென்ற இடம் , ஆமா ரேவ்ஸ் சரிய சொல்லிட்ட" ஊட்டில இருக்க அடையார் ஆனந்தபவன்" ஹோட்டல்க்கு . எங்க க்ரூப்ப பார்த்துட்டு சர்வர் உள்ள அனுப்பிட்டான் .

என்ன கவி என்ன சாப்பிட்டோம்னு கேக்கறீங்களா ?

சொல்றேன் , சொல்றேன்... முதலில் அனைவரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க...

என்ன ஸ்வீட்னு கேக்குறீங்களா இமா ?குலாப்ஜாமூன்...

நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆர்டர் கொடுத்தோம் , சில்லி பரோட்டா , நாண் , பன்னீர் பட்டர் மசாலா , இன்னும் என்ன சொன்னோம்னு நினைவு வரலை... ரேணு நீங்க சொல்லிடுங்க...

ஒருவழியா குட்டீஸ சாப்பிட வச்சோம் . ( ராகுல்க்கு பன்னீர் பட்டர் மசாலா ரொம்ப பிடித்திருந்தது ).

இதனிடையில் ஊட்டியில் " தண்டர் வல்டு " ஜுராஸிக் பார்க் மாதிரி இருக்கும் . அதில் கேமரா மியூஸியம் , முடிவில்லா ஒளி விளையாட்டு , 5D தியேட்டர் , திக் ஃபாரஸ்ட் ரைடு , பூத் பங்ளோ, பிறகு குட்டீஸ்க்கான ராட்டிணங்கள் , டைனோசர் ரைடு , இந்தியாவின் மிக அரிதான மற்றும் பெரிய இடங்கள் இப்படி நிறைய இருக்கும் . அந்த இடம் இன்னும் பார்க்கவில்லைன்னு சொன்னாங்க . இப்ப நேராக அங்கே குட்டீஸ் கூட்டிட்டு போகிறோம்னு சொன்னாங்க.

அம்மா நாமும் அங்க இவஙளோட போகிறோமா ? (பிரவின்)

எனக்கும் ஆசைதான்டா ஆனால் அப்பாக்கு மீட்டிங் இருக்கு . அதனால போகலை.

அங்கே ரேணுவின் காதை ராகுல் , கோகுல் இருவரும் கடிக்கின்றனர் . என்னவென்று கேட்டால் இவங்களையும் நம்மகூட வர சொல்லுங்கன்னு கேக்கறாங்கலாம் .

நிலைமையை சொல்லி புரியவைத்து விட்டு கிளம்பத் தயாரானோம் . எங்கள் இருவரின் கண்களில் மறைக்கப்பட்ட கண்ணீர் ரேணுவின் குட்டீஸ் கண்களில் வெளிவந்தது . நிஜமாகவே மனது கலங்கிடுச்சுங்க . என்னவரின் சமாதானத்தால் கொஞ்சம் அமைதியாகினர் .

"பிறகு இருவரின் வண்டிகளும் ,
இரு வேறு திசையில் பயணிக்கத்துவங்கின...
மனங்கள் மட்டும் - எதிர்
எதிர் திசையில்...:-(
சந்திப்பில் உண்டான மகிழ்ச்சியை
ஏற்றுக்கொண்ட மனதிற்குத்
தெரியவில்லை - பிரிவினால்
ஏற்படும் வலியை மறைக்க...
ஆனாலும் மகிழ்ச்சியே....
அடுத்த சந்திப்பின் பிறகு
அடுத்த பயணம் தொடரும்....
எங்களோடு பயணித்து - மகிழ்ந்த
அனைவருக்கும் நன்றிகள்...."

-ரேணு

Average: 5 (2 votes)

Comments

ஒருவழியா ரேணுவும் ரேணுவும் சந்திச்சுட்டீங்க. குட்டீஸ் அழுத போது என் கண்களும் வேர்த்திடுச்சு. அறுசுவைதோழிகளின் சந்திப்பு எப்போதுமே ரொம்ப ஸ்பெஷல்தான். எல்லோரையும் சந்திக்கும் ஆவல் அதிகமாகிறது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சந்தோஷமா சந்திச்சுட்டீங்க. :-)

இணையத்தில் தினமும் எத்தனையோ பேருடன் நட்பு பாராட்டுகிறோம்.. நேரில் சந்திக்க அமைவது... பெரிய பாக்கியம். ஒவ்வொருவருக்கு ஆயிரம் வேலைகள். அவற்றுக்கு மத்தியில் இரண்டு குடும்பத்தாரும் சந்தித்துக் கொண்டது சிறப்பான விஷயம். உங்கள் இரு குடும்பத்தார் நட்பும் என்றும் தொடர வேண்டும். என் வாழ்த்துக்கள்.

குலாப்ஜாமூன்! யம்ம்ம்! :-)

‍- இமா க்றிஸ்

நிஜம்தான்பா ரொம்ப சங்கடமா இருந்தது.

உண்மைதான் இமா. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல....ஜாமூன் நல்லாயிருந்ததா?

அப்பாடா ஒரு வழியா சந்திச்சாச்சு. எனக்கும் நம் அறுசுவை தோழிகள் சிலரை சந்திச்ச நியாபகம் வருது.

Be simple be sample

மறக்க முடியாத நாள் ரேணு பார்க்க முடியுமான்னு முதல்ல மலைப்பா இருந்துச்சு, பார்க்கறவங்களையெல்லாம் நீங்களா இருக்குமான்னு தேடினத நினைச்சா சிரிப்பு தான் வருது. ராகுல் தான் உங்களை விட மாட்டேன்னு ஓரே அழுகை. கடைசி ஆக ஆக தான் பிள்ளைங்க நல்லா விளையாட ஆரம்பிச்சாங்க. பிரிய மனமில்லாமல் பிரிஞ்சோம். திருச்சி வாங்க அடுத்த மீட்டிங் எங்க வீட்ல தான்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேவ்ஸ்,
///எனக்கும் நம் அறுசுவை தோழிகள் சிலரை சந்திச்ச நியாபகம் வருது./// அப்போ அதைப்பத்தின அனுபவம் சொல்லலாம்ல.

/// ராகுல் தான் உங்களை விட மாட்டேன்னு ஓரே அழுகை. கடைசி ஆக ஆக தான் பிள்ளைங்க நல்லா விளையாட ஆரம்பிச்சாங்க.///ஆமாம் ரேணு . ///திருச்சி வாங்க அடுத்த மீட்டிங் எங்க வீட்ல தான்.///கண்டிப்பா அங்க வரும்போது சந்திக்கலாம் . நம் சந்திப்பில் ஏதேனும் விடுபட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ரேணு .